# 14. Soy Coffee Shop!
வெளியில் போனால் குடிப்போம்
பெரிய giant size soy coffee ஒன்று!
அரை லிட்டர் இருக்கும் அது!
ஒருவரால் குடிக்க முடியாது!:tea:
நான்கு சின்ன பேப்பர் கப்புகளில்
நான்கு பேர் பகிர்ந்து கொள்வோம்!
சில நாட்களில் நண்பிகள் ஆனார்கள்
பல நாட்களாக அங்கு பணி செய்பவர்.
"Brown is beautiful! White skin is sickly!
Brown is beautiful! Black skin is ugly! "
ஒவ்வொரு முறையும் கூறுவார்கள்!
ஒவ்வொன்றாகப் பாராட்டுவார்கள்.
"Look at her eyes! Look at her ear rings!
Lovely straight hair! We love straight hair!"
எனக்குச் ரொம்பச் சிரிப்பு வந்துவிடும்!
"எங்கள் ஊரில் சுருட்டை முடி அழகு!"
இங்கு உள்ளவர்கள் சுருட்டை முடிக்கு
ஏங்குவதை கூறினால் நம்ப மாட்டார்கள்!
தன்னிடம் இல்லாதது தான் நிஜ அழகு!
தன்னிடம் இருப்பது அழகு அல்லவே!
நாங்கள் திரும்பி வந்த பிறகும் கூட
எங்களைப் பற்றி விசாரிப்பார்கள்!
அமெரிக்க ஆண்களும், ஆஃப்ரிக்கன்
அமெரிக்கப் பெண்களும் very friendly!:yo:
எங்கு பார்த்தாலும் greet செய்வார்கள்.
நன்கு உரையாடுவார்கள். மற்றவர்கள் :nono: !