• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஆண்டாள் வாக்கு!

Status
Not open for further replies.
ஆண்டாள் வாக்கு!

ஆண்டாள் வாக்கு!

Ramesh Rajagopalan


Jul 10, 2012



ண்டாள் பெரியாழ்வாரைவிட ஏற்றமுடையவள். ஏன் ஏற்றம் என்றால், அவளுடைய ஸ்ரீஸ¨க்தியினால் (திவ்ய படைப்புகளால்) ஏற்றம்; அவளுடைய அனுஷ்டானத்தால் ஏற்றம். அவள் சாக்ஷ£த் பூமிபிராட்டியின் அவதாரம்.

சீதாதேவி எங்கேயாவது ஸ்தோத்திரம் செய்து- பாசுரங்கள் பாடி பகவானை ஆராதித்தது உண்டா? அவள் அப்படி எதுவும் செய்யவில்லை. ஆனால், தான் செய்யாததை தன்னுடைய சகோதரனைக் கொண்டு செய்ய வைத்தாள். 'சீதைக்குச் சகோதரன் உண்டா என்ன! கல்யாண தருணத்தில்கூட பொரி இட எவரும் பக்கத்தில் இருக்கவில்லையே..!’ என்று தோன்றும்.


'வல்மீகத: ஸ்ரவணதோ லஸ¨தாத்மநஸ் தே’ என்று கோதா ஸ்துதியில் சொல்கிறார் ஸ்வாமி தேசிகன் (ஸ்லோகம் 7).


[TABLE="align: right"]
[TR]
[TD][/TD]
[/TR]
[/TABLE]
புற்று (வல்மீகம்) பூமிக்குக் காது போன்றது. அந்தக் காதிலிருந்து தோன்றியவர் வால்மீகி. சீதாபிராட்டியும் பூமியில் இருந்து தோன்றியவள் அல்லவா? எனவே, அவளுக்கு பூமியின் காதிலிருந்து தோன்றிய வால்மீகி சகோதரர் ஆகிறார். அவரைக் கொண்டு ஆதி காவியமான ராமாயணத்தைப் பேச வைத்து ஆனந்தித்தாள் சீதாபிராட்டி. தான் ஒன்றும் பாடவில்லை; ஆனால்,
சகோதரனைக் கொண்டு பாடவைத்தாள்.

கிருஷ்ணாவதாரத்தை எடுத்துக்கொள்வோம். அதில் ஸ்ரீமகாலட்சுமி ருக்மிணியாக வந்தாள். ஏதாவது சொன்னாளா என்றால்... சப்தபதீகரண மந்த்ரார்த்தத்தை நினைவூட்டும் ஏழு ஸ்லோகங்கள் சொன்னாள். பாகவதத்தை இரும்பு என்பார்கள். அதிலும், இந்த ஏழு ஸ்லோகங்கள் மிக மிகக் கடினமானவை. ஆத்ம சமர்ப்பணத்துக்காக பகவானிடத்தில் பிரார்த்தித்த ஏழு ஸ்லோகங்கள் அவை. ருக்மிணி வேறு எதுவும் பாடவில்லை.


p28b.jpg
ஆனால், ஆண்டாளோ சமஸ்த வேத அர்த்தங்களை திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்று 173 பாசுரங்களில் பாடி, எல்லோருக்கும் பரதத்துவம் புரியும்படியாக விளக்கினாள். ஆகவே, ஆண்டாளின் திவ்ய ஸ¨க்திக்கு ஏற்றம் உண்டு. அதனால், மற்ற பிராட்டிமார்களைக் காட்டிலும் இவள் ஏற்றம் உடையவள்.


அதேபோல் சீதா திருக்கல்யாணம், ருக்மிணி திருக்கல்யாணம் என்கிறோமே... அவற்றைவிட ஆண்டாள் திருக்கல்யாணத்துக்கு ஏற்றம் உண்டு.


பகவான், ஸ்ரீராமனாக- மனுஷ்யனாக வந்து பிறந்தான். மகாலட்சுமியும் சீதையாக ஜனக குலத்தில் பிறந்தாள். அவனும் மனுஷ்யன்; இவளும் மனுஷி. இருவருக்கும் கல்யாணம் நடந்தது. அதேபோல், கிருஷ்ண னாக பகவான் அவதரித்தான். மகாலட்சுமியும் ருக்மிணியாக வந்து பிறந்தாள். ருக்மிணி கல்யாணம் நடந்தது.


