malarum ninaivugaL...
# 1.குட்டிப் பாப்பா!
அம்மாவின் முன்புறம் அவள் ஒரு சிறு
கங்காரு போல நன்கு கட்டப்பட்டிருந்தாள்!
எங்களைக் கண்டதும் சிரிக்கவில்லை;
கண்களை மட்டும் உருட்டி விழித்தாள்!
'அந்தப் பாட்டி'யின் வீட்டில் இருந்த நாட்களில்
எங்களைப் பார்க்காததால் மறந்து போனாளோ?
வீட்டைச் சென்று அடையும் வரை பேசவில்லை!
வீட்டில் நுழைந்ததும், "தாத்தாஸ் & பாட்டிஸ் ஹவுஸ்!"
மூவரும் இரவு ஒரு மணிக்கு குளித்து விட்டு
'மடியாகத் தூங்கப்போனார்கள்' அவர்களறைக்கு!
காலையில் ஆறு மணிக்கு அலாரம் போல கேட்டது
"தாத்தா! பாட்டி!" என்ற அழகான மழலைத் தமிழ்க் குரல்!
அப்பா அம்மாவைத் தூங்க விடவில்லை அவள்.
அப்போதே வெளியில் வரவேண்டுமாம் விளையாட.
'குஷ்பு இட்லி' செய்துவிட்டு anxious ஆக இருந்தேன்!
'குழந்தைக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ?' என்று!
சட்னியைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டாள்!
வெறும் சட்னி அல்ல. SPICY சட்னி வேண்டுமாம்!
அடுத்த நாள் புது முயற்சியாக உப்பு அப்பம்.
அதற்கு அவள் பெயரிட்டாள் CRACKERS என்று!
P.S:
Anything 'muru muru' is a cracker! 