vikrama
0
இந்து மதத்தின் அடிப்படை வேதம் என்று அன்றைய ஆழ்வார்கள், நாயன்மார்களிலிருந்து இன்றைய மகான்கள், ப்ரவசனகர்த்தாக்கள் வரை எல்லோரும் வலியுறுத்துகின்றனர். இது எந்த வகையில் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இந்தக் கேள்வி எழுந்ததற்குக் காரணம் வருமாறு-
இன்று பரவலாக வணங்கப்படும் விநாயகர், முருகன், சிவன், பார்வதி, ஐயப்பன் ஆகிய தெய்வங்கள் வேதத்தில் இல்லை என்றும், ஸம்ஹிதைகளில் போற்றப்பட்ட விஷ்ணுவும், பிராமணங்களில் போற்றப்பட்ட நாராயணனும் பின்னர் ஒன்றாக இணைந்ததாகவும் தெரிகிறது.
வேத தெய்வங்களில் அக்னி வழிபாடு பிராமணர்களிடையே, விசேஷ காலங்களில் மட்டும் பின்பற்றப்படுகிறது. வருணன், வாயு, இந்திரன் முதலான வேத தெய்வங்கள் எதுவும் இன்று வழிபடப்படுவதில்லை.
இன்று நாம் இறந்த முன்னோருக்கான தர்ப்பணம், சிராத்தம் முதலானவை செய்கிறோம். இவை வேதத்தில் கூறப்படவில்லை என்கிறார்கள்.
இந்த எல்லா வழிபாடுகளிலும் இன்று வேதமந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை அந்தந்த நிகழ்ச்சிக்குச் சம்பந்தப்படாமல் இருந்தாலும் வலுக்கட்டாயமாக ஒரு சம்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சில அரிய வேதக் கருத்துகளை மக்கள் மறந்து விடக் கூடாது என்பதற்காக அவற்றை வாய்ப்புக் கிடைத்த இடங்களில் எல்லாம் புகுத்தினரா நம் முன்னோர்?
சம்பந்தமில்லாத வேத மந்திரங்களைச் சேர்த்து விடுவதால் மட்டும் ஒரு தெய்வம் வேதத் தொடர்புடையது என்று கூறப்பட்டால்-
குளித்தலையில் சில வெளிநாட்டுப் பாதிரிமார்கள் உபநிடதப் பாராயணம் செய்துகொண்டு மேரி அம்மனை வழிபடும் ஒரு கோயிலை ஏற்படுத்தி இருப்பதாகச் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு செய்தி வந்தது. அதை இந்து சமயத்தின் ஒரு பிரிவாகக் கொள்ள முடியுமா?