ஆராரோ? ஆரீராராரோ?

'ஆ' வை மட்டும் 'யா' என்று மாற்றுங்கள்;
அடங்கிவிடும் உலகத் தத்துவம் இதில்!
யார் யாரோ (நிர்)பந்திக்கப்படுகிறார்கள்...
யார் யாரோ தீர்மானிக்கும் திருமணத்தில்!
யார் யாரோ தீடீர் (777) உறவாகி விடுகிறார்கள்.
யார் யாரோ வந்து பிறக்கின்றனர் குடும்பத்தில்.
யார் யாருக்கோ உழைக்கிறோம் ஓய்வில்லாமல்!
யார் யாருக்கோ உதவுகின்றோம் ஓய்வில்லாமல்!
யார் யாரோ வலிய வந்து உதவுகிறார்கள்.
யார் யாரோ நல்ல சிகிச்சை அளிக்கிறார்கள்.
யார் யாரையோ எல்லாம் இணைப்பது எது?
யார் யாரோ விதித்தப்படி நடப்பது எதனால்?
சிந்தித்தால் உலகமும், உறவுகளும் அயோமயம்!
சிந்திக்காவிட்டால் எண்ணங்கள் அடங்கிவிடும்!
"எல்லாம் அவன் செயல் என்றே கவலை இன்றி
இருப்பாய் நீ மடநெஞ்சமே!" என் தாத்தாவின் பாடல்!
" அமைதி நிலவ வேண்டும் எண்ணங்கள் என்னும்
அலைகள் வேண்டும் " என் தாத்தாவின் பாடல்.
அவர் அமைதியாக இருந்தார் - அதன் காரணம்
அவர் அறிந்திருந்தார் அமைதி அடையும் வழியை! 