[FONT="]malarum ninaivugaL....
# 3. குட்டிப் பாப்பா![/FONT]
[FONT="]"பா" வர்கத்திலேயே அதிக வார்த்தைகள் பேசினாள்!
பாப்பா, pee, poop, இவை எல்லோரும் சொல்லுவது.
"pow! pow!" என்றால் "தூக்கி! தூக்கி!" பண்ண வேண்டுமாம்!
"poi! poi!" என்றால் "உம்மாச்சி கும்பிட வேண்டுமாம்".
சரியான பக்திமான் தான்! சாமி அலமாரியில் திரிசமன்!
முதல் நாள் கற்பூர ஆரத்தி எடுக்கும் போது சொன்னது,
"வாவ்! பாட்டி இஸ் ஸோ கூல்!" இது எப்படி இருக்கு?
அடுத்த நாள் ஆரத்தித் தட்டையே பற்ற வைக்க முயன்றாள்!
கற்பூரத்தையும் பற்ற வைத்து இருத்தால் பிரச்சனை தான்!
கற்பூரம் வைத்ததை நன்கு கவனிக்காததும் நல்லதற்கே!
அடுத்த வீட்டு அக்காமார்களையும் ஆன்டிகளையும்
அடிக்கடி அழைத்தாள் ஜன்னல்கள் வழியாக விளையாட!
தாத்தாவின் நண்பர்களுக்கு நம்பர் அல்லாட் செய்தாள்.
தாத்தா2, தாத்தா3, தாத்தா4 என்று. தாத்தா என்றால் இவர்.
விளையாட ரொம்பவும் பிடித்தது சப்பல் ஸ்டாண்ட் தான்!
தொடும் போதெல்லாம் கையை அலம்பி விடுவார்களே!
தஞ்சாவூர் பொம்மை போல மேலே எழும்பி வரும் air doll !
முதல் நாள் பயந்து விட்டாள்! அது அவளை விடவும் உயரம்.
அடுத்த நாள் அதைக் கீழே தள்ளி அதன் முதுகில் ஏறி சவாரி!
Horsey! Horsey! என்று அதன் காதுகளைப் பிடித்துக் கொண்டு குதியாட்டம்!
[/FONT]