ஆடி மாதத்தில் வருகிற பௌர்ணமி ரொம்பவே விசேஷம். மாதந்தோறும் வருகிற பௌர்ணமியில் கோவிலுக்குச் சென்று, வழிபடுவதும் விசேஷம்.
ஆடி மாத பௌர்ணமியான நாளைய தினம் அம்மன் கோவில்களில் விசேஷ பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறும்.
ஆடி மாத பௌர்ணமி என்பது சிவ வழிபாட்டுக்கு மட்டுமின்றி அம்மன் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறும்.
பௌர்ணமி தினங்களில் அம்பிகை வழிபாடு மிகவும் சிறப்பானது. அன்னை தேவி பராசக்தியை, இந்த ஒளிமயமான பௌர்ணமி தினத்தில் பூஜைகள் செய்து வழிபாடு செய்யும்போது அன்னையின் பரிபூரண அருள் கிடைக்கும்.
பௌர்ணமி அன்று கோவில்களிலும், வீட்டிலும் விளக்கேற்றி வழிபடுவதால் நிறைய நற்பலன்களை அடைய முடியும்.
அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்து, புடவை சாற்றி, பொங்கல் படையலிட்டு வழிபட்டால் குடும்பத்தில் வளம் பெருகும். நிம்மதி குடிகொள்ளும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும்.
அதேபோல், ஞானக் கடவுளாம் ஸ்ரீஹயக்ரீவர் அவதரித்தது ஆடி பௌர்ணமி என்கிறது புராணம். எனவே ஆடி பௌர்ணமி நாளில், ஸ்ரீஹயக்ரீவரை வழிபடுவதால் அஞ்ஞானம் நீங்கும்; குழந்தைகள் கல்வியில் ஜொலிப்பார்கள். கல்வியும், ஞானமும் கிடைத்து சகல ஐஸ்வர்யங்களுடனும் வாழலாம்...!
ஆடி பௌர்ணமியின் சிறப்பு :
நாளைய தினம் பெண்கள், அம்மன் கோவில்களில் காலையும், மாலையும் விளக்கேற்றி வழிபட்டால் குடும்பத்தில் நிம்மதி தவழும். தரித்திரம் விலகும் என்பது ஐதீகம்.
ஆடி மாத பௌர்ணமி தினமான அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு உணவேதும் அருந்தாமல் விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். வீட்டின் பூஜையறையில் அம்பாள் படத்திற்கு விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். மேலும், அருகிலுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று பூக்களால் அர்ச்சனை செய்து சிவப்பு மற்றும் மஞ்சள் கலந்த வஸ்திரம் சாற்றி, சிவப்புக்கல் ஆபரணம் அணிவித்து வழிபாடு செய்வது சிறந்தது.
ஆடி பௌர்ணமி தினத்தன்று அம்பிகைக்கு பாலாபிஷேகம் செய்து, வாழைப்பழம் கலந்த சாதத்தை நைவேத்தியம் செய்து வழிபாடு செய்வது மிக அற்புதமான பலன்களை கொடுக்கவல்லது. பின்பு நைவேத்தியப் பிரசாதத்தை கோயிலில் உள்ள பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும்.
இவ்வாறு ஆடி பௌர்ணமி தினத்தன்று விரதமிருந்து வழிபடுவதால் குழந்தைப்பேறு கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு குழந்தை பாக்கியங்கள் உண்டாகும்.
வியாபாரங்களில் எதிர்ப்புகள் நீங்கி லாபங்கள் பெருகும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.