• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஆதித்ய ஹ்ருதயம்.

Status
Not open for further replies.
ஆதித்ய ஹ்ருதயம்.

முன்குறிப்பு:
அனைவரும் படித்துப் பயன் பெறவே இந்த
த் தொடர் தமிழிலேயே, சரியான உச்சரிப்புக்களுடனும், பொருளுடனும் அளிக்கப் படுகின்றது.

ஆதித்ய ஹ்ருதயம்.

"நான் ஒரு சாதாரண மனிதன்" என்றே தன்னைப் பற்றிக் கூறிக்கொண்ட ஸ்ரீ ராமபிரானுக்கு; ராம ராவண யுத்தத்தைக் காண வந்த அகஸ்தியரால் உபதேசிக்கப் பட்டது இந்த 'ஆதித்ய ஹ்ருதயம்.'

"இது புண்ணியம் வாய்ந்தது. எல்லாப் பகைவர்களையும் அழிப்பது. வெற்றியை அளிப்பது. மங்களம் நிறைந்தது. பாவங்களை நீக்குவது. கவலையும், துன்பத்தையும் போக்குவது. ஆயுளை வளர்ப்பது. மூன்று முறை இதை நீ ஜபித்தால் ராவணனை வெற்றி கொள்வாய்" என்று அகஸ்திய முனிவரால் ஸ்ரீ ராமனுக்கு அருளப்பட்டது.

ஆபத்துக் காலங்களிலும், மிகுந்த கஷ்டங்களிலும், பயம் ஏற்படும் சமயங்களிலும் இதை பக்தியுடன் ஓதினால் துன்பங்கள் விலகும். உள்ளத்தில் தைரியம் உண்டாகும். உடலில் புதிய சக்தி பிறக்கும். பயங்களும், கிரஹ பீடைகளும் கஷ்டங்களும் விலகி விடும்.
சகல சௌபாக்யங்களும் கிடைக்கும். கண் பார்வை நன்றாகத் தெரியும்.

'பல ஸ்ருதி'யுடன் சேர்த்து முப்பத்தொரு ஸ்லோகங்கள் ஆன இவற்றை தினமும் இரண்டு என்று நாம் காணுவோம்.

ஸ்ரீ ராம ஜெயம்.
 
Last edited:

ததோ யுத்3த4 பரிச்'ராந்தம்
ஸமரே சிந்தயா ஸ்தி2தம் |
ராவணம் சாக்3ரதோ த்3ருஷ்ட்வா
யுத்3தா4ய ஸமுபஸ்தி2தம் || (1)

தை3வதைச்'ச ஸமாக3ம்ய
த்3ரஷ்டும் அப்4யாக3தோ ரணம் |
உபாக3ம்யாப்4ரவீத்3 ராமம்
அக3ஸ்த்யோ ப4க3வான் ருஷி:|| (2)

எல்லா தேவர்களுடனும் கூடி யுத்தத்தைக் காண அங்கே வந்திருந்த அகத்திய முனிவர், அந்த சமயத்தில் யுத்தம் செய்ததால் மிகுந்த களைப்படைந்தவரும், யுத்தத்தின் காரணத்தால் மன வருத்தமும் கொண்டு நின்றிருந்தவரும், ராவணனைத் தன் எதிரே கண்டு மீண்டும் யுத்தத்திற்கு ஆயத்தம் செய்பவரும் ஆன ஸ்ரீ ராமனின் அருகே சென்று இங்ஙனம் கூறலானார்.


ஒன்றாவது மற்றும் இரண்டாவது ஸ்லோகங்கள் சேர்ந்தே பொருள் அளிப்பவை
 
ராம ராம மஹா பா3ஹோ
ச்'ருணு கு3ஹ்யம் ஸநாதனம் |
யேன ஸர்வானரீன் வத்ஸ
ஸமரே விஜயிஷ்யஸி ||
(3)

குழந்தாய்! ஸ்ரீ ராமா! உலகுக்கு இன்பம் அளிப்பவனே! அகன்ற தோள்களை உடையவனே! நீ போரில் சர்வ சத்ருக்களையும் ஜெயிக்க எந்த உபாயம் உண்டோ அந்த புராதன ரஹஸ்யத்தை உனக்கு நான் சொல்கின்றேன் கேள்!
 
ஆதி3த்ய ஹ்ருத3யம் புண்யம்
ஸர்வ ச'த்ரு விநாச'னம் |
ஜயாவஹம் ஜபேன் நித்யம்
அக்ஷய்யம் பரமம் சி'வம் || (4)

ஆதித்ய ஹ்ருதயம் என்று அழைக்கப்படும் அது புண்ணியம் வாய்ந்தது. எல்லாப் பகைவர்களையும் அழிப்பது.வெற்றியை அளிப்பது. அழிவில்லாதது. மங்களம் நிறைந்தது. இதை தினமும் ஜபம் செய்பவர்களை எல்லா நன்மைகளும் வந்து அடையும்.
 
ஸர்வ மங்க3ள மாங்க3ல்யம்
ஸர்வ பாப ப்ரணாச'னம் |
சிந்தா சோ'கப் ப்ரச'மனம்
ஆயுர்வர்த்3த4னமுத்தமம் ||
(5)

மங்களங்களுக்குள் எல்லாம் மங்களமானதும், எல்லா பாவங்களையும் அழிக்க வல்லதும், கவலைகளையும் துன்பங்களையும் துடைப்பதும், ஆயுளை வளர்ப்பதும் ஆன ஆதித்ய ஹ்ருதயத்தை எப்போதும் ஜபம் செய்ய வேண்டும்.
 
ரச்'மிமந்தம் ஸமுத்3யந்தம்
தே3வாஸுர நமஸ்க்ருதம் |
பூஜயஸ்வ விவஸ்வந்தம்
பா4ஸ்கரம் பு4வனேஸ்வரம் || (6)

கிரணங்களுடன் கூடி உதிப்பவரும் ; தேவர்களாலும், அசுரர்களாலும் வணங்கப் பெற்றவரும் ; ஒளியைத் தருபவரும் ; உலகத்தின் தலைவரும் ஆன சூரிய பகவானை பூஜிப்பாய் !
 
ஸர்வ தே3வாத்மகோ ஹ்யேஷ :
தே3ஜஸ்வி ரச்'மி பா4வன :|
ஏஷ தே3வாஸுர க3ணான்

லோகன் பாதி க3ப4ஸ்திபி4 : || ( 7 )

சூர்ய பகவான் எல்லா தேவர்களின் வடிவாமானவர். தேஜோ மயம் ஆனவர். கிரணங்களைப் பொழிகின்றவர். இவர் தேவர்கள் மற்றும் அசுரர்களின் சமூஹங்களையும் , அவர்களின் உலகங்களையும் தம் கிரணங்களால் காக்கின்றார்.
 
ஏஷ ப்3ரஹ்மச்'ச விஷ்ணுச்'ச
சி'வ : ஸ்கந்த3: பிரஜாபதி : |
மஹேன்த்3ரோ த4னத3 : காலோ
யமஸ் ஸோமோ ஹ்யபாம்பதி : || ( 8 )

இவரே பிரம்மா, விஷ்ணு, சிவன், ஸ்கந்தன், பிரஜாபதி, மகேந்திரன், குபேரன், காலமூர்த்தி, யமன், சோமன், வருணன் ஆகிய அனைத்து தேவ தேவதைகளும் ஆவர்.
 
