சிந்தையில் நின்ற விந்தை மனிதர்கள்!
# 5. Everyday performers!
தினமும் அங்கு பார்ப்போம்
அனேக விதமான அற்புதங்கள்!
மூன்று பேர் ஓட்டும் சைக்கிள்!
படுத்துக் கொண்டே ஓட்டுவது!
மொத்தக் குடும்பமும் செல்வதற்கு!
நிழற்குடை ஒன்று நிறுவப்பட்டது! :flock:
நான்கு சக்கரங்கள் கொண்ட
Roller skaters out of fashion! :nono:
இப்போது பழக்கத்தில் உள்ளது
இரண்டு சக்கரங்கள் roller blades!
சாதாரண boot டிலேயே இப்போது
சின்னச் சக்கரம் ஒன்று குதிகாலில்.
என்னமாகச் சறுக்குகின்றார்கள்
சின்னக் குழந்தைகளும் பெரியவரும்!
சாலையில் figure skating போலவே
செமை ஸ்பீடில் பின்புறம் செல்பவர்!
கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டு
முன்னுக்குச் செல்வதே மிகக் கடினம்!
கண் காணாத இடத்துக்கு சிறிதும்
கவலையே இன்றிச் செல்வதெப்படி!
கண்கள் விரிய வேடிக்கை பார்ப்போம்!
பற்கள் தெரியச் சிரித்து மகிழுவார்கள்! 
ஏர்போர்ட்டில் ஒரு குட்டி fellow!
Wheel suitcase அவன் முன்புறம்,
மடித்த கால் ஒன்று அவன் பின்புறம்!
அத்தனை பெரிய ஹாலில் skating!
ஒத்தைச் சக்கர ஷூவை அணிந்து!
இன்றைக்கும் மறக்கமுடியவில்லை!
அன்றைக்கு அவன் சென்ற அழகை! :clap2: