உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே !
சீத்தலைச் சாத்தனாருடன் 60 வினாடி பேட்டி
மணிமேகலை காப்பியம் படைத்த புலவரே, பசி வந்திட மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காமுறுதல் ஆகிய பத்தும் பறந்துபோகும் என்று அவ்வையார் கூறுகிறாரே!
குடிப் பிறப்பு அழிக்கும்; விழுப்பம் கொல்லும்;
பிடித்த கல்விப் பெரும்புணை விடூ உம்;
நாண் அணி களையும்;மாண் எழில் சிதைக்கும்;
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப் பிணி என்னும் பாவி (மணி 11-76)
அட,உங்கள் கருத்தும் அதுதானா ! சோழ மன்னன் காந்தமன் வேண்டியதால் அகத்தியர் தனது தண்ணீர் கலசத்தைக் கவிழ்க்கவும் காவிரி உற்பத்தியானதாமே!
கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட
அமர முனிவன் அகத்தியன் தனாது
கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை (மணி. பதிகம் 11-10)
காவிரி நதி ஜீவ நதியா?
கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
தான் நிலை திரியாத் தண்டமிழ் பாவை
அறம் அல்லது தர்மம் என்றால் என்ன, புலவரே?
அறம் எனப் படுவது யாது எனக் கேட்பின்
மறவாது இது கேள் மண் உயிர்க்கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல் (மணி 25-228)
Food, Shelter and clothing are three essential things என்று இன்று எல்லோரும் சொல்லுவதை 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சொன்ன பேரறிஞரே, பரசுராமனின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் என்று காந்தன் என்னும் சோழனை அகத்தியர் ஒளிந்துகொள்ளச் சொன்னாரா?
மன் மருங்கறுத்த மழுவாள் நெடியோன்
தன் முன் தோன்றற்காதொளி நீ யெனக்
கன்னி ஏவலிற் காந்த மன்னவன்
அமர முனிவன் அகத்தியன் ரனாது
துயர் நீங்கு கிளவியின் யாறேன் றறவும் 11-25
உங்கள் காலத்தில் யவனர்களும் தமிழர்களுடன் வேலை செய்தார்களா?
மகத வினைஞரும் மராட்டக் கம்மரும்
அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்
தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடி
செல்வத்தின் பயனே ஈதல் என்று புலவர்கள் கூறுகின்றனரே? அதிலும் தானத்தில் சிறந்தது அன்ன தானமா?
ஆற்றுனர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண்தினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (மணி.11-92)
அருமையான வாசகம். சரியான அரசன் இல்லாவிடில் நாட்டில் என்ன நடக்கும்?
கோல் நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாரிவறங்கூரும்
மாரிவறங்கூரின் மன் உயிர் இல்லை
மன் உயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன்
தன்னுயிர் என்னும் தகுதி இன்றாகும்
தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த
அவத்திறம் ஒழிக (மணி 7-8)
தொல்காப்பியர் ஆறு அறிவு படைத்த மனிதன் பற்றிக் கூறுகிறார். நீங்களும் உயிர்களை ஆறு வகையாகப் பிரித்திருக்கிறீர்களா?
பல்லுயிர் அறுவகைத் தாகும்
மக்களும் தேவரும் நரகரும் பிரமரும்
தொக்க விலங்கும் பேயுமென்றே (30-56)
கோவலன் கொலையுண்டவுடன் மாதவியை அறவண அடிகள் எப்படித் தேற்றினார்?
பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும் பேர் இன்பம்
பற்றின் உறுவது முன்னது பின்னது
அற்றோர் உறுவது அறிக (2-64)
அகத்திய முனிவன் வேண்டியதால் சோழ மன்னன் 28 நாள் இந்திர விழாவை பூம்புகாரில் ஏற்பாடு செய்தது உண்மைதானா?
ஓங்குயர் மலயத்து அருந்தவன் உரைப்பத்
தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்
விண்ணகர் தலைவனை வணங்கி முன்னின்று
மண்ணகத்து என்றன் வான்பதி தன்னுள்
மேலோர் விழைய விழாக் கோளெடுத்த
நாலேழ் நாளினும் நீன்கனி துறைகே
அமரர் தலைவன் ஆங்கது நேர்ந்தது (மணி 1.11-39
அமுத சுரபி என்னும் அற்புத கலசத்தால் ஏழை எளியவர்களுக்கு உணவளித்த மணிமேகலை யார் யாருக்கு உணவு கொடுத்தாள்?
காணார், கேளார், கால் முடப் பட்டோர்
பேணுநர் இல்லோர் பிணி நடுக்குற்றோர்
யாவரும் வருக என்று இசைத்துடன் ஊட்டி (மணி 13-111)
அற்புதம், அற்புதம் ! 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சமூக சேவை என்ன என்பதை தமிழன் தான் உலகுக்கே கற்பித்தான் போலும்!