பிதரோ வஸவ : ஸாத்4யா
ஹ்யச்'விநௌ மருதோ மனு : |
வாயூர் வஹ்னி ப்ரஜா ப்ராண :
ருது கர்த்தா ப்ரபா4கர: || (9)

இவரே பித்ரு தேவதைகள்; இவரே அஷ்ட வசுக்கள்; இவரே சாத்திய புருஷர்கள்; இவரே அஸ்வினி தேவதைகள்; இவரே மருத்துக்கள் ; இவரே மனு ; இவரே வாயு பகவான் ; இவரே அக்னி தேவன் .உலக மக்களின் உயிர்களையும் , ஆறு பருவங்களையும் படைப்பவர் இவரே. ஒளியைத் தருபவரும் இவரே.
 
ஆதி3த்ய: ஸவிதா ஸூர்ய :
க2க3 : பூஷா க3ப4ஸ்திமான் |
ஸுவர்ண ஸத்3ருசோ' பா4னூர்
ஹிரண்யரேதோ தி3வாகர: || (10)

அதிதியின் புத்திரர் ஆதித்யன் ஆன இவரே படைப்புக்கு உரிய ஸவிதா ;
செயல்களைச் செய்யத் தூண்டும் சூரியன்;
விண்ணில் சஞ்சரிக்கும் ககன்; மழையால் போஷிக்கும் பூஷா;
கதிர்களைக் கொண்ட கபஸ்திமான்;பொன் போல மின்னுன்
ஸுவர்ண ஸத்ருசன் ; பொன்மயமான பிரம்மாண்டத்தை தோற்றுவித்த பானு;
பொற்க்கிரணங்கள் கொண்ட ஹிரண்ய ரேதா;
பகலை உண்டாக்கும் திவாகரன்.
 
ஹரி த3ச்'வ : ஸஹஸ்ரார்சி :
ஸப்த ஸப்திர் மரீசிமான் |
திமிரோன்மத2ன ச'ம்பு 4:
த்வஷ்டா மார்தாண்ட3 அம்சு'மான் || (11)

பச்சை குதிரைகளை உடையவரும் ; ஆயிரம் கிரணங்களை உடையவரும் ; 'ஸப்த'
என்னும் குதிரையை உடையவரும் ; ஒளிக் கற்றைகளை உடையவரும் ; இருளினைப் போக்குகின்றவரும் ; மங்களத்தை அளிப்பவரும் ; எல்லாவற்றையும் அழிப்பவரும் ; அழித்தவற்றை மீண்டும் படைப்பவரும் இவரே.
 
ஹிரண்ய க3ர்ப4: சி'சி'ரஸ்
தபனோ பா4ஸ்கரோ ரவி : |
அக்3னி க3ர்போ4sதி3தே புத்ர
ச'ங்க2 சி'சி'ரநாச'ன :|| (12)

இவரே பிரம்மாண்டத்தின் நடுவில் திகழும் ஹிரண்ய கர்பர்;
தன்னைத் தொழுபவர்களின் உள்ளங்களைக் குளிரச் செய்பவர்;
உஷ்ணத்தால் எரிப்பவர் ; ஒளியைத் தருபவர் ; எல்லோராலும் துதிக்கப் படுபவர்; அக்னியைத் தனக்குள் அடக்கி உள்ளவர்; மாலை வேளையில் தாபம் தணிபவர் ; பனியை நாசம் செய்பவர்; அதிதியின் புத்திரரான இவரே.
 
வ்யோம நாத2ஸ் தமோ பே4தீ3
ருக்3 யஜுஸ் ஸாமபாரக3:|
க4ன வ்ருஷ்டிரபாம் மித்ரோ
விந்த்4ய வீதி2 ப்லவங்க3ம :|| (13)

இவரே ஆகாயத்தின் தலைவர்; தாமச குணமாகிய இருளை நீக்குபவர் ; ருக், யஜுர், ஸாம வேதங்களைக் கரை கண்டவர்; பெருமழை பொழிவிப்பவர்; நீரின் தோழர்; விந்திய பர்வதத்தின் வழிலே செல்பவர் ; விண்வெளியில் பயணம் செய்பவர்.
 
