ஒரு ' டிவி ' புலம்பல்....!! [ tvk ]
ரொம்ப நாட்களுக்கு பிறகு டிவி யில் வரும் புதிய திரைப் படங்களை கொஞ்சம் நேரம் பார்க்கலாம் என்று முடிவெடுத்து ஆன் செய்தால் .... அது என்னங்க கதாநாயகனின் காதலியை கொலை செய்யும் / கடத்தும் வில்லன் கும்பல் ... அவர்கள் எங்கே கடத்திச் சென்றிருப்பார்கள் என்பதை தெரிந்துக் கொண்டு அங்கே தனியே ஆஜராகும் கதாநாயகன் ..... கதாநாயகனை விடுத்து மற்ற எல்லா இடங்களிலும் டுப்பு டுப்பு என்று வெடித்துச் சிதறும் தோட்டாக்கள் ... 10 வில்லன்கள் இருந்தாலும் ஒவ்வொருத்தராக கதாநாயகனை நோக்கி ஓடி வந்து அடி வாங்கிச் சாகும் வில்லன் அல்லக்கைகள் ( ஒண்ணா ஓடி வந்தா கதாநாயகனை பதம் பார்க்கலாமே )
ஐயோ தாங்க முடியலையேன்னு இன்னொரு சானல் மாத்தினா .... என் மீராவை எதுக்குடா கொன்னீங்க அப்படின்னு அதில் ஒரு கதாநாயகன் கேட்க ... என் சுவாதியை மட்டும் கொல்லலாமா அப்படின்னு பதிலுக்கு இன்னொருத்தன் கேட்க .... அய்யயோ ... இது என்னப்பா கொடுமைன்னு வேற சானல் மாத்தினா ....
அங்க குண்டு வைச்சு கொலை செய்யணும் , இங்க குண்டு வைச்சி கொலை செய்யணும்னு சதி திட்டம் தீட்டுற வில்லன் கும்பல் காட்சிகள் ... அடக் கருமமே அப்படின்னு இடையில் சில சானல்களுக்கு போனா ....
பழைய அரண்மனை மாதிரி ஒரு செட் ... அதில் ஒரு குடும்பம் ... அந்தக் குடும்பத்தில் பெரிய பொட்டு வைத்துக் கொண்டு கண்களை உருட்டி உருட்டி குடும்பத்தை சீரழிக்கத் துடிக்கும் குடும்பப் (?) பெண்மணிகள் ... நீ நாசமா போகணும் ... உன் வம்சமே இருக்கக் கூடாது ... அப்படி இப்படின்னு பின்னால இடி இடிக்கும் பேக் கிரவுண்டு சவுண்டுடன் டயலாக் .... சிட்டிபேன்க் மார்கெட்டிங் மேனேஜர் கணக்காக ஒரு சோப்ளாங்கி ஹிந்தி மாடல் கதாநாயகனாக வைத்து அவனை விட குறைவான லிப் ஸ்டிக் அணிந்த பாவப் பட்ட இளம் பெண் அவனது குடும்பத்தினரால் கொடுமை படுத்தப் படுவதை மைய்யமாக வைத்து ஒரு சீரியல் ....
தெய்வமே ... இதற்கு ஒரு விடிவே இல்லையா என்று நினைத்தால் ... கவுதம் மேனன் வகையறாக்களின் டார்ச்சர் ... டிப் டாப் டிப் டாப் என்று சத்தம் போட்டப் படி வில்லன்கள் எல்லோரும் கோட்டு சூட்டு அணிந்திருக்க நடந்துச் செல்ல பார்களில் அவர்களை சந்தோஷ மூட்டுகிறேன் பேர்வழி என்று தரையில் படுத்த படியே துடைக்கும் நடனம் ... நம்ம ஊருக்கும் இந்த கோட்டு சூட்டுகளுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்குமா என்றால் ... கண்டிப்பாக இல்லை ...
இதெல்லாம் இல்லைன்னா வைத்தால் குடுமி சரைத்தால் மொட்டை என்கிற கதையாக அழுக்கு ஹீரோ ... முட்டைக் கண் ஹீரோயின் ... எப்பொழுதும் அவமானப் படும் ரோலில் காமெடியன் .
சரி .. இது எதுவுமே வேண்டாம் .. கொஞ்சம் விவாதங்கள் பக்கம் போலாம்னா ... இந்த ரிடயர்டு கேசுங்க அதுல வந்து அலப்பரை ... அல்லது நீயா நானா போன்ற வெட்டி வம்பு கூட்டங்கள் ... சரி பாட்டுங்களையாவது பாக்கலாம்னா ... அதுவும் சலிப்பு தட்டும் அளவுக்கு அதே க்ரூப் டான்சர்களுடன் அதே மாதிரியான மூவ்மென்ட்கள் ...
இல்லைன்னா சூப்பர் சிங்கர் என்கிற பெயரில் சுஷீலாவைப் போலவும் ஜானகியைப் போலவும் பாட முயற்சி மேற்கொள்ளும் சிறுமிகளும் .... அதற்கு மார்க்கு போடும் வெண்ணை வெட்டிகளும் ... அதுக்கு நாங்க சுஷீலாம்மா பாட்டையே கேட்டுக்குவோமே ....
மேலே குறிப்பிட்டுள்ள ஏதாவது நமது வாழ்க்கைக்கு எந்த விதத்திலாவது பயனளிக்கக் கூடியதாக இருக்கிறதா என்பதைக் கூட விட்டு விடுவோம் ... நம் வாழ்க்கையுடன் சம்மந்தப் பட்டிருக்கிறதா என்றால் ... எதுவுமில்லை .... மன அழுத்தம் முதற்கொண்டு , பல்வேறு உபாதைகளைத் தவிர்த்து வேறு எதையும் தரவியலாத இவற்றை மட்டுமே நமக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த ஊடகத் துறையால் நாம் பெற்றிடும் நன்மை தான் என்ன ?