# 26. அவர் எங்கே?
விசாகா to சென்னை ரயில் பயணம்.
ஒருமணி முன்பே ஸ்டேஷேனில் ஆஜர்!
வேறு ஒரு ரயில் பிளாட்பாரத்தில்!
விசில் ஊதி அது புறப்படும் நேரம்.
அவசர அவசரமாக ஓடி வந்தார்
அறுபது வயதுப் பெண் ஒருவர்.
படியில் காலை வைத்தார் அவர்!
நொடியில் காணவில்லை எங்கும்!
ரயில் ஓட ஆரம்பித்து விட்டது!
ரயிலை நிறுத்தினார் முழுவதுமாக
ஒரு மகானுபாவன் துணிச்சலுடன்
ஓடுகின்ற ரயில் சங்கிலியை இழுத்து!
அங்கே சென்ற பார்க்கவே அச்சம்!
என்ன கதியில் இருப்பாரோ என்று!
நம்பவே முடியவில்லை இன்னமும்!
பழுதில்லாமல் முழுதாகவே அவர்!
severe ஷாக்கில் நடுங்கிக் கொண்டு!
நான்குபேர் கைகொடுத்துத் தூக்கினர் .
ரயில் பின்னால் வந்தது பிளாட்பாரமுக்கு.
அவர் அதில் செல்ல மறுத்துவிட்டார்!
படியும், பிளாட்பாரமும் ஒட்டியுள்ளன!
அதற்குள் ஆள் விழுந்த மர்மம் என்ன?
ஒரு பெஞ்சில் நடுங்கியபடி அமர்ந்த
அவர் நினவு இன்னமும் பசுமையாக!