பழுத்த வெற்றிலையும், கிழட்டு அம்மான் பாட்டனும்
கிழமும் முதிர்ந்து பழுத்து விட்டவர் - அவர் தினம்
விழுங்கும் வெற்றிலையும் மிகப் பழுத்து விட்டவை.
வெற்றிலைப் பையில் நிறைந்து இருக்கும் - கற்றை
வெற்றிலைகள் அனைத்து விதமான நிறங்களிலும்
மஞ்சள் நிற வெற்றிலைகளை எடுப்பார் அவர்;
அஞ்சாமல் விரும்பிச் சுவைப்பர் அவற்றை தினம்.
மற்ற வெற்றிலைகள் வேறு வேறு பச்சை நிறங்களில்!
மறு நாள் தயாராகி இருக்கும் மஞ்சள் வெற்றிலைகள்!
ஒரு நாள், ஒரே ஒரு நாள், பழுத்ததைக் களைந்து விட்டால்
ஒரு நாள் போலச் சுவைக்கலாம் பச்சை வெற்றிலைகளை!
ஆனால் அம்மான் பாட்டனாவது வெற்றிலை வீசுவதாவது?
போனால் வராது என்பது போலத் தான் காப்பாற்றுவதை?
இங்கும் சிலர் இருக்கின்றார்கள் சில விந்தை மனிதர்கள்
இன்றும் புதிய உணவை உண்பதற்கு விரும்பாதவர்கள்.
தினமும் சமைத்துக் கொடுத்தாலும் அதை பழையதாக்கி
மனம் விரும்பி உண்பவர்கள் - தினம் தினம் எந்த நாளும்!
பழைய வீணை /மத்தள ஆசிரியர் நினைவுக்கு வருகின்றார்!
பழங் குழம்பின் சுவையைப் போற்றியவர் அந்த மா மனிதர்!! :thumb: