• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Thiruvachakam in Sanskrit

Status
Not open for further replies.
Namaste to all.
Here is piece of Thiruvachakam translated into Sanskrit by me. Since I have had no formal education in Sanskrit, I am not confident of its correctness. I request those who are learned in Sanskrit to improve the translation with your suggestions and remarks.
சிவபுராணம்

சிவனது அநாதி முறைமையான பழமை

நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என்நெஞ்சி னீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10

शिवपुराणम्
शिवस्य अनादिपुराणत्वम्​

नमश्शिवायमन्त्रो जयतु । नाथस्य पादौ जयताम्‌ ।
क्षणमपि मम हृदयात् अनपसारिणौ पादौ जयताम्‌ ।
कोकळिवासिनः गुरुमणेः पादौ जयताम्।
आगमरूपं धारयतः मधुदायकस्य पादौ जयताम्‌ ।
एकरूपिणः अनेकरूपिणः ईशस्य पादौ जयताम्‌ ।
मनोवेगनाशद्वारा उद्धारकस्य राज्ञः पादौ विजयताम् ।
भवनाशकस्य कपर्दिनः नूपुरधारिणौ पादौ विजयताम्।
अभक्ताय दूरस्थस्य पुष्पपादौ विजयताम्‌ ।
अञ्जलिबद्धानां मनसि आनन्दजनकौ पादौ विजयेताम्‌।
नतशिराणां उद्धारकस्य पादौ विजयेताम्। 10

Other parts will follow.
 
In the one week since the thread was started, there had been 101 visits. (most of them, I think, could be Google's ). There were two likes. But no responses either good or bad. Since my purpose of posting was to get the translation corrected and nobody came forward to do it, I am closing this thread.
 
In deference o the wishes of a member expressed through a pm, I am continuing this thread, assured that this has at least two interested readers.

[TABLE="width: 100%"]
[TR]
[TD="align: left"]ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி
தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி
சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 15
ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் மோய உரைப்பனியான் 20

ईशस्य पादाभ्यां नम: । मम पितु: पादाभ्यां नम: ।
ज्योतिषः पादाभ्यां नम:। शिवारुणपादाभ्यां नम: ।
भक्तहृदयस्थितस्य निर्मलस्य पादाभ्यां नम: ।
मायासंसारछेदकराजस्य पादाभ्यां नम: ।
प्रशस्त पेरून्दुरैवासदेवस्य पादाभ्यां नम: ।
निस्सीमानन्ददायिने पर्वताय नम: ।
यतः शिव: मम मनसि स्थित:
तत्प्रसादात्‌ तस्य पादौ प्रणम्य
मनः तुष्ट्यै शिवपुराणम्‌ नाम एतत्पद्यं
सर्वप्रारब्धकर्मनिराकरणार्थं वदाम्यहम्‌ । 20




கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லை யிலாதானே! நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்[/TD]
[/TR]
[/TABLE]

ललाटाक्षः स्वकरुणादृष्ट्या मम पथदर्शकोऽभूत्।
अगण्यसौन्दर्यपूरितौ पादौ नमामि।
आकाशभूमिपरिपूरक! अखणडज्योतिस्वरूपिन्!
अगण्य! निस्सीम! तव महिमानं
दुष्कृती अहं प्रशस्तुं न प्रभवामि ।
तृणाङ्कुरकृमिवृक्षादि भूत्वा
बहुमृगपक्षिसर्पादि भूत्वा
पाषाणनरपिशाचभूतगणो भूत्वा
बलिष्ठासुरमुनिदेवो भूत्वा
एतेषु स्थावरजङ्गमादिषु 30
सर्वाणि जन्मानि प्राप्य अहं कृशो भूतः। देव!
सत्यं अद्य तव कनकपादौ दृष्ट्वा मुक्तो भवामि ।

The next part will appear after 10 days.
 
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35
வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40

सर्वाणि जन्मानि प्राप्य अहं कृशो भूतः। देव!
सत्यं अद्य तव कनकपादौ दृष्ट्वा मुक्तो भवामि ।
मम उद्धरणार्थं मम हृदये ओंकाररूपे स्थितोऽसि।
सत्य! विमल! ऋषभारूढ! निगमैः
आर्य इत्युच्चै: स्तुत! गाढ! विशाल! सूक्ष्म!
उष्ण! शिशिर! यजमान! विमल!
अनृतानि सर्वाणि निराकर्तुं प्रसादितवन् !
सत्यज्ञानं भूत्वा भासमानज्योति:!
ज्ञानशून्याय मह्यं परमानन्ददायिन्!
अज्ञानापहर्तः! शुद्धज्ञानस्वरूपिन्! 40

ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

जन्मस्थित्यन्तरहित! त्वं सर्वं जगत्‌
सृजसि! रक्षसि! नाशयसि! अनुगृह्णोषि ।
मां जनयसि भवत: सेवायां योजयसि च।
सुगन्ध इव अन्तर्वर्तिन्! दूरस्थ! समीपस्थ!
वाचातीत! मनोऽतीत! वेदस्वरूपिन्!
क्षीरेक्षुरसमिश्रितं घृतमिव
सद्भक्तानां मनसि माधुर्येण स्थित्वा
भवनाशकारिन्! अस्माकं भगवन्‌!
हे पञ्चवर्ण! स्तुतवतेभ्यः देवेभ्यः
त्वं तिरोहितोऽसि। महापापिनं मां 50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

आवृतं मायातमः।
धर्माधर्माख्येन दृढपाशेन बद्धोऽहम्।
उपरि चर्मेण आवृतं अन्त: कीटमलिनं
मलनिर्गमयत् शरीरं नवद्वार कुटीरम्‌
पञ्चेन्द्रियास्तु वञ्चनां कुर्वन्ति।
विमल! पाश्विकेन मनसा त्वयि
प्रेमीभूतं मनसि स्रुतवन्तं द्रवितवन्तं
पुण्यरहितं अधमं मां अनुगृहीतुं
पृथिव्यां अवतीर्य स्वदीर्घपादौ अदर्शयः।
सारमेयात्‌ अधमे प्रपन्ने मे 60

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே! தேனா ரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே
இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70

मातु: परां दयां वर्षितवन्! सत्य!
निर्मलज्योतिः! विकसत्‌पुष्पप्रकाश!
तेजोमय! मधु! अपूर्वामृत! शिवपुरवासिन्!
पाशबन्धं छित्वा परिरक्षक! आर्य!
प्रेम्णा अनुगृहीतः! मनसि दोषं निराकर्तः!
स्थानादभ्रष्टा बृहती करुणासरित्‌!
स्वादिष्ट अमृत! अनन्त भगवन्‌!
अभक्तमनसि तिरोभूतप्रकाश!
जलमिव मां द्रावयित्वा मम जीवो भूत्वा स्थित!
सुखदु:खरहित! सुखदुःखभरित! 70

அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்80

भक्तानां भक्त! सर्वेषु व्याप्त! अविकृत!
ज्योति स्वरूप! गाढं तमः! अव्यक्तमहिमावन्!
आदे! अन्त! मध्य! सर्वरहित!
मां आकृष्य अनुगृहीतः तात! भगवन्‌
तीक्ष्णसत्यज्ञानेन द्रष्टुं यतमानेभ्यः
अदृष्ट दृश्य! स्वतः सूक्ष्मभाव!
गमनागमनप्रतिष्ठारहित! हे पुण्य!
पालनकारिन्! मम रक्षक! अपूर्वदृष्टं परमज्योतिः!
सुखसरित्‌प्रवाह! तात! परमपुरुष!
शाश्वतं ज्योतिः! अनिर्वचनीय! सूक्ष्मज्ञान! 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்
ஊற்றான உண்ணா ரமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

जगत्यां जगति प्रति वस्तुषु ज्ञानरूपेण विभासमान!
अपिच्छिल! स्वच्छतम! मम चित्ते
निर्गच्छत्स्रोतः! भोज्यामृत! स्वामिन्!
विकारयुक्ते मांसवेष्टिते कायेऽस्मिन्‌ निवसितुम्‌
न सहे। "हे मम नाथ!'' "हे हर!'' इति
संकीर्त्य प्रशंस्य च त्वद्भक्ताः
भूतशरीरं त्यक्त्वा त्वयि लयं यन्ति।
पुनरत्र नागमनाय पापजन्माधरणाय
वञ्चकेन्द्रिययुक्तशरीरनाशनाय च त्वमेव दक्षोऽसि।
अर्धजामे नाट्यं कुर्वन्‌! नाथ!
चिदम्बरनटराज! दक्षिणपाण्ड्यदेशीय! 90
कष्टपूर्णजन्मनाशक! हे! इति
अनिर्वचनीयं त्वां प्रशंस्य तव पादपद्मे
भणितश्लोकस्य अर्थं ज्ञात्वा ये वदन्ति
शिवपुरम्‌ गत्वा शिवपादे स्थिताः भवन्ति।
सर्वे तेषां विनयेन अभिनन्दनं कुर्वन्ति। 95
 
Dear Vikrama Ji,

Just a doubt here ..Is this
निर्मलज्योतिः! used as in Vocative case( सम्बोधना) ?

