Vaagmi
0
ஏழு வகை ஸ்நானங்கள்
This series of posts are meant for those who are interested in such matters. If you have no implicit faith in shastras these are not for you. Please skip. Do not waste time.
காலம், தேசம் உடல் நிலை இவற்றுக்கொப்ப ஏழு வகை ஸ்நானங்கள் சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டுள்ளன.
தேவ, பித்ரு கார்யங்களை செய்ய உடல் சுத்தியும் மன சுத்தியும் அவசியம். ஊடல் சுத்தியின்றி மனசுத்தி கைகூடாது. எனவே ஸ்நானம் முக்கியமாகிறது. ஏழுவகை ஸ்நானங்கள் என்னென்னவென்று பார்ப்போம்:
1.வாருண ஸ்நானம்: ஜலத்தில் அமிழ்ந்து தலை முழுகுவது.
2.பார்த்திவ ஸ்நானம்: "ம்ருத்திகேஹநமே பாபம்" என்று தொடங்கும் மந்த்ரங்களால் தேஹம் முழுவதும் சுத்தமான மண்ணைப் பூசிக்கொள்வது.
3.ஆக்நேயம்: அக்னிஹோத்திர பஸ்மத்தை "ஈசானம்" முதலிய மந்த்ரங்களால் உடலில் பூசுவது
4.வாயவ்யம்: பசுக்களின் குளம்புத்தூளிகளை கோஸாவித்ரியால் ஜபித்து உடம்பில் பூசிக்கொள்வது.
5.திவ்ய ஸ்நானம்: உத்தராயண மத்யத்தில் வெயிலுடன் கூட மழை பெய்யும்போது அதில் நனைவது.
6.மந்த்ர ஸ்நானம்: "ஆபோஹிஷ்டா" என்னும் மந்த்ரத்தில் முறையே ஒவ்வொரு பாதத்தால் கால், தலை, மார்பு, தலை, மார்பு, கால், தலை இவற்றில் தீர்த்தத்தால் ப்ரோக்ஷித்துக்கொள்வதாம்.
7.மாநஸம்: சங்க சக்ர தரனாய் சூர்யமண்டல மத்தியில் ஸுவர்ணச்சாயையுடையவனாய் பகவான் எழுந்தருளியிருப்பதாகவும் அவர் திருவடிப் பெருவிரலிலிருந்து கங்கை ப்ரவஹித்து ப்ரஹ்மரந்த்ரத்தின் வழியாய் தன் தேஹத்தில் விழுவதாகவும்,அதனால் தன் தேஹத்தின் உள்ளும் புறமுமுள்ள எல்லா மலமும் கழிந்துவிட்டதாகவும் த்யானம் செய்வதேயாம்.
இவை தவிர, இரண்டு கால்கள், இரண்டு கைகள், முகம் இவைகளை அலம்புவது பஞ்சாங்க ஸ்நானம் எனப்படுவதாம்.
ஈரத்துணியால் உடம்பு முழுதும் துடைத்துக்கொள்வது காபில ஸ்நானம் எனப்படும்.
புண்ட்ரம் தரிப்பது கூட ஒரு ஸ்நானம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஈர வஸ்த்ரத்தோடு ஒரு காரியமும் செய்யலாகாது.
வேறு உலர்ந்த வஸ்த்ரமில்லை என்றால் ஈர வஸ்த்ரத்தை ஏழு தடவை காற்றில் உதறிவிட்டு உபயோகிக்கலாம். அது உலர்ந்த வஸ்த்ரத்துக்கு சமமாக பாவிக்கப்படும்.

Last edited: