தோல் இருக்கப் பழம் விழுங்கி!
வேலைக்காரனை நியமிக்க வேண்டி,
வேலை ஒன்றைக் கொடுத்தார் அவர்.
"கூடையில் நூறு முறுக்குகள் உள்ளன.
நடையாகச் சென்று கொடுக்க வேண்டும்
அடுத்த ஊரில் இருக்கும் நண்பருக்கு!
அடையாளமாக ஒரு ரசீதும் வேண்டும்!"
இருவரை மட்டும் சோதித்தார் அவர்
இருவரில் எவன் சிறந்தவன் என்று!
முதலாமவனுக்கு வழியில் நல்ல பசி!
முன்னெச்சரிக்கையாகத் தரவில்லை
வழியில் உண்ண உணவு எதுவும் - வேறு
வழி தெரியாமல் உண்டு விட்டான் அவன்
கூடையிலிருந்து பத்து முறுக்குகளை.
கிடைத்தது ரசீது வெறும் தொண்ணூறுக்கு!
இரண்டாமவன் மிகவும் தந்திரசாலி.
இரண்டு பிரச்சனைகளையும் ஒருங்கே
சமாளித்தும் விட்டான், ரசீது சரியாக
சமர்ப்பித்து வேலையில் சேர்ந்தான்!
என்ன செய்தான் அவன்???
கணக்குக்கும் நூறு முறுக்கு வேண்டும்;
'கணகண'க்கும் பசியும் தீர வேண்டும்!
ஒவ்வொரு முறுக்கிலிருந்தும் கவனமாக
ஒவ்வவொரு வரியை உடைத்து எடுத்தான்;
நூறு பெரிய முறுக்கு வரிகளை உண்டான்!
நூறு முறுக்குக்கு ரசீதும் கொண்டு தந்தான்!
தோலிருக்கப் பழம் விழுங்கி இவன் தானோ?
அன்றைய கதை இது தெரியும் !
இன்றைய கதை எது தெரியுமா?
A.T.M இல் நான்கு லக்ஷம் காணோம்!
பத்து நோட்டுக்கு ஒரு நோட்டு என்று,
பக்குவமாக உருவியுள்ளான் ஒருவன்!
'பண்டில்' கணக்கு சரியாக இருக்கும்!
கண்டு பிடிக்கவும் முடியாது, ஹையா !!!
moral of the story :-
வேலைக்காரன் அறிவாளியாக
இருக்க வேண்டியது அவசியம்.
வேலைக்காரன் தந்திரசாலியாக
இருக்கவேண்டியது அனாவசியம்!