Becos if it is Vocative case as indicated by the exclamation mark then won't it be
निर्मलज्योते

I am not an expert but just wondering.
Correct me if I am wrong.


 
Dear Mr.Vikrama,

thanks for the posting. Sorry i could not relish the sanskrit translation as i cannot read it fastly and understand it..( ashamed to write this.) but still wanted to wish you best for the efforts you have put in and present it for the forum. Cheers..
 
Dear Vikrama Ji,

Just a doubt here ..Is this
निर्मलज्योतिः! used as in Vocative case( सम्बोधना) ?

Becos if it is Vocative case as indicated by the exclamation mark then won't it be
निर्मलज्योते

I am not an expert but just wondering.
Correct me if I am wrong.


Dear Madam,
Thank you for your interest in these posts.
Regarding your doubt, ज्योतिः is सकारान्त नपुंसकलिङ्ग: -just like हविस् सब्दः. हे ज्योतिः is the standard vocative form. हे is optionally omitted.
Only in masculine and feminine genders, the इः becomes ए in vocative.
 
Last edited:
Dear Madam,
Thank you for your interest in these posts.
Regarding your doubt, ज्योतिः is सकारान्त नपुंसकलिङ्ग: -just like हविस् सब्दः. हे ज्योतिः is the standard vocative form. हे is optionally omitted.
Only in masculine and feminine genders, the इः becomes ए in vocative.

Dear sir,

Thank you very much for clarification.
I was really not aware that ज्योतिःis सकारान्त नपुंसकलिङ्ग:

Thank you once again.

regards


 
Namaste to all.
Here is piece of Thiruvachakam translated into Sanskrit by me. Since I have had no formal education in Sanskrit, I am not confident of its correctness. I request those who are learned in Sanskrit to improve the translation with your suggestions and remarks.
சிவபுராணம்

சிவனது அநாதி முறைமையான பழமை

நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என்நெஞ்சி னீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10

शिवपुराणम्
शिवस्य अनादिपुराणत्वम्​

नमश्शिवायमन्त्रो जयतु । नाथस्य पादौ जयताम्‌ ।
क्षणमपि मम हृदयात् अनपसारिणौ पादौ जयताम्‌ ।
कोकळिवासिनः गुरुमणेः पादौ जयताम्।
आगमरूपं धारयतः मधुदायकस्य पादौ जयताम्‌ ।
एकरूपिणः अनेकरूपिणः ईशस्य पादौ जयताम्‌ ।
मनोवेगनाशद्वारा उद्धारकस्य राज्ञः पादौ विजयताम् ।
भवनाशकस्य कपर्दिनः नूपुरधारिणौ पादौ विजयताम्।
अभक्ताय दूरस्थस्य पुष्पपादौ विजयताम्‌ ।
अञ्जलिबद्धानां मनसि आनन्दजनकौ पादौ विजयेताम्‌।
नतशिराणां उद्धारकस्य पादौ विजयेताम्। 10

Other parts will follow.
dear sir !
you are doing a wonderful job and continue . many members will enjoy this even though many may not be in position to help you in Sanskrit translation.
 
2. कीर्त्तित्तिरुवहवल्
2. கீர்த்தித்திருவகவல்
शिवस्य कीर्तिः
தில்லைமூதூர்ஆடியதிருவடி
பல்லுயிரெல்லாம்பயின்றனனாகி
எண்ணில்பல்குணம்எழில்பெறவிளங்கி
மண்ணும்விண்ணும்வானோருலகுந்
துன்னியகல்விதோற்றியும்அழித்தும் 5
என்னுடையிருளைஏறத்துரந்தும்
அடியாருள்ளத்தன்புமீதூரக்
குடியாக்கொண்டகொள்கையும்சிறப்பும்
மன்னுமாமலைமகேந்திரமதனிற்
சொன்னஆகமந்தோற்றுவித்தருளியுங் 10

चितम्बरे नृत्तपादः
सर्वेषामात्मनि स्थितः
असंख्यगुणैर्युक्तो राजते स सुन्दरः।
भूम्याकाशदेवलोकेषु
सृजति बह्वीं विद्या, नाशयति तास्सर्वाः।
दूरीकरोति सकलं ममाज्ञानतमोघनम् ।
भक्तानां मनसि स्थित्वा प्रेमपूरितप्रवाहेण
निवसति स तु नित्यम्। तादृशी तस्य महिमा।
अचले पर्वतेऽस्मिन् महेन्द्राख्ये महागिरौ
पुरोक्तमागमं पूतं पुनरुपादिशत् स मुनेभ्यः। 10
 
पुरोक्तमागमं पूतं पुनरुपादिशत् स मुनेभ्यः। 10

hi vikrama sir,
nice work...i appreciate u....but i have doubt abt IN THIS LINE...MUNEBHYAHA.... i heard munibhyaha...not munebhaya....

muni sadbha....ekarantha pullinga sabdhaha...like ..munihi ...munee...munayaha....i may be wrong...
 
पुरोक्तमागमं पूतं पुनरुपादिशत् स मुनेभ्यः। 10

hi vikrama sir,
nice work...i appreciate u....but i have doubt abt IN THIS LINE...MUNEBHYAHA.... i heard munibhyaha...not munebhaya....

muni sadbha....ekarantha pullinga sabdhaha...like ..munihi ...munee...munayaha....i may be wrong...

Yes. You are right. It is a typographical error. Thank you for pointing it out. Please continue to show interest in this thread and guide me.
 
கல்லாடத்துக்கலந்தினிதருளி
நல்லாளோடுநயப்புறவெய்தியும்
பஞ்சப்பள்ளியிற்பான்மொழிதன்னொடும்
எஞ்சாதீண்டும்இன்னருள்விளைத்தும்
கிராதவேடமொடுகிஞ்சுகவாயவள் 15
விராவுகொங்கைநற்றடம்படிந்தும்
கேவேடராகிக்கெளிறதுபடுத்து
மாவேட்டாகியஆகமம்வாங்கியும்
மற்றவைதம்மைமகேந்திரத்திருந்
துற்றஐம்முகங்களாற்பணித்தருளியும் 20

कल्लाटक्षेत्रे निवसन् सम्यगनुगृह्य जनाय च
कल्याण्या सह श्रीमान् व्यराजत सुसन्तुष्टः।
पञ्चपल्लीस्थले तत्र मधुरवाण्या सहस्थितः
अदभ्रां करुणावर्षां भक्ताय प्रादर्शयत्।
किरातवेषं धृत्वा किञ्चुकाधर पत्न्याः
निबिडस्तनतडागे निमग्नस्स आसीत्।
कैवर्तवेषं धृत्वा केलिरुमीनग्रहणात्
विमुच्य त्वागमान् सर्वान् जनप्रियानपेक्षितान्
महेन्द्राद्रावासीनः वेदान् तान् ऋषिवरेभ्यः
पञ्चभिरास्यैरीश उपादिशत्तथैव हि। 20
 
நந்தம்பாடியில்நான்மறையோனாய்
அந்தமில்ஆரியனாயமர்ந்தருளியும்
வேறுவேறுருவும்வேறுவேறியற்கையும்
நூறுநூறாயிரம்இயல்பினதாகி
ஏறுடைஈசன்இப்புவனியைஉய்யக 25
கூறுடைமங்கையும்தானும்வந்தருளிக்
குதிரையைக்கொண்டுகுடநாடதன்மிசைச்
சதுர்படச்சாத்தாய்த்தானெழுந்தருளியும்
வேலம்புத்தூர்விட்டேறருளிக்
கோலம்பொலிவுகாட்டியகொள்கையும் 30

नन्दम्पाडिस्थले वेदेषु पारको भूत्वा 21
नान्तश्री परमेश्वरः स्वेच्छयार्यो बभूव सः।
विभिन्नरूपाणां विभिन्नभावानां
शतलक्षसङ्ख्येभिः स युक्तो बभूव।
ऋषभारूढः परमेश्वरो भुवनोद्धरण कार्यार्थं
अर्धनारीश्वररूपेण अतिसुन्दरं विराजते।
अश्वानां पश्चिमदेशानां
दमन करणे कुशलोऽभवत्।
वेलम्पुत्तूर्पुरे पुण्ये ऋषभं त्यक्त्वा स्ववाहनं
अदर्शयत् कान्तिमत्रूपम् भक्ताय सुमनोहरम्। 30
 
