#22. A scream in the dark!
அறுவது வயதாகிவிட்டால் கிடைக்கும்
கேட்காமலேயே லோயர் பெர்த்துகள்.
இள வயதுக்காரர்கள் மேல் பெர்த்தில்
செட்டில் ஆகி விடுவர்! நல்லவர்கள்!
சென்னையிலிருந்து திரும்புகின்றோம்,
சாமான்களை வைத்து செட்டில் ஆனோம்.
மேல் பெர்த்தில் இருவர் மாமிச உணவையும்,
மதுப்புட்டியையும் ருசித்துக் கொண்டிருந்தனர்.
அன்றைக்கு பிரதிக்னை செய்தோம் இருவரும்;
"Third Class பயணம் இனிமேல் கிடையாது!"
எதிர் சீட்டில் வெள்ளையும், சொள்ளையுமாக
நல்ல மனிதரும், அவர் Glaxo Baby மனைவியும்!
நடு நிசி! ஆழ்ந்த உறக்கம்! "ஆ" என்று பெண் அலறல்!
சிலீர் என்று ஒரு சப்தம். விளக்கும் அணைந்துவிட்டது!
பொன்னியின் செல்வனின் கிளைமாக்ஸ் சீன்
அங்கேயும் அன்று நடந்தது! கை வசம் torch !
மது புட்டி சரிந்து கீழே வழிந்ததில்
Glaxo பேபி பயந்து பெரிய அலறல்!
புட்டி கீழே விழுந்து உடைந்தது சிலீர் சப்தம்.
கண்ணடித் துண்டுகளும், நாற்றமும்! சிவசிவா!
ஒரு வழியாக மீண்டும் உறங்கினால்,
மணல் மூட்டை கீழே விழுந்த 'THUD' சப்தம்.
என்ன தான் நடந்தது என்று பார்த்ததில்,
மதுப் பிரியனின் அடுத்த Adventure!
ஆறடி உயர பெர்த்தில் இருந்து கீழே "அலேக்!"
மயக்கத்தில் இருந்ததால் உயிர் பிழைத்தான்!
உணர்வுடன் இருந்திருந்தால் போயிருப்பான்!
அதற்குப் பிறகு தூக்கம் "போயே போயிந்தி!!!