malarum ninaivygaL...
# 7. CITIZENS OF THE WORLD.
என் அம்மாவும், என் மருமகளும்!
மகனும், மருமகளும் வந்திருந்தனர்
முதல் முறையாக இந்தியா 2006 இல்.
வரும் போதே அவளுக்கு இருந்தது
வைரல் ஃ பீவர் மிகவும் கடுமையாக.
நண்பர்கள், உறவினர்களுடன் அவள்
நல்ல முறையில் நட்புடன் பழகினாள்.
அம்மாவும், அவளும் சந்திக்கும் போது...!
அடிவயிற்றில் ஐஸ்கட்டியுடன் இருந்தேன்!
அம்மாவுக்கு expressive face and language!
அனைத்துமே ஆணித்தரமாக வெளிவரும்!
அவர்கள் சந்தித்தபோது Anti-climax ஆயிற்று!
இவள்" பாட்டி! பாட்டி!" என்று ஒட்டிக் கொள்ளவும், :hug:
அம்மா தன் சின்ன வயது Burma adventure களை
அடுக்க, ஒரே கோலாஹலம் தான் அன்று! :thumb:
ஒரு நிமிடம் பேசினாலே இருமும் அம்மா
ஒன்பது மணி நேரம் பேசி இருக்கின்றார் அன்று!
இன்னமும் பேசி இருப்பார் ஊர்க் கதைகள்!
பின்னர் தூங்கும் நேரம் ஆகி விட்டது!
என்அம்மாவின் பெயர் என் அருமை மருமகள்
ஆசையாய் வைத்தது, "Naughty Patti!" 
இது எப்படி இருக்கு??? :laugh: