சிந்தையில் நின்ற விந்தை மனிதர்கள்!
# 6. Jolly days and Holidays!
பள்ளியில் படிக்கும் போது என்
கள்ளக் குட்டிக் கிருஷ்ணன்
விந்தை ஒன்றைச் செய்வான்...
சிந்தித்தால் சிரித்து விடுவோம்!
விடுமுறை நாட்களில் எழுவான்
விடிவதற்கு மிகவும் முன்னமே!
இரவு தூங்குவதும் லேட்டாக...
பெரிய மனிதர்களைப் போலேவே!
"எல்லோரும் லீவு நாள் தூங்குவர்
வழக்கத்தை விடவும் அதிகமாக!
நீ மாற்றிச் செய்கின்றாயே!" என்றால்
அவன் சொல்லுவது இது தான்!
"Holidays are always jolly days!
So they must also be longer days!"
இப்படி இருபுறமும் நீட்டி நாளை
எப்படியும் 4 மணி அதிகரிப்பான்!
அடுத்த நாள் சிவந்த கண்களுடன்!
ஆனால் அது வேறு கதை அல்லவா!
இன்று அவன் இரு மகன்களும் செய்கின்றார்கள்
அன்று அவன் சிறு வயதில் செய்த அதே விந்தை
கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டு இருக்கிறார்கள்
நட்ட நடு நிசி வரையில் 'ஜஸ்ட் ஃபோர் the fun of it!'
அப்பாவும் அம்மாவும் பி.சி.யில் வேலை செய்கிறார்கள்
இவர்கள் பி.சி. யில் கேம்ஸ் விளையாடுகிறார்கள்.
லீவு முடிந்து ஸ்கூல் திறந்தவுடன் மீண்டும் old schedule
எட்டு மணிக்குத் தூக்கம்! காலை ஆறு மணிக்கு விழிப்பு!