• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Reply to thread

Dear Dewas Ravi

Hope you can follow tamil (since I used to write in Tamil, unless I am compelled to answer in English) Read the following.

I am happy that someone is willing and interested to know these things. Be blessed!


In general, our Sasthras says “Do this; Do not do this” sort of answers only. Answers to “why” is never said. It is left to you to deliberate and resolve by “Swathiyaayam” (self-learning). Because Sasthras are prescriptions to good way of living (ie. societies accepted principles only). Nowhere it says “GOD has said this”. So, if you are blessed to live with elders at your family, who knows the sasthras and practice in their day-to-day life, you can listen to them and do as they say. Otherwise listen to your Achchaaryas (who knows the achcharams and practice in life). Follow what ever they say with the belief that it will do good to you.


Never accept your mind voce since it will always be selfish and suggest things that will be acceptable to you. This is what MahaPeiyava said


“வேதம், தர்ம சாஸ்த்ரம் இவை குறித்த அறிவில்லை என்றால், நமக்கு வழிகாட்டத் தக்க பெரியோர்களும் இல்லாத நிலையில், செய்யத் தக்கது எது என நம்மால் அறியப்பட இயலாத இறுதி நிலையில் வேறு வழியே இல்லையென்றால், எந்தவித விருப்பும் வெறுப்புமின்றி சிந்திக்க முடிந்தால், மட்டுமே (நமக்கு நன்மை தராத ஒன்றாயினும்) நம் மனசாட்சி சொல்வது போல நடப்பது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அது அவரவர் கற்ற அற நூல்கள் மற்றும் அவரவர் வாழ்க்கையில் பெற்ற (அனுபவ) அறிவின் அடிப்படையிலேயே அமையும். பொதுவாக அது எதனால் நன்மை தராது என்றால், நாம் நேர்மையானவராக இல்லையெனின், நம் மனசாட்சி சுயநலமாகவே சிந்திக்கும். மனம், சாட்சி சொல்லத்தான் முடியுமே தவிர நீதிபதியாக இருக்க முடியாது. மனம் சாட்சியாக இருக்கும்வரை அது சுயநலமாகவே, நினைப்பவருக்கு நலம் தருவதனையே முன்னிலைப்படுத்திச் செயல்படும். நமக்கு ஏற்ற பிடித்தமான ஒன்றையே சரியென்று சொல்லும். செய்த தவற்றுக்குப் பிறரோ அல்லது சந்தர்ப்ப சூழலோ எந்த வகையில் காரணமாக இருக்க வாய்ப்புண்டு எனச் சிந்திக்கச் செய்து, நம் தவற்றை மறக்க, மன்னிக்க வழி சொல்லும். இது அறவழியென்று சொல்லும் பொழுதே, இதற்கு மாறாக நடந்து கொண்டால் இன்ன நன்மை கிடைக்குமென்றும் கூறும். இரண்டையும் சீர்தூக்கிப் பார்க்க வைக்கும். நம்மை அந்த தவறான வழியில் நடக்கத் தூண்டும்.” - தெய்வத்தின் குரல்


கால மாறுபாட்டாலும், மொழியறிவு குறைபாட்டாலும் , நம்மால் இவற்றைப் படித்துப் புரிந்து கொள்ள இயலவில்லை. விளக்கம் சொல்ல சரியான ஆசானில்லாத காரணத்தாலும், சாத்திரங்கள் சொன்னதை முழுமையாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு குறைந்து போகிறது. தானாக எதனையும் தத்துவ விசாரனை செய்து புரிந்து கொள்ளத் தக்க கல்வியறிவும் நமக்கு இல்லை என்பதால், அனுபவம் மிக்க நம் முன்னோர் சொன்ன வழியே சிறப்பு என ஏற்றுக் கொள்வதே நலம். உங்கள் வீட்டில் சாத்திரங்கள் அறிந்தவராய், அதன்படி நடக்கும் பெரியோர்கள்/ஆச்சார்யர்கள் இருந்தால், நீங்கள் புண்ணியம் செய்தவர்கள். அவர்கள் சொல்கிறபடி நடந்து கொள்ளுங்கள் நீங்கள் எதுவும் அறியாதவராக இருந்து அவர்கள் வழிகாட்ட நம்பிக்கையுடன் நீங்கள் நடக்கும் பட்சத்தில், அதனால் உண்டாகும் புண்ணியங்கள் மட்டுமே உங்களைச் சேரும்; பாவங்கள் உங்களுக்கு வழிகாட்டும் பெரியோர்கள்/ஆச்சார்யர்கள் என்பதால் அவர்கள் நன்கு ஆராய்ந்து தெளிந்த பின்னரே உங்களுக்குச் சொல்வார்கள்


