பாட்டும், பாப்பாவும்!
குட்டிப் பாப்பா பாட்டுப் பாடினாள்!
கட்டிச் சர்க்கரை போலவே இனிப்பாக!
வார்த்தைகள் தான் விளங்கவில்லை!
வார்த்தைகள் தாம் எதற்கு தேனுக்கு?
வழிநெடுக பாடிக்கொண்டு வந்தவள்
வழியாகப் பாடுவது நம் Skype Chat! :ranger:
குட்டிப் பாப்பா பாடுவது அவளாகவே
'இட்டுக் கட்டி' என்று தெரிந்துவிட்டது! :sing:
'பாட்டி'யும், 'தாத்தா'வும் வேறு எந்தப்
பாட்டில் வருவார்கள் என்று கூறுங்கள்! :noidea:
தானே 'எழுதி', 'இசை அமைத்து'ப் பாடும்
மானின் எதிர்க்காலம் ஒளிவீசிட வேண்டும்!
ray:
குட்டித்தம்பியும் கூடச் சேர்ந்து கொண்டுவிட்டான்
பாட்டை இட்டுக் கட்டிப் பாடுவதில் அக்காவுடன்.
டிஸ்னி வேர்ல்ட் போன போது வழி நெடுகப்
இடைவேளை இல்லாத பாட்டுக்கு கச்சேரி.
இள வயதில் நாங்கள் காரில் போகும் போது
வழி நெடுகப் பாடிக் கொண்டே போவோம்!
More things run in families than the world is willing to give credit for! :bump2: