Here is an article to share on the influence of Cards in our life.
கார்டேதான் கடவுளடா !
[TABLE="align: left"]
[TR]
[TD][/TD]
[/TR]
[/TABLE]
'காட்டை அழிச்சோம்... கார்டை வளர்த்தோம்!’ - இவ்ளோதான் பாஸ் இன்றைய வாழ்க்கை! ஆமா, ஏதோ சீட்டு கார்டு, ஈ.பி. கார்டு, ரேஷன் கார்டுனு சில பல கார்டுகளோட போய் கிட்டிருந்த நம்ம வாழ்க்கையில இப்போ இந்த கார்டுங்க புகுந்து கட்டம் கட்டி காட்டுற விளையாட்டு இருக்கே, யப்பப்பா.
ஈ.பி.கார்டு, ரேஷன் கார்டு, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, விசிட்டிங் கார்டு, பள்ளி/கல்லூரி/பணியிட ஐ.டி. கார்டு, இன்விடேஷன் கார்டு, சீட்டு கட்டு கார்டு, சிம் கார்டு, மெமரி கார்டு, பான் கார்டு, வோட்டர் ஐ.டி. கார்டு, ஆதார் கார்டு, போஸ்டல் ஐ.டி. கார்டு, பஸ்/ரயில் சீசன் கார்டு, ஹெல்த் கார்டு, இன்சூரன்ஸ் கார்டு, பேஷன்ட் ஐ.டி. கார்டு, ரீசார்ஜ் கார்டு, கிளப் மெம்பர்ஷிப் கார்டு, கிரீட்டிங் கார்டு, சொத்து வரி, தண்ணி வரி கார்டு, டி.டி.ஹெச். கார்டு, பார்க்கிங் கார்டு, டோல்கேட் கார்டு, பால் கார்டு, ஷாப்பிங் கார்டு, கேரன்ட்டி/வாரன்ட்டி கார்டு, டிரைவிங் லைசென்ஸ் கார்டு...
இருங்க சாமிகளா...கொஞ்சம் மூச்சு வாங்கிக்கிறேன். அடையாள அட்டைனு நம்ம அரசாங்கம் கொடுக் கிற பல கார்டுகள்ல நம்மளை அடை யாளமே தெரியாத அளவுக்குக் காலி பண்ணி இருப்பாங்க. இதுல நடக்கிற ஆள் மாறாட்டக் கூத்தெல்லாம் செம காமெடி. பெயர், வயசு, அட்ரஸ், போட்டோ, அப்பா அம்மா பெயர்கள் எல்லாமே மாறும்... 'மாற்றம் ஒன்றே மாறாதது’ங்கிறதைத் தப்பா புரிஞ்சுக் கிட்டாங்களோ, இல்லே சரியாப் புரிஞ்சிக்கிட்டுத் தப்பா மாத்துறாங்களோ?!
'காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்குக் கையும் காலும் தானே மிச்சம்’னு ஒரு பழைய பாட்டு இருக்கு. கிரெடிட் கார்டு வாங்குறவங்களுக்கு அதுகூட மிஞ்சுமானு தெரியாது. பல சினிமாக்களில் பார்த்து இருப்போம். சம்பளம் வாங்கிட்டு ஹீரோவோ, அவரோட அப்பாவோ பேக்டரியை விட்டு வெளியில வரும்போதே, கடன் குடுத்தவங்க வரிசையா வந்து மொத்த சம்பளத் தையும் பிடுங்கிட்டுப் போய்டு வாங்க. கிரெடிட் கார்டு அதைவிட ரொம்ப அட்வான்ஸா இருக்கும். சம்பளத் தேதிக்குப் பத்துப் பதினஞ்சு நாள் முன்னாடியே இ மெயில் வரும், எஸ்.எம்.எஸ். வரும், ஸ்டேட்மென்ட் கொரியர்ல வரும். இவ்ளோ வந்தும் பணம் வரலேன்னா, வீட்டுக்கு ஆள் வரும். அப்புறம் மேல சொன்னமாதிரி கை கால் காலி தான்.
இது ஒரு அட்டைக்காலம் பாஸ். பொறப்புல இருந்து இறப்பு வரைக்கும் அட்டைங்க, அட்டையா ஒட்டிகிச்சே. எண்டு கார்டு போடுற வரைக்கும் இந்த கார்டுங்க தொல்லை ஓயாது.
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், வாழ்க்கை ஒரு வட்டம்னாங்க, சதுரம்னாங்க, எனக்கென்னவோ அது செவ்வகம்னு தோணுது. பாருங்க, வாழ்க்கை முழுவதும் நம்ம கூடவே வர்ற எல்லா கார்டுகளும் செவ்வகமாதானே இருக்கு. ரெண்டு பக்கம் சின்னதா, ரெண்டு பக்கம் பெருசா ஏற்றத்தாழ்வுகள் நிறைஞ்சதுதான் வாழ்க்கைனு எவ்ளோ எளிமையா சொல்லுது. கலாய்ச்சாலும் கருத்து சொல்லணும்னு கலாய்த்தல் புராணத்தோட எட்டாவது பாகத்துல மூணாம் பக்கம் சொல்லி இருக்கு பாஸ்! வர்ட்டா?
- ப.நரசிம்மன்
நன்றி: விகடன்
Link:
http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=35487