• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

அம்பிகையின் கூந்தல் இயற்கையில் மனமுள்ளது:

அம்பிகையின் கூந்தல் இயற்கையில் மனமுள்ளது:

அம்பிகையின் கூந்தலுக்கு , இயற்கிதிலேயே நறுமணம் உண்டு.

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில், கேசாதி பாத வர்ணனை என 4ஆவது சுலோகத்தில் இருந்து, அம்பாளின் அழகு ஸ்வரூபம் தியானம் செய்யப் படுகிறது.


ஸ்ரீமஹாத்ரிபுரஸுந்தரி எல்லையில்லாத அழகின் உருவமாய்த் திகழ்கிறாள். சுகந்தம் வீசும் சம்பக, புன்னாக, அசோக புஷ்பங்களின் நறுமணத்தை எல்லாம் இயற்கையிலேயே தன்னகத்தே கொண்ட கூந்தல் கற்றையை உடையவள் அம்பிகை.




பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணு சீர்க்
கறங்கு பூதகணம் உடைக் கண்ணுதல்
நறுங்குழல் மடவாளொடு நாள் தொறும்
எறும்பியூர் மலையான் எங்கள் ஈசனே


திருவெறும்பியூர் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்துப் பாடல் (6.91.3) ஒன்றினில் அப்பர் பிரான் மலரின் நறுமணத்தினை வென்ற கூந்தலை உடையவள் என்று அன்னையை குறிப்பிடுகின்றார். கடுஞ்சுடர்=பேரொளியை உடைய விளக்கு; படிந்து=நிலத்தில் வீழ்ந்து; ஒரு=ஒப்பற்ற; ஓத வேலி=அலைகளையுடைய கடல்; நிறை=மிகுதியாய் காணப்படுகின்ற; மருவை வென்ற=மலர்களின் மணத்தை வென்ற நறுமணம்;

கருவை என் மனத்திருந்த கருத்தை ஞானக் கடும்
சுடரைப் படிந்து கிடந்து அமரர்
ஏத்தும் உருவை அண்டத்து ஒரு முதலை ஓத வேலி
உலகின் நிறை தொழில் இறுதி நடுவாய் நின்ற
மருவை வென்ற குழல் மடவாள் பாகம் வைத்த மயானத்து
மாசிலா மணியை வாசத்
திரு எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்று அடையப் பெற்றேன் நானே
கொண்டீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (4.67.10) அப்பர் பிரான் நறுமணம் கமழ்ந்து கருமையும் மென்மையும் கலந்து காணப்படும் கூந்தலை உடையவள் என்று பிராட்டியை குறிப்பிடுகின்றார்.


விரை=நறுமணம்:: பாறி=சிதறி: வெருவர=அச்சம் கொள்ள: விலங்கல்=மலை, கயிலை மலை: ஞான்று=நாளன்று என்பதன் திரிபு: பருவரை= பருத்த மலை: நறுமணம் கமழ்ந்து கருமையும் மென்மையும் கலந்து காணப்படும் கூந்தலையும், ஒளிவீசும் அணிகளையும், வேல் போன்று நீண்டும் ஒளிபடைத்தும் காணப்படும் கண்களையும் உடைய உமையம்மை அச்சம் கொள்ளுமாறு, கயிலை மலையினை பேர்த்து எடுக்க அரக்கன் இராவணன் முயற்சி செய்த அன்று, அவனது பருத்த மலை போன்று விளங்கும் தோள்களும் தலைகளும் சிதறி விழுமாறு, தனது கால் விரல் ஒன்றினை கயிலை மலை மீது ஊன்றியவன் திருக்கொண்டீச்சரம் என்று அழைக்கப்படும் தலத்தில் உறையும் சிவபெருமான் ஆவார் என்பதே இந்த பாடலின் திரண்ட கருத்து..



விரைதரு கருமென் கூந்தல் விளங்கிழை வேல் ஒண்கண்ணாள்
வெருவர இலங்கைக் கோமான் விலங்கலை எடுத்த ஞான்று
பருவரை அனைய தோளும் முடிகளும் பாறி வீழக்
திருவிரல் ஊன்றினானே திருக்கொண்டீச்சரத்து உளானே


திருச்செம்பொன்பள்ளி தலத்தில் உறையும் தேவியின் திருநாமம் மருவார்குழலி என்பதாகும். மணம் பொருந்திய கூந்தலை உடையவள் என்பது இதன் பொருள். இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.25.1) மருவார் குழலி என்று குறிப்பிட்டு, திருஞானசம்பந்தர் மணம் கமழும் கூந்தலை உடைய தேவியை ஒரு பாகத்தில் வைத்தவன் என்று இறைவனை குறிப்பிடுகின்றார்.


மருவார் குழலி மாதோர் பாகமாய்த்
திருவார் செம்பொன்பள்ளி மேவிய
கருவார் கண்டத்து ஈசன் கழல்களை
மருவாதார் மேல் மன்னும் பாவமே


விசயமங்கை தலத்தின் அருளிய பதிகத்தின் (3.17) முதல் பாடலில் அம்மையை மருவமர் குழலி என்று திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். மரு=வாசனை. இயற்கையாகவே நறுமணம் சென்று அமரும் கூந்தலை உடைய தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். மாணிக்க வாசகரும் தனது கீர்த்தித் திருவகவலில் மருவார் குழலி என்று பிராட்டியை குறிப்பிடுகின்றார்.



மருவமர் குழல் உமை பங்கர் வார்சடை
அரவமர் கொள்கை எம் அடிகள் கோயிலாம்
குரவமர் சுரபுன்னை கோங்கு வேங்கைகள்
விரவிய பொழில் அணி விசயமங்கையே


மரு வளர் கோதை என்ற தொடர் மூலம், என்றும் குறையாது நறுமணம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கும் கூந்தலை உடைய அன்னை என்று கண்ணார்கோயில் பதிகத்தின் பாடல் ஒன்றினில் (1.101.4) திருஞானசம்பந்தர் கூறுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம். தரு=மரங்கள்; கானம்=காடு; துங்கம்=உயர்வு; மரங்கள் செழித்து வளர்ந்துள்ள காட்டில் வாழும் உயர்ந்த பெரிய யானை என்று பெருமானை எதிர்த்து வந்த யானையின் வலிமையை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.

கண்ணார்கோயில் கருவறையில் அமர்ந்துள்ள இறைவனை அடைந்து தொழும் மனிதர்கள் கற்றோர் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.



தரு வளர் கானம் தங்கிய துங்கப் பெருவேழம்
மரு வளர் கோதை அஞ்ச உரித்து மறை நால்வர்க்கு
உரு வளர் ஆலநீழல் அமர்ந்து ஈங்கு உரை செய்தார்
கரு வளர் கண்ணார் கோயில் அடைந்தோர் கற்றோரே


கச்சி ஏகம்பத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.133.1) நறுமணம் கமழும் கூந்தலை உடையவள் என்ற பொருள் பட, கந்தம் மல்கு குழலி என்று பிராட்டியை திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். காஞ்சி நகரத்து அடியார்களை எல்லையற்ற நற்குணங்கள் பொருந்திய அடியார்கள் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார்.



வெந்த வெண்பொடிப் பூசு மார்பின் விரி நூல் ஒரு பால் பொருந்த
கந்தமல்கு குழலியோடும் கடி பொழில் கச்சி தன்னுள்
அந்தமில் குணத்தார் அவர் போற்ற அணங்கினொடு ஆடல்புரி
எந்தை மேவிய ஏகம்பம் தொழுது ஏத்த இடர் கெடுமே

திருக்கோளிலி தலத்தின் மீது பதிகத்தின் பாடலில் (7.20.7) சுந்தரர் நறுமணம் உடைய கூந்தல் கொண்ட உமையம்மை என்று குறிப்பிடும் வண்ணம் வம்பமரும் குழலாள் என்று கூறுவதை நாம் இந்த பாடலில் காணலாம்.


This Post is for sharing knowledge only, no intention to violate any copyrights.
 
Last edited:

Latest ads

Back
Top