ஆதபீ மண்ட3லீ ம்ருத்யு :
பிங்க3ள: ஸர்வ தாபன : |
கவிர் விச்'வோ மஹாதேஜா
ரக்த: ஸ ர்வ ப4வோத்3ப4வ : || (14)

வெய்யிலாகாக் காய்பவர்; உருண்டை வடிவு உடையவர்; பகைவர்களை அழிப்பவர்; பொன்னிறம் கொண்டவர் ; அனைத்தையும் எரிப்பவர்; எல்லோராலும் புகழப்படுபவர்; உலகமாக உருக் கொண்டவர்;காந்தி மிகுந்தவர்;அனைவரிடமும் அன்பு கொண்டவர்; உலகம் உண்டாவதற்கு காரணம் ஆனவர். |
 
Hello VR,
The one great sloka,Manthra,OrJapa that has attracted my about Surya Bhagavan is the Gayathri Manthram.
It worships Surya bhagavan for giving confidence from the Darkness and driving away fear of dark.That is the greatness of Gayathri Mantra,Japa,Sloka.It fots into any of these forms.
alwan
 
நக்ஷத்ர க்3ரஹ தாராணாம்
அதி4போ விச்'வபா4வன : |
தேஜஸாமபி தேஜஸ்வி
த்3வாத3சா'த்மன் நமோஸ்துதே ||(15)

நக்ஷத்திரங்கள், கிரகங்கள் முதலிய தாரா கணங்களுக்கு அதிபர்;
உலகை நிலை நிறுத்துபவர்; ஒளியில் காந்திக்கும் காந்தியானவர் ;
இந்திரன், பகன், தாதா, அர்யமா, பூஷா, மித்திரன், வருணன், விஷ்ணு, அர்சிஸ், விவஸ்வான், த்வஷ்டா, ஸவிதா என்று பன்னிரண்டு மூர்த்திகளின் வடிவில் விளங்குபவர் இவரே.
இவருக்கு நமது நமஸ்காரங்கள் உரித்தாகுக.
 
நம : பூர்வாய கி3ரயே
பச்'சிமாயாத்3ரயே நம : |
ஜ்யோதிர் க3ணானாம் பதயே
தி3னாதி4பதயே நம : ||(16).

காலையில் கிழக்கில்
மலைகளுக்குப் பின்னால் உதிக்கும் உமக்கு
நமஸ்காரங்கள்;
மாலையில் மேற்கில் மலைகளுக்கு
ப் பின்னால் மறையும் உமக்கு நமஸ்காரங்கள்;
ஜோதி சமூஹங்களுக்கு அரசனும், பகலுக்குத் தலைவனும் ஆன உமக்கு நமஸ்காரங்கள்.
 
Last edited:
ஜயாய ஜய ப4த்3ராய
ஹர்யச்'வாய நமோ நம :|
நமோ நம : ஸஹஸ்ராம்சோ '
ஆதி3த்யாய நமோ நம : || (17)

வெற்றியின் வடிவினரும் , வெற்றியையும் க்ஷேமத்தையும் அளிப்பவரும் , பச்சை குதிரையை உடையவரும் ஆகிய உமக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம். ஆயிரம் கிரணங்களை உடையவரே ! அதிதியின் புத்திரரான ஆதித்யரே ! மீண்டும் மீண்டும் உமக்கு வந்தனம் .
 
நம உக்3ராய வீராய
ஸாரங்கா3ய நமோ நம : |
நம: பத்3ம ப்ரபோ3தா4ய
மார்
த்தாண்டா3ய நமோ நம :|| (18)

மிகுந்த கடுமையைப் பகைவர்களிடம் காட்டுபவரும் ; வீரம் மிக்கவரும் ; வான வெளியில் வேகமாக சஞ்சரிப்பவரும் ; தாமரை மலர்களை மலரச்செய்பவரும்; மார்த்தாண்டன் என்ற பெயர் பெற்றவரும் ஆகிய உமக்கு மீண்டும் மீண்டும் வந்தனங்கள்.
 
