தற்கால பிராமண இளைஞர்களின் நிலை பற்றி ஒரு வயது முதிர்ந்தவரின் அங்கலாய்ப்பு -----தயவு செய்து அவரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நண்பர்கள் கருத்து தெரிவிக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்
சமூக நிலை - திருமணங்கள் - பையன்கள்
‘உடலில் பற்ற தொடங்கிய கொடிய நோய் மெல்ல மெல்ல முற்றி தொடங்கிய கதையாக’ பிராமணச் சுற்றங்களின் திருமண விஷயம் மோசமாகிகொண்டு வருவதை கடந்த 10 ஆண்டுகளில் நாம் கண்டு கொண்டோம். தாமத திருமணங்கள் என்ற, தாமாகவே ஏற்படுத்திக்கொண்ட நம் பையன்களின் அசட்டுதனம் தற்போது அவர்களின் பிடரியை பிடித்து உலுக்குவதை காணமுடிகிறது. 30 வயதை கடந்த முதிர் கன்னிகள் என்று அப்பொழுது எழுதிய கதைகளும் நாடகங்களும் இன்று மாற்றி எழுதப்படுகின்றன. 30 வயதிற்குள் திருமணம் முடித்த பிராமணப் பையன்கள் முழு அதிர்ஷ்டசாலிகள். 30இலிருந்து 35 வயது வரை ஆகும் கல்யாணங்கள் தப்பு சொல்ல முடியாத இன்றைய பிராமண நடைமுறை. 35 வயதுக்கு மேலும் 40க்குள்ளும் பிராமண பையன்கள் கல்யாணம் செய்துகொள்வது ஒன்றும் குறைசொல்லும் விஷயம் அல்ல. அதற்கு மேலும் கல்யாணம் செய்துகொண்டாலும் குதர்க்கமாகப் பேசி அதை குறை சொல்லும் அளவிற்கு அது ஒன்றும் குற்றம் இல்லை.
இப்படி ஆகிவிட்ட நம்மாத்து அம்பிகளின் கதையை எண்ணி எண்ணி வருந்துவதை தவிர வேறு என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் பிராமணர்களில் ஒருவராகவே பிராமின் டுடே-யும் இருக்கிறது. ‘எத்தை தின்றால் பித்தம் தெளியும்’ என்று ஏங்கும் விதம் அமைந்துவிட்ட, இந்த சொத்தை பல்லை எப்படி பிடுங்கி எறிவது என்று எல்லோரும் கூடி முடிவு செய்யும்படி இத்தருணத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகிறோம்.
பெண்கள்: பையன்கள் கதை இப்படி என்றால், கடந்த 10 ஆண்டுகளில் பெண்கள் திருமணம் தொடர்பாக உள்ள நிகழ்வுகள் பெரும் திகைப்பையும் மலைப்பையும் அளிக்கின்றன. பெண்களின் திருமணம் என்பது இயல்பான மற்றும் பெற்றோர்களின் முயற்சியாக இருந்த காலம் கடந்த 10 ஆண்டுகளில் கடந்து சென்றுவிட்டது. தனக்கு பிடித்த உடை, உணவு, வேலை என்று தாங்களே முடிவு செய்து கொண்டு போன, நம்மாத்து வாலை குமரிகள் திருமண விஷயத்திலும் தங்கள் வேலையை காட்ட தொடங்கினார்கள். ‘வர வர மாமியார் கழுதை போல் ஆனாளாம், ஊருக்கு வந்ததும் ஊளையிட ஆரம்பித்தாளாம்’ என்ற கதையாய் ஆகிவிட்டதே நம் பெண்களின் திருமண விஷயம் என்று கண்ணீர் உகுக்கும் கணக்கற்ற பிராமண தாய்மார்களைக் கண்டு பிராமின் டுடே கவலை கொள்கிறது.
கொஞ்சகாலம் முன்புகூட இப்படி இல்லையே, மிஞ்சி மிஞ்சி போனால் பெண்கள் என்ன ஒரு 20,000 இல்லை 30,000 ரூபாய் சம்பாதிப்பார்களா? என்று பையன்கள் நினைத்த காலம் இன்று கடந்த காலம். படிப்பிலும், பார்க்கும் வேலையிலும், நம்மாத்து பசங்களை வெகுதூரத்தில் வைத்துவிட்டு, இன்றைய பிராமணப் பெண்கள் கால் எடுத்து வைத்துள்ள ஒவ்வொரு துறையிலும் அவர்களை மிஞ்ச ஆள் இல்லை. கடுமையான உழைப்பு. யார் தடுத்தாலும் அஞ்சாமல், எல்லா தடைகளையும் தாண்டி, முதன்மை நிலையில் இருக்கும் நம் பிராமணப் பெண்களின் திருமண விஷயத்தை முன்புபோல யாரும் முடிவு செய்ய முடியாது.
அதே சமயம், பிராமணப் பெண்களிடம் குறைந்துவிட்ட பிராமணக் கலாச்சாரப் பற்றுதல்களையும் அவர்கள் பின்பற்றுவதை விட்டுவிட்ட பிராமண பழக்க வழக்கங்களையும் சுட்டிக்காட்டுவதோடு அல்லாமல் அதன் அடிப்படை காரணம் நம் பிராமண பெற்றோர்களே என்பதையும் பிராமின் டுடே எடுத்துக்காட்டி வந்துள்ளது.
