malarum ninaivugaL...
# 2. குட்டிப் பாப்பா!
தோசை ரொம்பப் பிடித்து விட்டது அவளுக்கு.
தோசையை உடைத்தால் சப்தம் வரவேண்டும்!
அதற்கும் cracker என்று நாமகரணம் ஆயிற்று!
அதன் பின் செய்த உப்புமாவும் டபுள் O.K. ஆயிற்று!
மிகவும் பிடித்தது vegetable அணில் சேவை.
மிக நல்ல பெயர் "oodles" என்று வைத்தாள் அதற்கு.
வாங்கி வைத்த ketchup, ஜாம் எதுவுமே தொடவில்லை.
Spicy சட்னி அல்லது தோசை மிளகாய்ப் பொடி போதும்!
Vegan களை பராமரிப்பதே இங்கு சற்று கடினம்!
Organic vegan ஆனால்...? சிந்தியுங்கள் கொஞ்சம்!
எங்கோ சென்று organic vegetables வாங்கி வருவார்.
பார்த்துப் பார்த்து செய்யாவிட்டால் அழுகிப் போய்விடும்!
வீட்டில் ஒட்டி இருந்த ஸ்டிக்கர் கோலம் பிடித்து விட்டது.
தினமும் 'லம்' மில் தரையில் அமர்ந்து உணவு உண்பாள்.
வெட்டிங் போட்டோக்களைப் பார்த்ததும் கண்கள் மின்ன
"daddy mummy!" "சித்தப்பா! சித்தி!" என்று கொண்டாட்டம்!
Cousin தம்பியின் போட்டோவைக் கட்டிக் கொண்டு
வீடெல்லாம் நடந்தாள். அவனுக்குப் பாட்டுப் பாடினாள்.
வாஸ்துவுக்காகச் சிறிய தாமரை மலர் வடிவத்தில் அமைத்த
அழகிய opening வழியாக அடுத்த அறைக்குப் பேசினாள்.