malarum ninaivugaL....
# 6. CITIZENS OF THE WORLD
Honeymoon !
இத்தனை ஆண்டுகள் பொறுமையாகக்
காத்திருந்தவர்கள் என்ன செய்வார்கள்?
"விட்டால் போதும் என்று கிளம்பி இருப்பார்கள்
எட்டாத தூரத்துக்கு ஹனிமூன்!" என்று எண்ணாதீர்!
இவர்கள் ஹனிமூன் ரொம்பவும் வித்தியாசமானது!
இவர்கள் டிஸ்னிலேன்ட் அழைத்துச் சென்றனர் பிறரை!
மொத்தம் ஒன்பது பேர் ( அவள் குடும்பம் + நாங்கள்)!
எத்தனை செலவாயிற்றோ இதுவரை தெரியாது!
கல்யாணச் செலவு முடிவதற்குள் வந்து விட்டது
கல்யாண பார்ட்டியின் இந்த ஹனிமூன் செலவு!
டாலரைத் தண்ணீர் போலச் செலவழித்தான்!
எல்லோரையும் அரவணைத்தான் என் மகன்!
எங்கு அவனுடன் சென்றாலும் கவலை இல்லை!
எங்கும் உள்ளனர் நல்ல நண்பர்கள் அவனுக்கு!
தங்கும் இடம் பிரச்சனையே இல்லை அவனுக்கு!
"இங்கே வா!" என்று அழைப்பார்கள் எல்லோருமே!
இதுவரை நாங்கள் ஹோட்டலில் தங்கியது
நயாகரா, Grand Canyon & டிஸ்னிலாந்தில் மட்டுமே!
Truly a citizen of the world, my father would be very proud of! :thumb: