• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஒரு தாய், ஆயிரம் தந்தைகளை விடப் பெரியவள்

Status
Not open for further replies.
ஒரு தாய், ஆயிரம் தந்தைகளை விடப் பெரியவள்

3206e-blessingsfromparents.jpg


Krishna and Balarama paying respect to their parents


(இலக்கியத் திருடர்களுக்கு ஒரு வேண்டுகோள்: என்னுடைய கட்டுரைகளை அப்படியே திருடி தங்கள் பெயரில் தாங்கள் எழுதியது போல வெளியிடுவதைக் கண்டு மனம் வருந்துகிறது. தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் துரோகம் செய்யாதபடி யார் எழுதியது, எந்த வெப்சைட்டில் எடுக்கப்பட்டது என்பதை தயவு செய்து வெளியிடுங்கள்)

ஒரு தாய், ஆயிரம் தந்தைகளை விடப் பெரியவள்

உலகிலேயே அதிக புத்திசாலியான பெண்கள் இந்தியாவில்தான் உள்ளனர். இன்று அமெரிக்காவிலும் இந்தியாவிலும் பெரிய பதவிகளில் இந்தியர்கள் இருப்பது வேத காலத்திலேயே துவங்கியது. அப்போது உலகில் பெரும்பாலான மக்களுக்கு நாகரீகம் என்றாலே என்ன என்று தெரியாது. பெண்களை அடக்கி வைத்திருந்தனர். இந்தியாவில் 3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்கள் கொடிகட்டிப் பறந்தனர். ஐயா, இதற்கெல்லாம் அதாரம் எங்கே என்று கேட்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்:


1.ஜனகர் கூட்டிய அறிஞர்கள் சபையில் ஆத்மா, பிரம்மம் ஆகியன பற்றி ஒரு பட்டிமண்டபம் நடத்தினார். அதில் வெற்றி பெறுவோருக்கு ஆயிரம் பொற்கிழிகள் கொடுக்கப்படும் என்று அறிவித்தார். அப்போது மிகவும் புகழ் பெற்ற யாக்ஞவல்கியர் என்ற அறிஞர் (ரிஷி) எனக்கே இந்த கேள்விக்கு விடை தெரியும் என்று சொல்லி, “ஏ சிஷ்யா, பசு மாடுகளை எனது ஆஸ்ரமத்துக்கு ஓட்டிச் செல்”’ என்று உத்தரவிட்டார். சபையே பேசாமல் இருந்தது. செல்வி கார்க்கி வாசக்னவி என்ற பெண் எழுந்து நின்று, ‘நிறுத்துங்கள்’, என்று தடுத்து யாக்ஞவல்கியர் உடன் வாதம் புரிந்தாள். இதில் தெரிவது என்ன? பெண்கள் சுதந்திரமாக ‘அசெம்பிளி’களுக்கு வரலாம். விவாதத்தில் பங்கு கொள்ளலாம்.


2.கி.மு1500 வாக்கில் எழுதப்பட்ட ரிக்வேதத்தில் 450-க்கும் மேலான கவிஞர்கள் “இயற்றிய” பாடல்கள் உள்ளன. இவைகளை அவர்கள் காதில் கேட்டு எழுதியதால் வேதத்தை ‘ஸ்ருதி’ (கேட்கப்பட்டவை) என்பர். இதில் 27 பெண் கவிஞர்கள் உள்ளனர்! இது உலக மகா அதிசயம்! உலகின் பழமையான பெண் கவிஞர்கள் இவர்கள் தான்!!


3.இதற்கு 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் 450 க்கும் மேலான தமிழ்க் கவிஞர்கள் பாட்டுக்களை எட்டுக்கட்டினர். அவைகளை அற்புதமான, படிக்கப் படிக்கத் தெவிட்டாத, பத்துப் பாட்டிலும் எட்டுத் தொகையிலும் படிக்கலாம். அவர்களில் 40-க்கும் அதிகமான பெண் கவிஞர்கள் இருக்கிறார்கள். உலகில் இப்படிப்பட்ட எண்ணிக்கையில் கிரேக்க, இலத்தீன், எபிரேய, சீன மொழிகளில் கூட இல்லை, இல்லவே இல்லை.


4.வேதகாலம் முதல் தமிழ் சங்க காலம் வரை எடுத்துக்கொண்டால் இந்தியப் பெண்களை மிஞ்ச உலகில் யாரும் இல்லை, இல்லவே இல்லை, முன்னர் கூறிய யாக்ஞவல்கிய மஹரிஷிக்கு இரண்டு மனைவியர். ‘அன்பே, ஆருயிரே! என் சொத்து சுகங்களைப் பிரிக்கும் காலம் வந்துவிட்டது, யாருக்கு என்ன வேண்டும்? சொல்லுங்கள் என்று இரண்டு ‘டார்லிங்’குகளிடம் சொன்னார். காத்யாயனி என்ற மனைவி சொத்து சுகங்களை வாங்கிக் கொண்டாள். மைத்ரேயி என்ற மனைவி, எனக்கு முக்தி தரும் விஷயங்களே போதும் என்று ஒதுங்கிக் கொண்டாள். இத்தகைய பெண்களை பிரம்ம வாதினிகள் என்பர். தமிழிலும் ஆறு அவ்வையார்கள்= பிரம்மவாதினிகள் உண்டு. சங்க காலம் முதல்16, 17ஆம் நூற்றாண்டுகள் வரை ஏகப்பட்ட அவ்வையார்கள் வாழ்ந்தனர். இவர்கள் எல்லோரும் இறைவனை/ தர்மத்தை நாடிய பிரம்மவாதினிகள்.


5.உலகில் இந்தியப் பெண்களுக்கு இருந்த சுதந்திரம் எங்கும் கண்டதில்லை! எட்டு வகையான திருமண வாய்ப்புகள் (ஆப்ஷன்ஸ்) கொடுக்கப்பட்டன. காதல் திருமணம் முதல் கடத்தல் திருமணம் வரை எட்டுவகையான திருமணங்கள் அனுமதிக்கப்பட்டன. மனுதர்ம சாத்திரத்தில் கூறிய இந்த எட்டுவகைகளை தமிழில் முதல் நூல் எழுதிய தொல்காப்பியரும் அப்படியே ஏற்றுக் கொண்டார். வேதத்தில் குறிப்பிடும் இந்திரன், வருணன், விஷ்ணு, ஸ்கந்தன் ஆகிய நால்வரையும் தமிழர் தெய்வங்களாக முதல் முதலில் பிரகடனப் படுத்திய புண்ணியவான் தொல்காப்பியர் /த்ருணதூமாக்கினி என்ற அந்தணர் என்பதை “தொல்காப்பியர் காலம் என்ன?’ என்ற ஆய்வுகட்டுரைகளில் எழுதியுள்ளேன்.

ab162-devotiontoparents.jpg

6.ஆரிய-திராவிட வாதம்புரிவோருக்கு மேற்கூறிய விஷயங்கள் செமையடி கொடுக்கும். அதுமட்டுமல்ல. ஸ்வயம்வரம் என்ற சுதந்திர திருமண முறை இந்திய க்ஷத்திரியர் இடையே மட்டு இருந்தது. மஹா பாரதம், பாகவதம், இராமாயணத்தில் எட்டுவகைத் திருமணங்களுக்கும் உதாரணங்கள் உண்டு. அவைகளைத் தனிக் கட்டுரையில் தருகிறேன். ஆரியர்கள் வெளியே இருந்துவந்தவர்கள் என்று கூறும் வெளிநாட்டு அறிஞர்கள (!?!?) ஜாதி முறை, திருமண முறை, யாக யக்ஞங்கள், எதற்கெடுத்தாலும் தண்ணீரை பயன்படுத்தல் ஆகியவைகளை விளக்க முடியாமல் முழி பிதுங்கித் தவிக்கிறார்கள். பாதி “அறிஞர்கள்”, இந்தப் பழி பாவங்களை திராவிடர்கள் என்று ஒரு இனத்தைக் கற்பித்து அவர்கள் மீது ஏற்றிவிட்டார்கள்!


7.மனு தர்ம சாத்திரத்தை எள்ளி நகையாடுவது வெளி நாட்டு அறிஞர்களுக்கு கைவந்த கலை! ஆனால் மனுநீதிச் சோழன் முதல் 16ஆம் நூற்றாண்டு வரை-- கல்வெட்டுகள் ,செப்புப் பட்டயங்கள் வரை-- கம்பராமாயணம் முதலான கவிதைகள் வரை-- ஆயிரக் கணக்கான இடங்களில் தமிழர்கள் “மனு நீதி தவறாது வாழ்ந்தார்கள், ஆட்சி செய்தார்கள்” என்று எழுதி இருக்கிறது. பெண்களைப் பற்றி மிகவும் உயர்வாக கூறுகிறார் மனு:


8.” எங்கே பெண்கள் பெருமைப் படுத்தப்படுகிறார்களோ அங்கேதான் இறைவன் மகிழ்ச்சி அடைகிறான். எங்கே பெண்கள் பெருமைப் படுத்தப்படவில்லையோ அங்கே நடைபெறும் பூஜைகள் வீணாகப் போகும்”—மனு 3-56, மஹா பாரதம் 13-4-5
9. ஒரு குரு (ஆசார்யா), பத்து ஆசிரியர்களை (உபாத்யாயா) விடச் சிறந்தவர்; ஒரு தந்தை நூறு குருக்களை விட சிறந்தவர்; ஆனால் ஒரு தாயோ ஆயிரம் தந்தையரை விடச் சிறந்தவள்—மனு 2-145


10. ஒரு பெண்ணுக்கு சிறு வயதில் தந்தை பாதுகாப்பு வழங்குகிறார் ; இளம் வயதில் கணவன் பாதுகாப்பு வழங்குகிறார்; முதிய வயதில் மகன் பாதுகாப்பு வழங்குகிறார்; எப்போதுமே அவர் பாதுகாப்பு இன்றி இருப்பதில்லை—மனு 9-9


