• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Vinayagar Chaturthi Special Vinayagar Slokas

praveen

Life is a dream
Staff member
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் விநாயகர் ஸ்லோகங்கள்:


சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

விநாயகர் ஸ்லோகம்:

1.ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.


2.கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

3.விநாயகர் காயத்ரி மந்திரம்:

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

4.விநாயகர் ஸ்லோகம்:

மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.


5.அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல
குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.

நாம் விநாயகரை வணங்கும் போது அருகம்புல்லால் அர்ச்சனை செய்தபடி இந்த மந்திரங்களை சொல்லி வணங்கினால் விநாயகரின் அருள் மிக சிறப்பாக கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் அவரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போட்டு வர அறிவும், உடலும் வலுவடையும்.

6.108 கணபதி போற்றிகள் :

1. ஓம் அத்தி முகனே போற்றி
2. ஓம் அம்பிகைச் செல்வா போற்றி
3. ஓம் அம்மையே அப்பா போற்றி
4. ஓம் அருமறைக் கொழுந்தே போற்றி
5. ஓம் அமரர்கள் கோனே போற்றி
6. ஓம் அடியார்க்கு இனியோய் போற்றி
7. ஓம் அங்குச பாஸா போற்றி
8. ஓம் அரு உருவானாய் போற்றி
9. ஓம் ஆறுமுகன் அண்ணா போற்றி
10. ஓம் அணுவினுக்கு அணுவே போற்றி
11. ஓம் அண்டங்கள் ஆனாய் போற்றி
12. ஓம் அவல்,பொரி,அப்பம் ,அருந்துவோய் போற்றி
13. ஓம் பிட்டும், முப்பழமும் நுகர்வாய் போற்றி
14. ஓம் ஆதி மூலமே போற்றி
15. ஓம் ஆருயிர்க்குயிரே போற்றி
16. ஓம் ஆரா அமுதா போற்றி
17. ஓம் இருள் தனைக் கடிவாய் போற்றி
18. ஓம் இடையூறு களைவாய் போற்றி
19. ஓம் இன்பத்தின் பெருக்கே போற்றி
20. ஓம் இருவினை அறுப்பாய் போற்றி
21. ஓம் ஈசனார் மகனே போற்றி
22. ஓம் ஈரேழாம் உலகா போற்றி
23. ஓம் உத்தமக் குணாளா போற்றி
24. ஓம் உலகெலாம் காப்பாய் போற்றி
25. ஓம் உண்மை நெறியாளா போற்றி
26. ஓம் உம்பர்கள் தொழுவாய் போற்றி
27. ஓம் ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி
28. ஓம் எங்குமே நிறைவாய் போற்றி
29. ஓம் என்றுமே திகழ்வாய் போற்றி
30. ஓம் எங்குமே அமர்ந்தாய் போற்றி31. ஓம் எவர்க்குமே அருள்வாய் போற்றி
32. ஓம் எதையுமே முடிப்பாய் போற்றி
33. ஓம் எண்குண சீலா போற்றி
34. ஓம் எழு பிறப்பறுப்பாய் போற்றி
35. ஓம் ஏழைப் பங்காளா போற்றி
36. ஓம் ஏக நாயகனே போற்றி
37. ஓம் எழில் மிகு தேவே போற்றி
38. ஓம் ஔவையார்க் கருள்வாய் போற்றி
39. ஓம் ஐங்கர முடையாய் போற்றி
40. ஓம் ஐம்புலன் அடக்குவாய் போற்றி