தற்பணமதனிற்சாந்தம்புத்தூர்
விற்பொருவேடற்கீந்தவிளைவும்
மொக்கணியருளியமுழுத்தழல்மேனி
சொக்கதாகக்காட்டியதொன்மையும்
அரியொடுபிரமற்களவறியொண்ணான் 35
நரியைக்குதிரையாக்கியநன்மையும்
ஆண்டுகொண்டருளஅழகுறுதிருவடி
பாண்டியன்தனக்குப்பரிமாவிற்
றீண்டுகனகம்இசையப்பெறாஅ
தாண்டான்எங்கோன்அருள்வழியிருப்பத் 40

शान्तम्पुत्तूरिति क्षेत्रे दर्पणे निजस्वरूपं

धनुर्युक्तं दर्शयित्वा वरञ्चादात्योधाय।

अश्वाहारस्यूते तु पूर्णाग्निस्वरूपेण
स्वसौन्दर्यं सुव्यक्तमकरोत् परमेश्वरः।
विष्णवे च ब्रह्मणे च स आसीदप्रमेय:।
अश्वीकरणं जम्बुकस्य तस्यैवाद्भुतं कार्यम्।
पाण्ड्यराजमनुगृहीतुं सुन्दरपाद: परमेश्वरः
तस्मा अश्वान् विक्रय्य
नाङ्गीकृत्य धनं तस्मात्
शमकरोद्ममेश्वरः। सन्मार्गेषु तमानेतुम् 40

தூண்டுசோதிதோற்றியதொன்மையும்
அந்தணனாகிஆண்டுகொண்டருளி
இந்திரஞாலங்காட்டியஇயல்பும்
மதுரைப்பெருநன்மாநகரிருந்து
குதிரைச்சேவகனாகியகொள்கையும் 45
ஆங்கதுதன்னில்அடியவட்காகப்
பாங்காய்மண்சுமந்தருளியபரிசும்
உத்தரகோசமங்கையுளிருந்து
வித்தகவேடங்காட்டியஇயல்பும்
பூவணமதனிற்பொலிந்திருந்தருளித் 50

प्रादर्शयत् पुरा तस्मै स्वमहज्ज्योतिरुत्तमम्।
ब्रह्मवेष इहागत्य अधमं मामदासयत्।
इन्द्रजालजगत्मायां बोधयन्नन्वगृह्णात्।
विश्रुतमधुरापुर्यां माधुर्येण विराज्य सः
चालकोभवदश्वस्य राज्ञः गोष्ठे स्वलीलया।
स्वभक्ताया: सहायार्थं
मृत्भारमवहत् शिरे।
उत्तरकोशमङ्गायां सन्निधिं ईश्वरः कृत्वा
ज्ञानाचार्यस्वरूपकं प्रादर्शयत् सदाशिवः।
पूवणाख्ये पुरे क्षेत्रे द्योतमानो महाशिवः 50
 
தூவணமேனிகாட்டியதொன்மையும்
வாதவூரினில்வந்தினிதருளிப்
பாதச்சிலம்பொலிகாட்டியபண்பும்
திருவார்பெருந்துறைச்செல்வனாகிக்
கருவார்சோதியிற்கரந்தகள்ளமும் 55
பூவலமதனிற்பொலிந்தினிதருளிப்
பாவநாசமாக்கியபரிசும்
தண்ணீர்ப்பந்தர்சயம்பெறவைத்து
நன்னீர்ச்சேவகனாகியநன்மையும்
விருந்தினனாகிவெண்காடதனில் 60

स्वशुचिं सुन्दरं रूपमदर्शयत्पुरा स्वयम्। 51
वातपुरे समागत्य वन्दमानाननुगृह्य
पादभूषणनूपुरमधुरनादमश्रावयत्‌।
श्रीमत्पेरुन्तुरैपुर्यां विराजितो महेश्वरः
आत्मज्योतिषि लीनस्सः मायया कपटोऽभवत्।
प्रत्यक्षः पूवलक्षेत्रे स्वानुग्रहेण भूत्वा सः
पापानां नाशनं कृत्वा माहात्म्यं प्रकटीचकार।
जलकुटीरं जयाय कृत्वा
सुजलदानसेवको सोऽभूत्।
अतिथिर्भूत्वाश्वेतवन क्षेत्रे 60