11. மாத்ரு தேவோ பவ= அன்னை என்பவள் கடவுள் என்றும் மனைவி என்பவள் ‘கணவனில் பாதி’ என்றும் வேதம் கூறுகிறது. சிவனுக்கு வாம/ இடது பாகத்தில் இருப்பதை அர்த்தநாரீஸ்வரர் என்று இந்துக்கள் வழிபடுவர். இதை பைபிளும் இடது எலும்பு மூலம் ஆடம் என்ற ஆண்மகன் ஈவ் (ஏவாள்) என்ற பெண்மணியை உருவாக்கினான் என்று சொல்லும். உபநிஷத்திலும் இக்கதை உள்ளதை காஞ்சி மஹாஸ்வாமிகள் தனது உபந்யாசத்தில் விளக்கியுள்ளார். ( Read my posts in this blog THREE APPLES THAT CHANGED THE WORLD & SANSKRIத் IN THE BIBLE)


12.வேதத்தில் உள்ள கல்யாண மந்திரங்கள் தற்கால சினிமா காதல் கவிதைகளை விட மிகவும் சுவையானவை; சப்த சதி மந்திரத்தில் துர்க்கையை மணக்க விரும்பும் அசுரர்களிடத்தில் துர்க்கை கூறுகிறாள்: “ யார் என்னை போரில் வெல்கிறார்களோ, எனது கர்வத்தை அடக்குகிறார்களோ, எனக்கு சமமானவர்களோ அவர்களே எனது கணவராகத் தகுதி உடையோர்” என்கிறார். வேத காலப் பெண்கள் என்ன எதிர்பார்த்தார்கள் என்பது இதில் தெளிவாகிறது. கைகேயி போன்றோர் யுத்தகளத்தில் ரதங்களை ஓட்டி வரம் பெற்ற கதைகளை நாம் அறிவோம். ‘வேத மாதாவும் வீர அன்னையும்’ என்ற கட்டுரையில் இது பற்றி எழுதிவிட்டேன்.

c5c34-parentsworship1.jpg


13.காளிதாசன் காவ்யங்களிலும் ராஜசேகரன் நூல்களிலும் பெண்கள் புகழப்படுகின்றனர். சம்ஸ்கிருத மொழியில் எல்லா நற்குணங்களும் பெண்பால் சொற்களாகவே இருக்கும்.. பகவத் கீதையில் விபூதியோகத்தில் தனது சிறப்புகளை எடுத்தோதும் கிருஷ்ண பரமாத்மா (கீதை 10-34):

பெண்களுக்குள் நான் ஸ்ரீ (லெட்சுமி) ஆகவும் வாக் (சரஸ்வதி) ஆகவும், கீர்த்தி( புகழ்) ஆகவும் ஸ்ம்ருதி (நினைவாற்றல்) ஆகவும் மேதா ஆகவும் (அறிவு/ ஞானம்) த்ருதி (திட உறுதி) ஆகவும் க்ஷமா (பொறுமை) ஆகவும் விளங்குகிறேன் என்கிறார். இந்தியா முழுதும் பெண்கள் பெயர்கள் பெரும்பாலும் நல்ல குணங்கள் பற்றிய சொற்களாகவே இருக்கும்.
(முன்னாள் முதலமைச்சர் திரு கருணாநிதி வீட்டில் கருணா (நிதி), தயா (ளுஅம்மாள்), கனி (மொழி), தயா (நிதிமாறன்) கலா (நிதிமாறன்) முதலிய சம்ஸ்கிருத சொற்களைக் காணலாம்!!!


14.தமிழ் நாட்டு கிராமங்களில் வழிபடப்படும் ராக்காயீ, மூக்காயீ, மகமாயீ எல்லாம் வேதத்தில் குறிப்பிடப்படும் ராகா, மூகா, மஹா மாயா என்று காஞ்சி மஹாஸ்வாமிகள் தனது சொற்பொழிவுகளில் அழகாக, அற்புதமாக விளக்கியுள்ளார்.


Pictures are taken from other sites;Thanks.
Contact [email protected]

பெண்கள் வாழ்க! பெண்கள் வெல்க!!
 
Dear Sir,

Very well researched and written...I enjoy your writings...Keep inundating us with more such articles...

Regards,
 
கட்டுரை மிக அழகாக இருக்கிறது. தலைப்பு உதைக்கிறது.
 
Dear Natkaushik

We are men. I know we dont like all the credits going to one woman in the house.

What can I say?

It is a bitter truth!! கசப்பான உண்மை!!!
 
Dear Natkaushik

We are men. I know we dont like all the credits going to one woman in the house.

What can I say?

It is a bitter truth!! கசப்பான உண்மை!!!

sir
I meant that since a person has only one father and one mother, you can say mother is worth 1000 times father but not 1000 fathers.I also subscribe to 'Janani janma Bhumischa svargaathapi gareeyasi.
 
Sorry ,I missed your point.
But it is allowed in literature.
See Kamba ramayanam ஆயிரம் ராமன் நின் கீழாவரோ ( என் நினைவிலிருந்து எழுதுவதால் சில பிழைகள் இருக்கலாம்) Not even 1000 Ramans are equal to you!
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top