சிந்தையில் நின்ற விந்தை மனிதர்கள்!
# 8. Visit to a Planetarium.
சின்னவனுடன் அந்தப் Planetarium!
மிகவும் பெரியது I max வசதியுடன்.
காத்திருக்கும் போது பார்த்தேன்,
அத்தனை கண்களும் எங்கள் மீதே!
ஆணி அடித்தது போல பதிந்திருந்தது
ஏனென்று விளங்கவில்லை எனக்கு!
புடவை அணிந்திருந்ததாலா அல்லது
நம் நிறம் மாறுபட்டு இருந்ததாலா?
பிறகு அங்கே இருந்தவர்களைப்
பார்த்தவுடன் தெரிந்தது தெளிவாக,
எதில் நாங்கள் மாறுபட்டிருந்தோம்
எதனால் அந்தப் பார்வைகள் என்று!
வந்திருந்த அனைவரும் ஜோடிகள்
காதலர்கள், தம்பதிகள், கிழ ஜோடிகள்!
இரண்டு ஆண் நண்பர்கள்!
இரண்டு பெண் நண்பர்கள்!
மருந்துக்குக் கூட காணவில்லை
இரண்டு வேறு தலைமுறையினர்!
பார்வையில் அசூயை இல்லை!
Admiration, ஆதங்கம் இருந்தது!
Family values தப்பிப் பிழைத்து
Feeble ஆகவேனும் இருப்பது
இன்னமும் உலகம் முழுவதிலும்
அன்னை பாரதத்தில் மட்டும் தானே! :thumb:
Walgreens சென்றோம் மருத்து வாங்குவதற்கு பாட்டி, மகன், மருமகள், 2 வால்ப் பையன்கள்
செல்பவர்கள் எல்லோரும் நட்புடன் புன்னகைத்தார்கள்
சிலர் "We like your lovely family" என்றும் கூறினார்கள்
இரண்டு தலைமுறைகள் சேர்வதே இங்கு அதிசயம்
மூன்று தலைமுறைகள் சேருவது non-white மட்டுமே