கல்வி: மகிழ்ச்சி அடைவதா, வருத்தப்படுவதா என்று தெரியாத இரண்டுங்கெட்டான் நிலையே கல்வி விஷயத்தில் இந்த 10 ஆண்டுகளில் நம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ளது. ஒரு புறம், அரசு இடஒதுக்கீடு, நம் சமூகத்திற்கென்று தரமான கல்லூரி இல்லாதது, பெருகிவரும் கல்வி கட்டணங்கள் ஆகிய இடர்பாடுகளுக்கு இடையே பிராமண இளைஞர்கள் மற்றும் யுவதிகள் உயர் கல்வி பெற்று வருவது உள்ளத்தில் மகிழ்ச்சியைத் தருகிறது. மறுபுறம், எல்லா பட்டப் படிப்புகளிலும், மருத்துவம், ஆடிட்டிங், இன்ஜினியரிங் போன்ற தொழில்கல்வி துறைகளிலும் முன்பு இருந்த பிரதிநிதித்துவத்தில் மூன்றில் ஒரு பங்குகூட இல்லாமல் போய்விட்டதே என்ற வருத்தமும் ஏற்படுகிறது.
வக்கீல், ஆடிட்டர், டாக்டர் என்று சொன்னாலே அக்ரஹாரத்து அம்பிகள்தான் என்ற நிலைமாறி, காலச் சக்கரம் அவர்களை வாய்ப்புகளின் கடைசி படிகளுக்கு தள்ளியது இந்த 10 ஆண்டு காலத்தில் நம் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றமாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறது. கம்ப்யூட்டர் என்ற சாதனமும் அமெரிக்கா என்ற தேசமும் கண்டுபிடிக்கபடாமல் போயிருந்தால் நம் பிராமண அம்பிகளின் நிலை என்னவாய் இருந்திருக்கும்? தம்பிடி இல்லாத தம்புடுகளாக வம்படித்து, பொழுதை கழித்துக் கொண்டிருக்கவே வேண்டியிருந்திருக்கும்.
: , பிராமணர்களின் பொருளாதார முன்னேற்றம் கடந்த 10 ஆண்டுகளில் ஒரளவுக்கு நன்றாகவே வளர்ந்துள்ளது. ‘பழையதை தின்று, கிழிந்ததை உடுத்தி இருந்த காலம் கடந்து போய் பல வருடங்கள் ஆயின’ எனினும் தற்காலத்தைப் போல தாராளமாகச் செலவு செய்யும் வசதியும் வாய்ப்பும் கடந்த 10 ஆண்டுகளில் நிகழவில்லை. அனைத்து பிரிவு பிராமணர்களும் ‘தரித்திர நாராயணர்’ என்ற சரித்திர அடையாளத்திலிருந்து வெகுதூரம் தற்போது விலகி வந்துவிட்டார்கள் என்பதை நாம் உணரவே செய்கிறோம்.
ஆச்சாரம்: ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகியது’ என்பதன் விளக்கமே கடந்த 10 ஆண்டு கால பிராமண ஆச்சார நிலை. “மெல்ல மெல்ல வந்தானாம், மிளகுன்னானாம், சுக்குன்னானாம்” என்ற கதையாய், எச்சில், பத்து, போன்ற சின்ன சின்ன ஆச்சாரங்கள் விடுபட தொடங்கி, இன்று கல்யாணத்தில் வந்து நிற்கிறது நம்முடைய பிராமண ஆச்சார சீரழிவு. தொடக்கத்தில், மிக்க படித்து, மேல் நாட்டு நாகரிகத்தில் மூழ்கியவர்களிடம் மட்டுமே இருந்த பிராமண ஆச்சார புறக்கணிப்பு, கடந்த 10 ஆண்டுகளில் மொத்த சமுதாயத்தையும் பாதிக்கும் வண்ணம் முழு மூச்சுடன் வியாபித்து வருகிறது. ‘ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, கடைசியில் மனுஷனையே கடித்த கதையாக’ பேண்ட், ஜீன்ஸ் போட்ட இளைஞர்களிடம் துவங்கிய பிராமண ஆச்சார பற்றின்மை, இன்று வேட்டி கட்டி, வேத நடைமுறைகளில் தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் சாஸ்திர, புரோகித ஜனங்களையும் தாக்கிவிட்டது.
நடந்ததை எண்ணி உடைந்து போகும் மன இயல்புடனும் கடந்த காலத்தை எண்ணி ஒப்பாரி கச்சேரி வைக்கும் சிந்தையுடனும் நாம் இவற்றையெல்லாம் எடுத்துக்காட்டவில்லை. ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ ஏற்றுக்கொள்ள தக்க வாழ்க்கை நெறியே என்பதை நாம் முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறோம். கால, தேச வர்த்தமான சூழ்நிலைகளுக்கேற்ப நம் வேலைகளும் நோக்கங்களும் மாறும்பொழுது எல்லாவற்றிலும் சிறிது மாற்றம் ஏற்படத்தான் செய்யும் என்று உடன்படும் அதே வேளையில் இவைகளையெல்லாம் தாண்டியும் தவிர்த்தும் நிற்கும் ஒரு அம்சம் உள்ளது. நிகழும் எல்லா மாற்றங்களுடன் இணைந்து, ஆனால் மாறாமல் தனியாக விளங்க வேண்டிய தனித்தன்மை அம்சம் ஒன்றை நாம் மறக்கக் கூடாது. உயர்வு தாழ்வு அடையாளமற்ற பிராமண உணர்வு என்ற சிந்தனையே அது. பிராமணர்கள் அதை எப்போதும் கைக்கொள்ள வேண்டும் என்ற ஒரு கொள்கையே பிராமின் டுடேயின் நோக்கமாகும்.
கடந்த 10 ஆண்டுகளின் ஆய்வாக பிராமணர்களைப் பற்றி, நமக்கு எட்டிய சில கருத்துக்களைத் தொட்டுக்காட்டிய இந்த கட்டுரை,