எனவே யக்ஷப்ரஸ்னத்தில் சொல்லப்பட்ட அதே கருத்துதான். " பெருமை மிக்க, நம் முன்னோர்கள் (பெரியோர்) நடந்து சென்ற பாதையே நமக்கான (நேர்மையான) வழி." உங்கள் வீட்டு முன்னோர்கள் இது குறித்து என்ன சொன்னார்களோ, செய்தார்களோ அதனைக் கடைபிடியுங்கள். நம் சாத்திரங்கள் சொன்னபடி ஆச்சார்யனால் உபதேசம் செய்யப்பட்ட வகையில் செயலாற்றும் ஏதுமறியாத சிஷ்யன் செய்யும் அனைத்துக் காரியங்களுக்கான புண்ணியங்கள் மட்டுமே சிஷ்யனைச் சேரும். பாவங்கள் ஏதுமிருந்தால், அவை வழிகட்டும் ஆச்சார்யனையே சேரும் என்பதால், அவர்கள் ஆய்ந்தறித்து சிறப்பானதையே நமக்குச் சொல்வார்கள்"


இயல்பாகப் பார்த்தால், சாத்திரங்கள் சமுதாய நலவாழ்வுக்கான வழிகாட்டு நூல்களே. பெரும்பாலானவை சொல்லப்படும் நல்லனவற்றை இறை நம்பிக்கையோடு இணைத்து சொன்னால் மக்கள் கேட்பார்கள் என்ற எண்ணத்தில் நம் முன்னோர்களால், சொல்லப்பட்டவையே


இவற்றிலெல்லாம் நீங்கள் நம்பிக்கை உடையவரென்றால், நீங்கள் கர்த்தா (மரணச்சடங்கு சார்ந்த காரியங்கள் செய்பவர்) என்றால், லோகாயதமாக நீங்கள் ஏற்க வேண்டுவது


  • மன மொழி மெய் இவை மூன்றாலும் தூய்மையாக இருக்கும் நிலையில் மட்டுமே நம் பிரார்த்தனைகள் பலன் தரும். ஆலையத்தில் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கலாகாது. நீங்கள் ஆலையம் சென்றால், அங்கு உங்களைச் சந்திப்போர் உங்களிடம் உங்கள் வீட்டில் நடந்த மரணம் குறித்து உங்களிடம் விசாரிப்பார்கள் அல்லது விசாரிக்க வேண்டிய ஒரு கட்டாயத்துக்குத் தள்ளப்படுவார்கள் அந்த நிலையில் நீங்களிருவருமே இறைவனைக் குறித்த சிந்தனையில்லாது போகலாம் பிரார்த்தனை தடைப்படும். இது ஒரு சங்கடமான நிலையைத் தவிர்க்கும் வழி. எனவே மனம் மறந்து போகும்வரை ஆலையம் போன்ற பொது இடங்கள் நிகழ்ச்சிகள் இவற்றைத் தவிர்ப்பது நலம். மறதி என்பது இறைவன் கொடுத்த வரம். எனவே அந்த ஒரு வருடத்தில் நீங்கள் அந்த இழப்பைக் கடந்து வெளியில் வர வாய்ப்பிருக்கிறது.
  • அடுத்து அந்தக் காலம் முடியும் வரை 1 வருடம் அச்செயல்கள் செய்ய தடைகள் எதுவும் வரக் கூடாது மலையேறுதல், கடல் தாண்டுதல், வெளியூர்ப் பயணம் போவது இவற்றாலோ அல்லது பொது இடங்களில் எவறோடவது பிரச்சினை உண்டாகி அதனால் உங்களுக்கு உயிர் போகும் நிலை வந்து காரியங்கள் தடைப்படக் கூடாதென்ற எண்ணத்தில், இவை அனைத்தையும் தவிர்க்க பாதுகாப்பாக உங்கள் செயற்பாடுகள் இருக்க வேண்டுமென்று அவசியமின்றி வெளியில் போவது தடை செய்யப்பட்டது.
  • இதர வகையில் இறைவனைக் கூட எண்ணாமல், அந்த காலம் முழுவதும் உங்களுக்கு அவர்களைப் பற்றிய சிந்தனையே இருக்க வேண்டுமென்பது ஒரு நன்றிக்கடனாக அவர்களை மட்டுமே நினைப்பது. ஆனாலும் அந்தக் காலத்தில் சந்தியா வந்தனம் போன்ற அன்றாட நித்திய கர்மாக்களைச் செய்தாக வேண்டும்.
  • சொல்லப்பட்டபடி அவர்கள் மீது உங்களுக்குப் பாசம் இல்லாவிடினும் லோகாயதமாக அவர்கள் விட்டுச் சென்ற சொத்து, கடன் விவரங்களைக் குறித்தும், அவர் விட்டுச் சென்ற கடமைகளை நிறைவேற்றுவது குறித்தும் சிந்தனை செய்யக் கிடைத்த வாய்ப்பென்று எண்ணிக் கொள்ளுங்கள்.

இது குறித்து விவரமாக அறிந்து கொள்ள “மரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - N.R.Jayaraman” என்ற https://santhipriya.com/?br=https://santhipriyaspages.blogspot.com/2015/01/1.html இணைப்பைச் சொடுக்கவும்

 

- செபரா





Back
Top