ஆனால், ஆண்டாள் அவதரித்தபோது, பகவான் ராமனாகவோ கிருஷ்ணனாகவோ வந்து பிறந்தானா என்றால், இல்லை. திருக் கோயிலில் அர்ச்சா ரூபமாய் படுத்துக் கொண்டிருந்த எம்பெருமானைத் தட்டி எழுப்பி, அவரைக் கல்யாணம் பண்ணிக் கொண்டாள். ஆகவே, மற்றைய ஸ்ரீதேவிகளைக் காட்டிலும் பூதேவியான ஆண்டாளின் கல்யாணம் ஏற்றமுடையது.


மற்ற ஆழ்வார்கள் எல்லாம், பகவானே வந்து தன்னுடைய வடிவழகைக் காட்டியபோது, அதை அனுபவித்துப் பாடினார்கள். ஆண்டாளோ அந்த இறைவனையே எழுப்பி, தன்னுடைய பார தந்த்ரியத்தை- பகவானுக்கு தான் அடிமை என்பதை எடுத்துக் காட்டினாள். அதனால், ஆழ்வார்களின் ஸ்ரீஸ¨க்தியைவிட ஆண்டாளின் ஸ்ரீஸ¨க்திக்கு ஏற்றம் அதிகம்.



அஞ்சுகுடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தஞ்செயலை விஞ்சி நிற்கும் தண்மையளாய்ப்
பிஞ்சாய்ப் பழுத்தாளை...



(ஸ்ரீமணவாள மாமுனிகள் இயற்றிய உபதேச ரத்தினமாலை, 24-வது ஸ்லோகம்) என்ற வரிகளுக்கேற்ப, இளம் வயதிலேயே எம் பெருமானிடம் ஈடுபட்டவளான ஸ்ரீஆண்டாள் உயர்ந்தவள்.


பால்யாத் ப்ரப்ரிதி ஸ¨ஸ்நிக்தோ
லக்ஷ்மணோ லக்ஷ்மிவர்தந:
ராமஸ்ய லோகராமஸ்ய ப்ராதுர்ஜ்யேஷ்யஸ்ய நித்யஸ:

(வால்மீகி ராமாயணம் 1.18:27)


- இளம் வயதிலிருந்து ஸ்ரீராமனுடன் இருந்து கைங்கர்யம் செய்தவன் லட்சுமணன்; ஸ்ரீராமனை விசேஷமான கைங்கர்யத்தால் ஆராதித்து மகிழ்வித்தவன் என்கிறது ராமாயணம்.


ஆண்டாளுக்கும் இளம் வயதிலிருந்து (பிஞ்சி லிருந்து) எம்பெருமானைப் பற்றிய ஞானம் மனதில் பதிந்துவிட்டது.


பெரியாழ்வார் கிருஷ்ண பக்தி மிக்கவர். அவர், ஸ்ரீகிருஷ்ண சரித்திரத்தை மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்ல, அதைக் கேட்ட ஆண்டாளுக்கு அந்த இறைவனையே கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை பிறந்தது. ருக்மிணிக்கு எப்படி ஆசை பிறந்ததோ... அதைப் போன்றே, ஆண்டாளுக்கும் பகவானின் திருக்கதையைக் கேட்ட மாத்திரத்தில், அவரையே கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தது.


p31.jpg
நமக்கும் பகவானின் சரித்திரத்தைக் கேட்டமாத்திரத்தில் அவனைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் எனும் ஆசை வரவேண்டும். எப்போது கல்யாணம் என்றால்... உயர்ந்த வானிலவரசில் மோக்ஷகதியில் அவனுடன் நின்று, அவனை அனுபவிக்கும் உயர்ந்த நிலை ஏற்படும்போது!


நாம் பல பெயர்களுடன் இந்த லோகத்தில் வாழ்ந்து வருகிறோம்.ஆனால், நமக்கெல்லாம் உபநிஷத் ஒரு பெயர் வைத்துள்ளது. அப்படி என்ன பெயரென்றால்... வாழாவெட்டிகள்! ஏனென்றால், பகவானால் கைவிடப்பட்டு இந்த ப்ரக்ருதி மண்டலத்தில் அல்லலுறுகிறோமாம்!

பகவானே நம்முடைய உண்மையான பதி! அவனைத்தான் நாம் அடைய வேண்டும். அவனை அடையும் நாள்தான் உயர்ந்த நாள். அந்த நாளுக்காக தினமும் நாம் பிரார்த்தனை பண்ண வேண்டும்.



இப்படி பகவானை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம், பிஞ்சு உள்ளத்திலேயே ஆண்டாளுக்குப் பதிந்துவிட்டது. அதற்காகப் பல லீலைகள் புரிந்தாள்.

அவரைப் பலவிதமாகப் பிரார்த்தனை செய்தாள். அவளுடைய பிரார்த்தனை சமஞ்ஜஸம். ஏனெனில்... புருஷர்கள் புருஷனை விரும்புவதைவிட, ஒரு ஸ்திரீ புருஷனை விரும்பினால் அது ஏற்றமுடையது.


கோதா ஸ்துதியில் 'போக்தும் தவ ப்ரியதமம் பவதீவ கோதே’ என்கிறார் ஸ்வாமி தேசிகன் (ஸ்லோகம் 8).


ஆழ்வார்கள் பராங்குச நாயகியாக, பரகால நாயகியாக நாயகி பாவத்தை ஏற்று, தன்னைப் பெண்ணாக பாவித்து பகவானிடம் தன்னுடைய ஆரத்தியைத் தெரிவித்தார்கள். ஆண்டாளோ பிறவியிலேயே பெண்ணான காரணத்தால் அவளுடைய வாக்குக்கு ஏற்றம் அதிகம்.


ஸ்ரீகிருஷ்ணனுடைய வாக்கைக் காட்டிலும் ஆண்டாளுடைய வாக்குக்கு ஏற்றம் அதிகம்.

ஸ்ரீகிருஷ்ணன் சொன்ன கீதையை எல்லோரும் புரிந்துகொள்வது கடினம். ஆனால், திருப்பாவையை எளிதாக எல்லோரும் அர்த்தம் புரிந்துகொள்ளலாம். ஸ்ரீகிருஷ்ணன் சொன்னதோ 700 ஸ்லோகங்கள். ஆண்டாள் சொன்னதோ எளிதான 30 பாசுரங்கள்.


ஸ்ரீகிருஷ்ணன் ஆரம்பத்திலிருந்து கடினமான விஷயங்களைப் பேசி, கடைசியில் முடிக்கும்போது 'மாம் ஏகம் சரணம் வ்ரஜ’ என்றான். இதை முதலிலேயே சொல்லியிருக்கக் கூடாதோ! கடினமான, புரியாத விஷயங்களை வளவளவெனச் சொல்லிவிட்டு, கடைசியில் சுலபமான விஷயத்தைக் கொண்டு வந்து வைத்தான். அதுவே பகவத் கீதையின் சரம ஸ்லோகம். ஆனால் ஆண்டாள், 'மாம் ஏகம் சரணம் வ்ரஜ’ என்பதை, 'நாராயணனே நமக்கே பறை தருவான்’ என்று மிக அற்புதமாக வலியுறுத்திவிட்டாள். கண்ணன் கடைசியில் சொன்னதை, ஆண்டாள் திருப்பாவையின் முதல் பாடலிலேயே சொல்லிவிட்டாள். நமக்குத் தெரிய வேண்டியது அதுதானே!


முக்கியமாகத் தெரியவேண்டிய விஷயத்தை முதல் பாசுரத்திலேயே விளக்கிவிட்டதால்,

ஸ்ரீகிருஷ்ணனுடைய வாக்கைக் காட்டிலும் ஆண்டாளின் வாக்குக்கு ஏற்றம் அதிகம்.

அடியேன் ,
ரமேஷ் ராஜகோபாலன்





https://groups.yahoo.com/neo/groups/chicago-local-group/conversations/messages/402
 
Dear Mr PJ

Thank you for bringing very informative articles though I cannot say I always comprehend everything fully. Sometimes discussions may take tangential turns due to the way the forum works. However I want you to know that your contribution is appreciated ..
 
Dear Mr PJ

Thank you for bringing very informative articles though I cannot say I always comprehend everything fully. Sometimes discussions may take tangential turns due to the way the forum works. However I want you to know that your contribution is appreciated ..

Thanks for your comments Sri a- TB Sir
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top