# 23. விடாக்கண்டனும்,
கொடாக்கண்டனும்.
"இரவு ஒன்றரைக்கு மணி train!
பெர்த் டோடல் வேஸ்ட் ஆகும்!"
"காலை நீட்டி படுத்துக் கொண்டு
relaxed ஆகப் போவோம் நாம்!"
அடித்துப் பிடித்து ஏறினால், அங்கே
நெடுமால் போல சயனம் பெர்த்தில்.
அதற்கு மேல் பெர்த் காலி தான் !
அதில் உறங்க மாட்டேன் என்றார்!
"என் பெர்த் தான் எனக்கு வேண்டும்!"
எழுப்பும் முயற்சியில் இறங்கினார்.
அது ஆணா அல்லது பெண்ணா?
அசையவே இல்லை சிறிதும்!
முழு Cubicle உம் விழித்தாயிற்று,
நாங்கள் எழுப்பிய ஆளைத் தவிர!
"விட்டுத் தொலையுங்கள்!" என்றால்
விடாக் கண்டனாக மாறினார் இவர்!
கொடக் கண்டனை கடைசியில்
உருட்டிக் கீழே தள்ளினார் இவர்!
அதிக வயதான மாது அவள்!
பாவம் ஆனால் a real hard nut!
அமைதியாகக் கேட்டிருந்தால்
கிடைத்திருக்கும் அதே பெர்த்!
"என்னால் ஏற முடியாது!" என்று அவள்
சொன்னால் கிடைத்திருக்கும் அதே பெர்த்.
கடைசியில் அங்கே, "வாலு போச்சு!
கத்தி வந்தது! டும் டும் டும்!" ஆயிற்று!
"பெர்த் வந்தது! தூக்கம் போச்சு!
டும் டும் டும்!" என்பது போல் ஆனது!