"வேண்டாம்! வேண்டாம்! வேண்டாம்!"
"பிள்ளைகள் பாடு படு ஜாலி" என்பதில் ஐயமில்லை.
பள்ளி செல்ல வேண்டாம்! பாடம் படிக்க வேண்டாம்!
ஹோம் ஒர்க் செய்ய வேண்டாம்! திட்டு வாங்க வேண்டாம்!
ஹோமில் இருந்து ஒர்க் பண்ணும் பெற்றோருடன் ஜாலி !
வெளியில் போகவே வேண்டாம் யாருமே - அதனால்
'பளிச் பளிச்' ஆடைகள் அணிய வேண்டாம் எவருமே!
நெருக்கமாக யாரும் வர போவதில்லை - அதனால்
நிறுத்திவிடலாம் மேக்கப், perfume வகையறாக்கள்!
விருந்தினர்கள் மருந்துக்கும் இல்லை - அதனால்
விருந்து சமைக்க, வேலை செய்ய வேண்டாம்!
வாங்க வேண்டாம் நொறுக்குத் தீனி - அதை உண்டு
வீங்க வேண்டாம் உடல் - ஒரிஜினல் உரு மாறியதால்!
கல்யாணம் ஆகிவிட்டது ... ஃ ஜூம் ஃ ஜூம் கல்யாணம்!
கலகலப்பான உரையாடல்கள் இன்டர்நெட்டின் உபயம்!
எத்தனை உறவினர்கள் உள்ளனர் என்பதை அறிந்து,
அத்தனை குழுக்கள் உருவாக்கி, அளவளாவும் மகிழ்ச்சி!
'காணாவிட்டால் காய்ச்சல்! கண்டால் பாய்ச்சல் உறவுகள்'
காணாததைக் கண்டது போல் பாசமழை பொழிகின்றன!
வேலை போனவர் ஆனார் ....காய்கறி வியாபாரியாக!
வேளா வேளைக்கு உண்ண வேண்டுமே அனைவரும்!
விசனப்பபடுபவர்கள்? கல்லுக் கல்லான நகைகளையும்,
வித விதமான உடைகளையும் அணிய முடியாதவர்கள்!
விரும்பிப் பெண்கள் இவற்றை அணிவது எதற்காக?
இல்லாதவர்கள் இவர்களைப் பார்த்து ஏங்குவதற்காக!
சமரசம் செய்துவிட்டன கோவிட் 19 மற்றும் கொரோனா!
சமம் ஆகி விட்டார்கள் இன்று The Haves and The Have-nots!
எப்படி வந்தால் என்ன? சமரசம் நல்லது உலகுக்கு!
எதனால் வந்தால் என்ன! சமரசம் நல்லது உலகுக்கு!