Care of the Crossroads?
San Fransisco நகரத்தின் பிசியான
சௌராஸ்தா அல்லது நாற்சந்தி!
உலகிலேயே உள்ள மிகவும்
வளைந்த சாலை LOMBARD வீதி!
போட்டோ பைத்தியம் இவருக்கு!
செடி, கொடி, மரம், மட்டை என
அடுத்து நின்று கொண்டு புகைப்படம்
எடுத்துக் கொள்வதில் சூரப் புலி !
hoto:
சாலையைப் பார்த்த உடனேயே
சப்த நாடியும் ஒடுங்கியது எனக்கு!
நானாவது இந்தச் சாலையில்
நடந்து செல்வதாவது? ஊஹூம்! :scared:
"இங்கேயே அமர்ந்திருங்கள் மம்மி!
இப்போதே வந்து விடுவோம்!"
"அரை மணியில் வருவீர்களா?"
"ஐந்து நிமிடங்களில் வருவோம்!"
சுத்தமாக இருந்த குட்டிச் சுவரில்(?)
சத்தம் இல்லாமல் அமர்ந்தேன்!
செமை டிராபிக் உள்ள இடம் / நாள்!
சென்றவர்கள் கண்களில் கேள்விக்குறி?
"யார் இவள்....? யார் இந்தப் பெண்? :suspicious:
எதற்கு இங்கு அமர்ந்து உள்ளாள்?
யாருக்காக காத்திருக்கின்றாள்?
பார்த்தால் 'அந்தப் பெண்' போல இல்லை!
தொலைந்து போனவளுமில்லை!
அமைதியாக அமர்ந்துள்ளாளே!
கைவிடப் பட்ட கேசும் இல்லை!
கண்ணீர் மழை சொரியவில்லையே!
ஒரு யோகி போல, ஒரு துறவி போல,
இந்தச் சந்தியில், இந்தச் சந்தடியில்,
இருந்தும் இல்லாதவள் போல,
தனித்து இருக்கும் இவள் யார்?"
கடப்பவர்களின் நினைப்புகளைச்
சொற்கள் போலவே உணர்ந்தேன்!
கண்களைத் திறந்தபடியே தியானம்!
சுற்றுப்புறத்திலிருந்து முழுத் தனிமை!
இவர்கள் கதையோ வேறு ஒரு வகை!
இராமாயணக் காட்சியைப் போன்றது!
ராமனை ஏய்த்து அழைத்துச் சென்ற
மாயாவி மான் ஆகி விட்டார் இவர்.
"இங்கே ஒன்று! அங்கே ஒன்று!"
இவர்கள் புகைப் படங்கள் எடுத்துத்
திரும்பி வருவதற்கு ஆகிவிட்டது
இரண்டு மணி நேரத்துக்கும் அதிகம்!
"சாரி! சாரி!" என்றவாறு வந்தார்கள்!
" சரி! சரி!" என்றேன் என்றாலும்,
என் மனதில் ஒரு வினோத எண்ணம்
எழுவதைத் தவிர்க்க முடியவில்லை!
"I am homeless!" என அமர்ந்திருந்தால்
Return fare சம்பாதித்து இருப்பேனா ?
அல்லது காவல்துறையின் சிறப்பு
உபசரிப்பில் இருந்திருப்பேனா ? :noidea: