`அந்த நாள்களை மறக்க முடியாது!' - கொரோனாவிலிருந்து மீண்டவரின் நம்பிக்கை வார்த்தைகள்
கடந்த 22ம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 24வயது இளைஞருக்குக் கொரோனா உறுதிசெய்யப்பட்டது. தொடர்சிகிச்சையின் காரணமாகக் குணமடைந்த அந்த இளைஞர் தற்போது வீடுதிரும்பியுள்ளார்.
அவரின் ஒத்துழைப்பே மிகவிரைவில் அவர் குணமடையக் காரணம் எனக்கூறும் மருத்துவர்கள், மிகுந்த மகிழ்ச்சியோடு அவரை ஊருக்கு அனுப்பிவைத்தனர். தன்னால் மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் சொந்த ஊரிலும் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ள அந்த இளைஞரிடம் பேசினோம்..
நீங்கள் எதற்காகத் துபாய் நாட்டுக்குப் போனீங்க.. அங்கு உங்களுக்குக் கொரோனா அறிகுறி எப்போ வந்துச்சு?
``டிப்ளோமா முடித்துள்ள நான், வேலை தேடி துபாய்க்குச் சென்றேன். அந்தநாட்டில் உள்ள `தேரா’ எனும் பகுதியில் தங்கியிருந்து வேலை தேடிவந்த நிலையில்தான் எப்படியோ கொரோனா நோய்த் தொற்று எனக்கு வந்துவிட்டது. பொதுவாக கொரோனாவுக்காகச் சொல்லப்படும் அறிகுறிகளான கடுமையான காய்ச்சல், தொண்டைவலி, சளி, வறட்டு இருமல் உள்ளிட்ட எவ்வித அறிகுறியும் இல்லை. துபாயில்கூட கொரோனா குறித்த விழிப்புணர்வு இல்லை. அதனால் ஆரம்பத்தில் 3 பேர்மட்டுமே இருந்த பாதிப்பு 49ஆக உயர்ந்தது.
ஆரம்பத்தில், லேசான தொண்டைவலி இருந்தது. தொடர்ந்து சளி, காய்ச்சல், இருமல் தொந்தரவு இருந்தது. இதனால் பயந்துபோய், துபாயிலுள்ள மருத்துவரிடம் காண்பித்ததில், அவர் கொடுத்த மருந்துகளைச் சாப்பிட்டதும் உடல்நிலை சரியாகிவிட்டது.
……………………………………………
நான் 18 நாள்கள் சிகிச்சையில் இருந்தபோது, முதல் இரண்டு பரிசோதனையில் பாசிட்டிவ் என்று வந்தது. அதனால் எனது உடல்நிலையிலும் சிக்கல் இருந்தது. சூழலை உணர்ந்த மருத்துவர்கள் வழக்கமான மருந்துகளை மாற்றி வேறு மருந்துகளை கொடுத்து முயன்றார்கள். அதன் விளைவாக அடுத்த மூன்று பரிசோதனைகளில் நான் விரைவில் குணமடைந்தேன்.
"நமது உடம்பைச் சரி செய்ய வேண்டிய அக்கறையும் கடமையும் நமக்குதான் இருக்கிறது. ஆனால், நமது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் அவர்களின் உயிரைப் பணையம் வைத்து ரிஸ்க் எடுக்கிறார்கள் என்பதை நேரில் கண்டவன் நான்" - அந்த இளைஞர்
நான் ஊருக்குக் கிளம்பும்போது, எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் எல்லோரும் கைதட்டி என்னை அனுப்பி வைத்தார்கள். அன்றைய நாள் நான் ரொம்ப சந்தோசமாக இருந்தேன். அதை இப்போதும் என்னால் நம்ப முடியவில்லை அவ்வளவு சந்தோஷமாக இருந்தது..
தொடர்ந்து உற்சாகமாக
குணமடைந்த உங்களை தற்போது என்ன வழிமுறைகள் ஃபாலோ பண்ணச் சொல்லிருக்காங்க?
கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டித்துள்ள நிலையில் மற்றவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்.?
என்பது உள்ளிட்ட நமது கேள்விகளுக்கு அவர் கூறிய பதில்களை அப்படியே நீங்கள் லைவாக கேட்கலாம்.. .
மேலும் படிக்க

கடந்த 22ம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 24வயது இளைஞருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. தொடர்சிகிச்சையின் காரணமாக குணமடைந்த அந்த இளைஞர் தற்போது வீடுதிரும்பியுள்ளார். | Trichy youth speaks about quarantine days and recovery from corona
www.vikatan.com