சிந்தையில் நின்ற விந்தை மனிதர்கள்!
# 2. Brave, Bold and Beautiful!
ஏதோ மலைப் பாதையில்
தோதாக நாங்கள் ஏறிச்
செல்லும் போது பார்த்தேன்,
செல்லும் அந்தப் பெண்ணை.
காற்றில் உடைகள் பறந்தன.
மெல்லிய வெள்ளை top பின்
கை ஒன்று மட்டும் உயரப் பறந்தது!
கை என்ற ஒன்று அதனுள் இல்லை! :shocked:
என் முகத்தில் வெளிப்பட்டு விட்ட து
எனக்கு ஏற்பட்ட அந்த அதிர்ச்சி.
அவள் கண்களைக் சிமிட்டி விட்டு,
அவளின் இன்னொரு கையை
உயர்த்தி ஆட்டிவிட்டு, எனக்கு
"thumbs up " சைகை காட்டினாள்! :thumb:
எதுவுமே குறை இல்லாது போல்
எதிர்திசையில் சென்று விட்டாள்!
இல்லாத குறைகளை, முயன்று
கற்பனை செய்து வருந்துகின்ற, 
அற்ப மனிதர்கள் இடையே
அற்புத வலிமை கொண்டுள்ள :high5:
இவள் என்றும், எவராலும், எங்கும்,
இம்மியளவும் துன்பம் அடையாள்! :clap2: