# 16. Full moon at grand canyon.
பகலில் அத்தனை தெரியவில்லை
இரவில் அத்துவானக் காடுதான்! :scared:
கேபினை விட்டு யாரும் வெளியே
கால் வைப்பதே இல்லை இருட்டில்!
அன்று பௌர்ணமி நிலவின் அழகை
நின்று பார்க்கச் சென்றனர் இவர்கள்!
காரில் போகுமாறு சொன்னாலும்
காலால் நடந்தே சென்றனர் மூவரும்!:roll:
நெடு நேரம்ஆகியும் வரவில்லை.
செல் போன் இல்லை. ஆனது என்ன? :fear:
செய்வது அறியாத போது நம்மால்
செய்ய இயன்றது பிரார்த்தனையே!
ray:
ஹனுமான் சாலீசும், கந்த ஷஷ்டியும்,
அனுதினமும் போல உருப்போட்டேன்!
மகன் விரைந்து தனியாக வந்தான்!
மற்றவர்கள் என்ன ஆனார்கள்?
பாதி வழியில் மூச்சிரைக்கவே இவர்,
பாங்காக அங்கேயே அமர்ந்து விட்டார்.
இவருக்குத் துணை பெரிய மருமகள்.
காரை எடுக்கவே மகன் வந்திருந்தான்!
மூவரையும் பார்த்த பிறகு தான் வந்தது
மூச்சு எனக்கு! அனாவசிய டென்ஷன்!
அன்று ஒரு professor ஐக் காணாததால்,
அல்லோல கல்லோலப் பட்டது அங்கு!