Padmanabhan Janakiraman
Member
ஆறு கால பூஜையின் தாத்பர்யம் .
சிவபெருமானை முழு முதற்கடவுளாக வணங்கும் சிவநெறி சைவ சமயத்தில் ஆறு கால பூஜை ஆலயங்களில் ஆகம முறைப்படி தினசரி அடிப்படையில் நடைபெறுகின்றன. ஆறு கால பூஜை என்பது தெரியும். ஆனால், அதன் அடிப்படை காரணம் என்னவென்பதைத் தெளிவாக தெரிந்து கொள்வோம்.மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். இது வைகறை, காலை, உச்சி, மாலை, இரவு, அர்த்தஜாமம் ஆகிய ஆறு பொழுதுகள் கொண்டது. நாம் ஓர் ஆண்டாக கருதும் தேவர்களின் ஒரு நாளின் வைகறைப் பொழுதானது மார்கழி மாதமாகும். அந்த மாதத்தில் விடியற்காலையில் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. சைவ சமயத்தில் மார்கழி மாதத்தில்தான் ஆருத்ரா தரிசனம் அபிஷேகம் நடைபெறும். அடுத்து, மாசி மாதமானது தேவர்களின் காலைப் பொழுதாகும். மாசி மாத பூர்வபட்ச சதுர்த்தசி திதியில் இறைவனுக்கு காலை நேரத்தில் அபிஷேகம் நடைபெறும்.
தேவர்களுக்கு சித்திரை மாதத்தில் வரும் உச்சிக்காலம். எனவேதான் சித்திரை மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆனி மாதம் தேவர்களுக்கு மாலைப் பொழுது என்பதால் ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் இறைவனுக்கு மாலை வேளையில் அபிஷேகம் செய்யப்படுகிறது.
This Post is for sharing knowledge only, no intention to violate any copyrights.