என்ன அருமையான விளக்கங்கள். இதை இப்படி சமையல் என்று சொல்வது போல் அல்லம், ஏன், எப்படி என்று கேள்விகள் மூலமே பதில் பெறமுடியும்! இந்த பழக்க வழக்கங்கள் இருந்த காலத்தில் காது வழியே(கர்ண பாரம்பரியம்) மூலமே நடந்து பல காலம் பின்னாலேயே எழுத்து வடிவம் வந்த போது "ஏன்" என்பதுவும் சேர்கப்படவில்லை! இதுவே கண்டு விதி முறை காணல் (Inductive reasoning ) எனப்படுகிறது. ஆனால் ,அதுவே நடை முறை செய்முறை(deductive logic- algortihm) ஆகும்போது அதே எளிதில் பின்பற்றுகிறோம். இதை சங்கரே மண்டன மிஸ்ரருக்கு உணர்த்துகிறார்(நான் நேரில் பார்த்ததில்லை). யாகங்கள் போன்ற வெரும் கர்மாக்களால் பலன் இல்லை என்கிறார். ஆக, மூல காரணங்களைப் புரிந்து கொள்ளாமல், ஒருவித குற்ற உணர்வுடன் வைதீக காரியம் செய்வது எளிது. ஆனால் கர்த்தா(செய்பவர்) காலை-மாலை இரண்டு வேளையும் அதே போன ஆத்மாவை ஆவாகனம் செய்து, 10 உத்தரணி தண்ணீர்(பாத்யம்) விட்டு நமஸ்கரக்கிரோமா? இல்லையே! இது ஒரு நாள் லௌகிக கூத்துதான். ரிஷிகள் காலத்தில் அக்னி உபாசனை, பின்னால் மண் கலசத்தில் ஔபாஸனம், அப்பறம் ஆவணி அவிடடத்தில சமிதாதானம், இப்ப? ஆனால் இதைச் சொன்னால், ஐயோ நாஸ்திகன்(இந்து மதத்தில் ஆஸ்திகன்- நாஸ்திகன் இருபக்கம் உள்ள ஆத்ம நாணயம் என்பதை புரிந்து கொள்வதில்லை! முன்பு தெலுங்கில் 'நாதுடா' என்பதை தமிழில் "காதுடா" என்பார்கள். மந்திரங்களை அர்த்தம் புரிந்து கொண்டால்
स नः पितेव सूनवे अग्ने सूपायनो भव ।
सचस्वा नः स्वस्तये ॥९॥
Sa Nah Pite[aa-I]va Suunave-[A]gne Suupaayano Bhava | Sacasvaa Nah Svastaye ||9||
ஸ ந: பிதேவ ஸூன்வே அக்னே ஸூபாயனோ ஸசஸ்வா ந: ஸ்வஸ்தயே !
Meaning:
9.1: O Agni, like a Father to a Son, become (easily) accessible to us,
9.2: And support our Well-Being.
ஒன்றா சேர்ந்து ஓதும்போது (பஜனை மாதிரி) மனதில் நம்பிக்கை, உற்சாகம் ஏற்பட்டு மூளையில் எண்டார்பின், செரடோனின், டோபாமைன் போன்ற ஹார்மோன்கள் உற்பத்தியாகி, ஒருவித மன நிம்மதி பிறக்கவே இதை தினசரி வாழ்க்கை அங்கமாக்கினார்கள். பிராமணர் அல்லாதவர்கள் உடல் உழைப்பாலெ இதை அடைந்ததால் இதை அவர்கள் மேல் திணிக்கப் படவில்லை! ஒரு வியாபாரி, வெறகு வெட்டி, மருத்துவர் தங்கள் செய்யும் வேலைகளை நிறுத்தி, சந்தியா வந்தனம், ஔபாஸனம் பண்ணிட்டுவரேன் என்றால் அறுவை சிகித்சை மாடசாமி கதி என்னவாகும்? ஆகவே புரிந்து கொண்டு மனப்பூர்வமாக ஈடுபவர்களே ஆஸ்திகர், ஆசிரியர், சங்கீத வித்வான், சமையல் கலைஞர்கள். மற்றவர்கள் ஆபத்கால சந்நியாசிகளே! பெரிய குடும்பத்துக் சாப்பாடு போடுவதை அன்னதானம் செய்கிறேன் என்றால், அது கௌரப் பிச்சையே!