ப்3ரஹ்மேசா 'நாச்யுதேசா ' ய
ஸூர்யாயாதி3த்ய வர்சஸே |
பா4ஸ்வதே ஸர்வப4க்ஷாய

ரௌத்3ராய வபுஷே நம :||(19)

மும் மூர்த்திகளாகிய பிரம்மா, விஷ்ணு , சிவன் மூவரும் இணைந்து ஆதித்ய ஸ்வரூபர்களாகி மிகுந்த தேஜஸ்ஸுடன் விளங்குகின்றீர்கள். எல்லா ஜீவராசிகளையும் தன்னுள் ஒடுங்கச் செய்யும் ருத்திரனாகவும் விளங்கும் உங்களுக்கு நமஸ்காரம்.
 
தமோக்4னாய ஹிமக்4னாய
ச'த்ருக்4நாயாமிதாத்மனே |
க்ருதக்4நக்4னாய தே3வாய
ஜ்யோதிஷாம் பதயே நம :|| (20)

இருளைப் போக்குபவரும் ; பனியைப் போக்குபவரும் ; பகைவர்களை அழிப்பவரும் ;அளவிட முடியாத வடிவினை உடையவரும் ;செய் நன்றி கொன்றவரை நாசம் செய்பவரும் ; தேவதேவனும் ; ஒளிரும் பொருட்களின் தலைவனும் ஆகிய உமக்கு நமஸ்காரம்.
 
தப்த சாமீகராபா4ய
வஹ்னையே விச்'வகர்மணே |
நமஸ்தமோsபி4 நிக்4னாய
ருசயே லோக சாக்ஷிணே || (21)

காய்ச்சி உருக்கப்பட்ட பொன்னைப் போல ஒளிருபவரும்;
தீப் பிழம்பு ஆனவரும் ; உலகத்தின் செயல்கள் அனைத்தையும் புரிபவரும் ; அஞான இருளை அழிப்பவரும் ; ஒளி வடிவானவரும் ; அகில உலகுக்கும் சாக்ஷி ஆக உள்ளவரும் ஆனவருக்கு நமஸ்காரம்.
 
நாச'யத்யேஷ வை பூ4தம்
ததே3வ ஸ்ருஜதி ப்ரபு 4 : |
பாயத்யேஷ தபத்யேஷ
வர்ஷத்யேஷ க3ப4ஸ்திபி 4 :|| (22)

உண்டாக்கிய உலகத்தை இவரே அழிக்கின்றார் ;
பிரபு ஆகிய இவரே மீண்டும் அதை சிருஷ்டிக்கின்றார்.
தமது கிரணங்களால் நீரைப் பருகுகின்றார் ;
வெய்யிலாகக் காய்கின்றார் ; மழையாகப் பொழிகி
ன்றார்.
 
ஏஷ ஸுப்தேஷு ஜாக3ர்தி
பூ4தேஷு பரிநிஷ்டி2த:|
ஏஷ ஏவாக்3னிஹோத்ரம்

பலம் சைவாக்னி ஹோத்ரிணாம்
|| (23)


உயிர்கள் உறங்கும் போது அந்தர்யாமியாக இவர் விழித்து இருக்கின்றார்.
அக்னி வடிவாக இருந்துகொண்டு அக்னிஹோத்திரம் செய்பவருக்கு நற்பயனாகவும் உள்ளார்.
 
வேதா3ச்'ச க்ரதவச்'சைவ
க்ரதூனாம் ப 2லமேவ ச |
யானி க்ருத்யானி லோகேஷு
ஸர்வே ஏஷ ரவி ப்ரபு 4:|| (24)

வேதங்களும், யாகங்களும், யாகங்களின் பயனும்,உலகில் உள்ள கிரியைகள் எவையோ அவைகளும்,மற்றும் எல்லாமுமே ப்ரபு ஆகிய இந்த சூரிய பகவனே !
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top