41. ஓம் நான்கு நற் புயத்தாய் போற்றி
42. ஓம் நாவலர் பணிவாய் போற்றி
43. ஓம் முக்கண்கள் உடையாய் போற்றி
44. ஓம் முழு முதற் பொருளே போற்றி
45. ஓம் ஒளி மிகு தேவே போற்றி
46. ஓம் ஓங்கார மூர்த்தி போற்றி
47. ஓம் கணத்து நாயகனே போற்றி
48 . ஓம் கருணையார் மூர்த்தியே போற்றி
49. ஓம் கலைஞானக் குருவே போற்றி
50. ஓம் கயமுகனைக் காய்ந்தாய் போற்றி
51. ஓம் கற்பக களிறே போற்றி
52. ஓம் கண்கண்ட தேவே போற்றி
53. ஓம் கந்தனை வென்றாய் போற்றி
54. ஓம் கனிதனைப் பெற்றாய் போற்றி
55. ஓம் சங்கத்துத் தமிழே போற்றி
56. ஓம் சரவணன் தொழுவாய் போற்றி
57. ஓம் சர்வ லோகேசா போற்றி
58. ஓம் சாந்தமார் மூர்த்தி போற்றி
59. ஓம் சுருதியின் முடிவே போற்றி
60. ஓம் சொற்பதம் கடந்தாய் போற்றி
61. ஓம் நம்பிக்கு அருள்வாய் போற்றி
62. ஓம் நாதனே ,கீதா போற்றி
63. ஓம் தவசிகள் தொழுவாய் போற்றி
64. ஓம் தாயினும் நல்லாய் போற்றி
65. ஓம் தரும குணாளா போற்றி
66. ஓம் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் போற்றி
67. ஓம் தூயவர் துணைவா போற்றி
68. ஓம் துறவிகள் பொருளே போற்றி
69. ஓம் நித்தனே ,நிமலா போற்றி
70. ஓம் நீதி சால் துரையே போற்றி
71. ஒம் நீல மேனியனே போற்றி
72. ஓம் நிர்மலி வேனியா போற்றி
73. ஓம் பேழை நல் வயிற்றாய் போற்றி
74. ஓம் பெரிச்சாளி வாகனா போற்றி
75. ஓம் பாரதம் வரைந்தாய் போற்றி
76. ஓம் பாவலர் பணிவாய் போற்றி
77. ஓம் பாசத்தை அறுப்பாய் போற்றி
78 . ஓம் பாவப்பிணி ஒழிப்பாய் போற்றி
79. ஓம் மும்மலம் அறுப்பாய் போற்றி
80. ஓம் முத்தியை தருவாய் போற்றி
81. ஓம் வேழ முகத்தாய் போற்றி
82. ஓம் வேட்கையை தணிவிப்பாய் போற்றி
83. ஓம் வேள்வியின் முதல்வா போற்றி
84. ஓம் வேதாந்த விமலா போற்றி
85. ஓம் ஒழுக்கமது அருள்வாய் போற்றி
86. ஓம் உடல் நலம் தருவாய் போற்றி
87. ஓம் செல்வம் தருவாய் போற்றி
88. ஓம் செறுக்கினை அழிப்பாய் போற்றி
89. ஓம் சிந்தனையை அடக்குவாய் போற்றி
90. ஓம் சினம் ,காமம் ,தவிர்ப்பாய் போற்றி
91. ஓம் கல்வியை அருள்வாய் போற்றி
92. ஓம் கரத்தலை ஒழிப்பாய் போற்றி
93. ஓம் ஒளவியம் அகற்றுவாய் போற்றி
94. ஓம் அறநெறி புகட்டுவாய் போற்றி
95. ஓம் அவாவினை அடக்குவாய் போற்றி
96. ஓம் அன்பினை வளர்ப்பாய் போற்றி
97. ஓம் ஊக்கமது அருள்வாய் போற்றி
98. ஓம் அமிர்த கணேசா போற்றி
99. ஓம் ஆக்கம் பெருக்குவாய் போற்றி
100. ஓம் வலம்புரி விநாயகா போற்றி
101. ஓம் வரமெல்லாம் தருவாய் போற்றி
102. ஓம் சித்தி விநாயகா போற்றி
101. ஓம் சிவபதம் அருள்வாய் போற்றி
104. ஓம் சுந்தர விநாயகா போற்றி
105. ஓம் சுக போகம் தருவாய் போற்றி
106. ஓம் அனைத்து ஆனாய் போற்றி
107. ஓம் ஆபத் சகாயா போற்றி
108. ஓம் அமிர்த கணேசா போற்றி போற்றி
 

Latest ads

Back
Top