# 25. KIRI KIRI KARNEWALE AAYE HAIN!
( = THE TROUBLE MAKERS HAVE COME!)
ஹைதராபாத் பயணம் ரயிலில்.
மத்தியானம் தொடங்கும் பயணம்.
அவருக்கும் லோயர் பெர்த்
என்னுடையது எதிர் பக்கத்தில்!
"எதிர் எதிர் பக்கத்தில் வேண்டாம்!
அடுத்த அடுத்த சீட்தான் வேண்டும்!"
எத்தனை கேட்டாலும் தருவதில்லை.
அத்தனை ரூல்ஸ் பேசுகின்றார்கள்!
MIDDLE பெர்த் ஆள் TOSSING & TURNING!
MEDDLESOME FELLOW வும் கூடத்தான்!
இருபது மணி நேர நீண்ட நெடிய பயணம்.
இப்போதிருந்தே படுத்துக் கொண்டால்...!
அவரை பெர்த்தை மடக்கச் சொன்னால்,
"மீரு கூட நித்ர போண்டி" என அறிவுரை.
அவள் மகள் அம்மாவிடம் சொல்கிறாள்,
"கிரி கிரி கர்நேவாலே ஆயே ஹைன்!"
"கிரி கிரி நீங்கள் தான் செய்கின்றீர்கள்!
இரவு 9 to காலை 6 வரை தான் பெர்த்!
நோட்டீஸ் ஒட்டி உள்ளார்கள் அங்கே!
படித்துவிட்டு வா! படிக்கத் தெரிந்தால்!"
T.T.R. தலையிட வேண்டி வந்தது
Troublesome travelers in THE trains!
அதற்குப் பிறகு special request எழுதுவோம்
"அடுத்து அடுத்த சீட்ஸ் தான் வேண்டும்!"