ஆகாசம், ஆத்மா.
ஆகாசம் பரவியுள்ளது அண்டங்களிலெல்லாம்!
ஆத்மா விரவியுள்ளது உடல்களிலெல்லாம்!
உடலின் உள்ளேயும் உள்ளது ஒரு ஆகாசம்!
உடலில் உள்ளது அற்புத சிதாகாசம் ஆகும்!
ஆகாசமும், ஆத்மாவும் ஒப்பானவை;
ஆராய்ந்து பார்த்திட்டால் அற்புதமே!
எங்கும் நிறைந்தவை இவை இரண்டுமே;
என்றும் இருப்பவை இவை இரண்டுமே.
என்றும் அழியாதவை இவை இரண்டுமே;
என்றும் மாறாதவை இவை இரண்டுமே.
நிர்மலமானவை இவை இரண்டுமே;
நிறங்கள் இல்லாதவை இவை இரண்டுமே;
எதிலும் ஒட்டாதவை இவை இரண்டுமே;
எதுவும் ஒட்டாது இவை இரண்டிலுமே.
புறமும், அகமும் எல்லாவற்றிலும்,
நிறைந்திருப்பவை இவை இரண்டுமே.
நுண்ணியவை இவை இரண்டுமே;
நுகர முடியதவை இவை இரண்டுமே.
பார்க்க, கேட்க, முகர, எடுக்க,
சுவைக்க முடியாது இரண்டையுமே.
ஆகாசம் இன்றி அண்டங்களே இல்லை;
ஆத்மா இன்றி உயிரினங்களே இல்லை.
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
https://visalramani.wordpress.com/about/தலைவனும்-நாமும்/ஆகாசமும்-ஆத்மாவும்/