குருந்தின்கீழன்றிருந்தகொள்கையும்
பட்டமங்கையிற்பாங்காயிருந்தங்
கட்டமாசித்திஅருளியஅதுவும்
வேடுவனாகிவேண்டுருக்கொண்டு
காடதுதன்னிற்கரந்தகள்ளமும் 65
மெய்க்காட்டிட்டுவேண்டுருக்கொண்டு
தக்கானொருவனாகியதன்மையும்
ஓரியூரின்உகந்தினிதருளிப்
பாரிரும்பாலகனாகியபரிசும்
பாண்டூர்தன்னில்ஈண்டஇருந்துந் 70

कुन्दवृक्षस्यमूले न्यवसत्।
पट्टमङ्गायां सुस्थितो भूत्वा
अष्टमहा सिद्धिं स समुपादिशत्।
किरातरूपं स्वेच्छया धृत्वा
वने निलीनः कपटोऽभवत्।
दर्शयित्वा निजं सत्यं, गृहीत्वा वाञ्छितं रूपं
अर्हश्च सोऽद्वितीयश्च अनुपमोऽभवत्स्वयम्।
ओरिस्थले प्रसन्नो भूत्वा
भूमौमहान् बालकोऽभवत्।
पाण्डूर्स्थले स्थितः चिरम्। 70
 
தேவூர்தென்பால்திகழ்தருதீவிற்
கோவார்கோலங்கொண்டகொள்கையும்
தேனமர்சோலைத்திருவாரூரில்
ஞானந்தன்னைநல்கியநன்மையும்
இடைமருததனில்ஈண்டஇருந்து 75
படிமப்பாதம்வைத்தஅப்பரிசும்
ஏகம்பத்தின்இயல்பாயிருந்து
பாகம்பெண்ணோடாயினபரிசும்
திருவாஞ்சியத்திற்சீர்பெறஇருந்து
மருவார்குழலியொடுமகிழ்ந்தவண்ணமும் 80

तेवूर्पुरस्य दक्षिणे सुस्थिते सुन्दरे द्वीपे
अतिसुन्दररूपेण ईश्वरो दर्शनं ददौ।
मधुपूरितनन्दने तिरुवारूर्नगर्यां सः
ज्ञानप्रदानकारको भूत्वा शिवो विराजते।
मध्यार्जुन महाक्षेत्रे प्रत्यक्षोऽभवदीश्वरः
पवित्रपादयुग्मं च न्यस्य शमकरोच्छिवः।
काञ्चीपुर महापुरे स्वप्रकृत्यां स्थितो भूत्वा
अर्धनारीस्वरूपेण देवदेवः प्रकाशते।
श्रीवाञ्च्यमिति विश्रुते क्षेत्रे तेजोयुतः श्रीमान्
सुगन्धकुन्तलाम्बया सह बभूव सन्तुष्टः। 80

சேவகனாகித்திண்சிலையேந்திப்
பாவகம்பலபலகாட்டியபரிசும்
கடம்பூர்தன்னில்இடம்பெறஇருந்தும்
ஈங்கோய்மலையில்எழிலதுகாட்டியும்
ஐயாறதனிற்சைவனாகியும் 85
துருத்திதன்னில்அருத்தியோடிருந்தும்
திருப்பனையூரில்விருப்பனாகியும்
கழுமலமதனிற்காட்சிகொடுத்தும்
கழுக்குன்றதனில்வழுக்காதிருந்தும்
புறம்பயமதனில்அறம்பலஅருளியும் 90

योधा भूत्वा दृढचापधारी
प्रादर्शयत्भावकाननेकान् ।
कडम्बूर्स्थले निवासकाले
ईङ्गोय्गिरौ दर्शितं सुरूपम् ।
पञ्चनदक्षेत्रे शैवोऽभवत्।
तुरुत्तिस्थले प्रसीद आसीत्।
तिरूप्पनैयूर्वासे सन्तुष्टः
श्रीकालीक्षेत्रे दर्शनं ददौ।
श्रीगृध्रशैले सदा निवस्य
पुरम्भयम्‌ धर्मपुरीमकार्षीत्। 90
 
