[h=1]உன்னை அறிவாய்[/h][h=1][/h]
உன்னை அறிந்தால், நீ உலகுக்கு அஞ்சவேண்டாம்.
உண்மையே பேசினால், மன உறுத்தல் வேண்டாம்.
தன்னை அறிந்தவன், மனத்துயர் அடைவதில்லை.
தன்னையே எண்ணித் இராத்துயில் இழப்பதில்லை.
நன்மையை விதைத்தால், நன்மையே விளைந்திடும்.
நம் நலம் விழைவோரை, நாம் நம்பிட வேண்டும்.
எய்தவன் இருக்க வெறும் அம்பை நோவதுபோல,
பொய் ஆகக் பிறர்மேல் கோபம் கொள்ள வேண்டாம்.
நல்லதை அன்றி அல்லதை எதிர்கொண்டாலும்,
அல்லல் பட்டு மனம் சற்றும் உழல வேண்டாம்.
நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நம்பி,
குடமாடும் கோவிந்தன் தாள் சரண் புகுவோம்.
நடமாடும் தெய்வம் அவன், நாடகமும் ஆடுவான்.
திடமாக நம்புவோர்க்கு, அவன் தன்னையே தருவான்.
வாழ்க வளமுடன்.
விசாலாக்ஷி ரமணி
https://visalramani.wordpress.com/about/உலகமும்-நாமும்/உன்னை-நீ-அறிவாய்/