malarum ninaivugaL...
# 4. குட்டிப் பாப்பா!
சமைப்பதைப் பார்க்க மிகவும் பிடிக்கும் குழந்தைக்கு!
"circle circle " என்பாள் வட்ட தோசை சுடும் போது.
கிரைண்டரில் மாவு அரையும் போது "ஸ்பின்! ஸ்பின்!"
குழந்தைகள் எத்தனை எளிதாகக் கற்றுக் கொள்கிறார்கள்!
பூக்கார பேபிக்கு இந்த பேபியைப் பிடித்து விட்டது! தினம் தினம்
பூவைக் கொடுத்துக் கண்ணனின் பழக்காரியை நினைவூட்டினாள்!
மாஸ்டர் தந்த வெள்ளி தம்பளரில் காபி தரச் சொன்னாள்!
WordPress homepage எடுத்த போதெல்லாம் "பாட்டி போட்டோ!"
தினமும் beads curtain னுடைய வலிமையைச் சோதித்தாள் !
தினமும் ஒரு புது பிராக் போட்டுக் கொண்டு கொண்டாடினாள்!
Inverter switch களை அணைத்து விட்டு வீடு இருட்டானதும்
"யே" என்று கூவி கைகளைத் தட்டி மகிழ்ச்சி அடைந்தாள்.
Dining table அருகில் மாட்டியுள்ள கண்ணாடியில் பார்த்துக் கொண்டு
தன்னைத் தானே (சிட்டுக் குருவி செய்வது போலக்) கொஞ்சினாள்!
பிடித்த விளையாட்டு பாயைச் சுற்றுவதும் விரிப்பதும்!
நடக்கும் போதெல்லாம் வீணைத் தந்திகளை மீட்டினாள்.
பள்ளி செல்லத் தயார் ஆகிவிட்டாள்! டிபன் பாக்ஸ் ரெடி!
வந்தவர்களுக்கு எல்லாம் அதை எடுத்துக் காட்டினாள்.
தினமும் தவறாமல் நிறைய விபூதி இட்டுக் கொண்டாள்!
தினமும் திருஷ்டி கழிக்க வேண்டி இருந்தது குழந்தைக்கு.