கலப்புத் திருமணம்
கலப்புத் திருமணம் செய்யவில்லை என்றால் பெரும் பாவம் என்ற தோரணையில் டிவி சீரியல்களும், சினிமாவும் பறைசாற்றுகின்றன. சங்க காலக் காவியங்களும் முருகக் கடவுள் கதையும், அர்ஜுனன், அபிமன்யு கதைகளும் இதற்கு முன்னுதாரணமாய்க் காட்டப்படு கின்றன. ‘ஓடிப் போய் கல்யாணம்’ என்ற கல்ச்சரும் சகஜமாய் உள்ளது. சமீபத்தில் ஒரு செய்தியில் அழகிய பிராமண தமிழ்ப் பெண் வெளிநாட்டில் செட்டில் ஆகி கணவனுக்கு அசைவ சமையல் செய்துபோட்டு அசத்துகிறது என்று உள்ளது. "அய்யராத்துப் பொண்ணு மீன் விலையைக் கேட்டால் காதல் என்று அர்த்தம்" என்பது போல் எல்லாம் சினிமா பாட்டு, அதற்கு கைத்தட்டல் அபாரம். ஒரு சுத்தமான சூழ்நிலையில் வளர்ந்து விட்டு, வேறோர் வித்தியாசமான பழக்க வழக் கங்களில் வாழ நேர்வது எவ்வளவு கஷ்டம்? வளர்த்து ஆளாக்கிவிட்டு அழகு பார்க்கும் பெற்றோர் தகுந்த வரன் பார்த்து மணம் செய்து வைக்கும் வரை பொறுமை இல்லையே, ஏன் அப்படி? ஏழைப் பெற்றோர், வசதி உள்ளோர் என்ற வித்தியாசம் இல்லாமல் குழந்தை நலம் பேணுவது பெற்றோருக்கே உரிய சிறப்பு அல்லவா? இதை எப்போது உணர்ந்து எப்போது சரியாகும்?
Source:GANESAN, Chennai 600061