Thirunangur Gopalakrishna Perumal
திருநாங்கூர் திருக்காவளம்பாடி
27 ம் திவ்யதேஸம்
தா அளந்து உலகம் முற்றும்
தட மலர்ப் பொய்கை புக்கு
நா வளம் நவின்று அங்கு ஏத்த
நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்
மா வளம் பெருகி மன்னும்
மறையவர் வாழும் நாங்கைக்
காவளம்பாடி மேய
கண்ணனே களைகண் நீயே
- திருமங்கையாழ்வார்,பெரிய திருமொழி
மூலவர் : கோபாலகிருஷ்ணன் (ராஜகோபாலன்) பாமா,
ருக்மணியுடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
அம்மன்/தாயார் : செங்கமல நாச்சியார், மடவரல் மங்கை
தீர்த்தம் : தடமலர்ப்பொய்கை தீர்த்தம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : காவளம்பாடி
ஊர் : காவளம்பாடி
மாவட்டம் : நாகப்பட்டினம்
மாநிலம் : தமிழ்நாடு
தல வரலாறு:
காவளம் என்றால் பூஞ்சோலை. துவாரகை போல பூஞ்சோலைகள் மிக்க ஒரு இடம் தேடி, அங்கே பாமாவுடன் தங்க விரும்பினார் கிருஷ்ணர். அப்படி அமர்ந்த இடத்தில் ஒன்று தான் காவளம்பாடி. இன்றைக்கும் கூட இந்த இடம் மிகவும் பசுமையாகத்தான் உள்ளது. இத்தலத்தை வட துவாரகைக்கு இணையாக தல புராணம் கூறுகிறது. பாமாவுக்கு பிடித்தமான தேவலோக மலரான பாரிஜாத பூச்செடி கிருஷ்ணனால் பூமியில் நடப்பட்ட இடம் தான் காவளம்பாடி. சிவனுக்கும், சேனைத்தலைவர் விஷ்வக்சேனருக்கும் இந்த கிருஷ்ணன் காட்சி தந்துள்ளார். கோயில் சிறியது தான் என்றாலும், மிக அருமையாக உள்ளது.
சிறப்புக்கள்
1.துவாரகாபுரியிலிருந்து கண்ணபிரான் சத்தியபாமாவுடன் இங்கு வந்ததால் இது துவாரகைக்குச் சமமான ஸ்தலம்.
2.காவளம் என்னும் சொல்லிற் கொப்ப அழகிய பொழில்கள் சூழ்ந்து துவாரகாபுரியைப் போலவே செழித்து திகழ்கிறது.
3.திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களில் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. திருமங்கையாழ்வாரின் அவதாரஸ்தலமான குறையலூர் மற்றும் அவர் வைணவ அடியார்க்கு ததீயாராதனம் (அன்னதானம்) நடத்திய மங்கை மடம் இந்த ஸ்தலத்திற்கு மிகவும் அருகாமையிலேயே அமைந்துள்ளது.
4.திருநாங்கூரின் கருட சேவைக்கு இந்த துவாரகாபுரி நாதனும் எழுந்தருள்வார்.
5.இங்கு நாச்சியாரின் திருநாமம் இனிக்கும் தமிழ்ச் சொல்லான
“மடவரல் மங்கை” என்பதாகும்.
6.சத்யபாமா கேட்டதற்காக கண்ணன் பாரிஜாத மலரை இந்திர லோகத்தில் இருந்து கொண்டு வந்த தலம் இது.
ஸ்ரீமன் நாராயணய !!
Credits: Ravi Rajagopalan