Dear Vikrama Sir

Congrats on your efforts .I am neither competent in Tamil nor Sanskrit to correct your work but I suggest that you submit your work to Swami Omkarananda , a great Vedantic Teacher who gives talks in Tamil on Bhagavad Gita , Upanishads , Thiruvachagam , Thirukural , Thayumavar songs etc and is expert in both Tamil and Sanskrit and right now he is observing Chaturmasya Vratha at Anatha PadmanabhaSwwamy Temple in Gandhi Nagar , Adyar ,Chennai - 600020 and will be here till Sept 30, 2012 .
By the way for those in Chennai on Sun 2 September 2012 there is a complete parayana of entire Thiruvachagam from 9 a.m - 5 p.m under Swami Omkarananda (and other great Tamil Scholars ) who is observing Chaturmasya Vrata at Anantha Padmanabhaswamy Temple ,Gandhi Nagar , Adyar ,Chennai - 600020
and the Venue is Kanchi Mahaswamy Mantapam ,adjacent to the Padmanabhaswamy Temple

This is just for people interested in participating in the same .
You can meet Swami Omkarananda daily between 4.30 p.m - 5.30 p.m at the Kanchi Mahaswamy Mandapam itself for any clarifications and he is open to all at that time . I suggest you submit your work to him for getting it properly evaluated .
All the best and keep it up .
 
Thank you Sri Krishna for the guidance. I will meet the swamiji soon and let you know.

All the best Vikrama . I am sure Swami Omakarananda's guidance will be very useful for this and other related works of yours in the spiritual domain .Om Peace .
 
குற்றாலத்துக்குறியாயிருந்தும்
அந்தமில்பெருமைஅழலுருக்கரந்து
சுந்தரவேடத்தொருமுதலுருவுகொண்
டிந்திரஞாலம்போலவந்தருளி
எவ்வெவர்தன்மையுந்தன்வயிற்படுத்துத் 95
தானேயாகியதயாபரன்எம்மிறை
சந்திரதீபத்துச்சாத்திரனாகி
அந்தரத்திழிந்துவந்தழகமர்பாலையுட்
சுந்தரத்தன்மையொடுதுதைந்திருந்தருளியும்
மந்திரமாமலைமகேந்திரவெற்பன் 100

कुत्तालवासी लिङ्गस्वरूपी।
विभूतिवन्तमग्निवर्णं विलीय
अधारयत्रूपमतिशोभयुक्तम्।
इन्द्रजालमिवागत्य
विलीनाकरोत्स्वस्मिन् विविधाः प्रकृतीः बह्वीः।
दयापरो स्वयं ममेशः
शास्त्रीबभूव श्रीचन्द्रद्वीपे।
अवतीर्यान्तरिक्षात् सुन्दरे पालैक्षेत्रे
अतिसुन्दरोऽयमनुग्रहमकार्षीत्।
मन्त्रमहापर्वतमहेन्द्रवासी। 100




அந்தமில்பெருமைஅருளுடைஅண்ணல்
எந்தமைஆண்டபரிசதுபகரின்
ஆற்றல்அதுவுடைஅழகமர்திருவுரு
நீற்றுக்கோடிநிமிர்ந்துகாட்டியும்
ஊனந்தன்னையொருங்குடன்அறுக்கும் 105
ஆனந்தம்மேஆறாஅருளியும்
மாதிற்கூறுடைமாப்பெருங்கருணையன்
நாதப்பெரும்பறைநவின்றுகறங்கவும்
அழுக்கடையாமல்ஆண்டுகொண்டருள்பவன்
கழுக்கடைதன்னைக்கைக்கொண்டருளியும்110

अनन्तमहिमावान् अनुग्रहशीलो महान्‌!
मयि दयां करोति स इदमत्र वदाम्यहम् !
सर्व शक्तियुतो नाथः सौन्दर्यस्य निधानभू!
त्रिपुण्ड्राङ्कितफालेन
सर्वदुःखविनाशकः।
स्रावयति महानन्दं
नारीभागः दयासरित्।
भेरीनादं सदा कृत्वा
दूरीकरोति कालुष्यम्।
हस्तशूलेन रक्षति 110
 
மூலமாகியமும்மலம்அறுக்குந்
தூயமேனிச்சுடர்விடுசோதி
காதலனாகிக்கழுநீர்மாலை
ஏலுடைத்தாகஎழில்பெறஅணிந்தும்
அரியொடுபிரமற்களவறியாதவன் 115
பரிமாவின்மிசைப்பயின்றவண்ணமும்
மீண்டுவாராவழியருள்புரிபவன்
பாண்டிநாடேபழம்பதியாகவும்
பத்திசெய்அடியரைப்பரம்பரத்துய்ப்பவன்
உத்தரகோசமங்கையூராகவும் 120

