# 27. சங்கரியும், கிங்கரியும்!
பிரயாணத்தின் போது முடிந்த அளவு
கலந்த சாதமும், இட்லிகளும் ஓ.கே!
உப்புமா, பொங்கல், பூரி, சப்பாத்தியும்,
உபத்திரவம் இல்லாதவைகள் தாம்.
ஒருமுறை எங்கள் cubicle இல்
ஒரு குடும்பம் உடன் பயணித்தது! :flock:
ஒரு அடி 'விட்டம்' உள்ள தட்டுகள்!
மூன்றடி உயரம் உள்ள டிபன் கேரியர்.
வீட்டில் உண்பது போலவே நிறையச்
சோறு, சாறு, கூர, இத்யாதிகள்.
பெரிய, பெரிய குழியல்களும்!
கிச்சனே இடம் பெயர்ந்திருந்தது!
பிள்ளைகளுக்கும் நல்ல பசி போல! :hungry:
பிள்ளைகளுக்கு உணவைப் "படைத்தாள்!"
அதுவரையிலும் எல்லாம் ஓ.கே தான்!
அதற்குப் பின் என்ன நடந்தது தெரியுமா?
அவர்கள் உண்ட மீதியை ஒட்ட வழித்து
அந்த காரியர் உணவிலேயே போட்டாள்!
நல்லவேளை நாங்கள் சாப்பிட்டிருந்தோம்!
இல்லாவிட்டால் சோறே இறங்கி இராது! :yuck:
மகன் பெயர் லிங்கம்! அவள் பெயர் சங்கரி (?)
"மகானுபாவுலு எந்தரோ உன்னாரு காதா?"
கொம்பு இல்லாமலும், சங்கரி பெயரில்,
நம்மை ஏய்த்துக் கிங்கரிகள் உலவலாம்!