भवमूलमलत्रयनाशकः
पावनदेहे ज्वलितज्योति:।
दयितो भूत्वा उत्फलमालां
युक्तशोभया गले धारयन्
विष्णुब्रह्माभ्यामत्यप्रमेयः
अश्वारूढो आविरभूत्।
पुनर्जन्मदुःखं सुक्षमो निवारितुम्।
पाण्ड्यप्रदेश: चिरवासभूमिः।
भक्तेभ्य: परं मोक्ष साम्राज्यं यच्छसि!
उत्तर कोशमङ्गां स्व पुरं कृतवान्‌! 120

ஆதிமூர்த்திகட்கருள்புரிந்தருளிய
தேவதேவன்திருப்பெயராகவும்
இருள்கடிந்தருளியஇன்பவூர்தி
அருளியபெருமைஅருண்மலையாகவும்
எப்பெருந்தன்மையும்எவ்வெவர்திறமும் 125
அப்பரிசதனால்ஆண்டுகொண்டருளி
நாயினேனைநலமலிதில்லையுட்
கோலமார்தருபொதுவினில்வருகென
ஏலஎன்னையீங்கொழித்தருளி
அன்றுடன்சென்றஅருள்பெறும்அடியவர் 130

आदिमूर्तीनां प्रसादं कुर्वन्‌
देवदेव इति अन्तर्नाम्ना
अज्ञान निराकर्ता आनन्दवाहन:
कीर्तिमान् अनुग्रहपर्वत:!
यस्य यथा प्रकृतिः, यस्य यथा सामर्थ्यम्‌
तथा तथा तं अन्वगृह्णात्।
श्वानं मां श्रेष्टे चिदम्बरक्षेत्रे
“सुन्दर सभायं आगच्छ'' इत्यवदः।
मां भूलोके परित्यज्य
तदानीं सहगतान् भक्तान् 130
 
ஒன்றவொன்றஉடன்கலந்தருளியும்
எய்தவந்திலாதார்எரியிற்பாயவும்
மாலதுவாகிமயக்கமெய்தியும்
பூதலமதனிற்புரண்டுவீழ்ந்தலறியும்
கால்விசைத்தோடிக்கடல்புகமண்டி 135
நாதநாதஎன்றழுதரற்றிப்
பாதமெய்தினர்பாதமெய்தவும்
பதஞ்சலிக்கருளியபரமநாடகஎன்
றிதஞ்சலிப்பெய்தநின்றேங்கினர்ஏங்கவும்
எழில்பெறும்இமயத்தியல்புடையம்பொற் 140
स्वस्मिन् मिलित्वा अन्वगृह्णात्।
अननुगृहीताः केचिदग्नौ प्राविशन्।
त्वत्पदमिच्छमाना मुग्धा बभूव केचित्।
भूतले लुठित्वा पतित्वा अरुदन् केचित्।
पादाभ्यां वेगेन अधावन्केचित् समुद्रपतनाय।
नाथ नाथेति रुदित्वा व्यलपन् केचित्।!
पादौ प्राप्तवन्ताः मुक्तिं अश्नुवन्।
पतञ्जलेः अनुग्रहकर्त, परम नाटक इति
हृदयतापेन व्याकुलाऽभवन् केचित्।
सुन्दरहिमालयसमाने कनकमये 140

பொலிதருபுலியூர்ப்பொதுவினில்நடநவில்
கனிதருசெவ்வாய்உமையொடுகாளிக்
கருளியதிருமுகத்தழகுறுசிறுநகை
இறைவன்ஈண்டியஅடியவரோடும்
பொலிதருபுலியூர்ப்புக்கினிதருளினன் 145
ஒலிதருகைலைஉயர்கிழவோனே.
श्रेष्ठे चिदम्बरक्षेत्रे नटनकारकः
बिम्बाधरवत्या उमया सह,
काल्यै अनुगृहीतवति वदने सुन्दर स्मितेन
विराजते। भगवान् आगतैर्भक्तैः सह
सुन्दरचिदम्बरक्षेत्रं प्रविश्य अनुगृह्णाति
कैलासपतिः परमेश्वरः।

This brings the second hymn of Thiruvacakam, namely, keerthi thiruvagaval to end.
Do you want me to post the translation of the third?
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top