• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

குருவே சரணம்..

Venky adi

Active member
It is an effort to compile the Teachings and Messages of Jagatguru Mahaperiyava and share the same with the elite members of this Forum.

Must hear:

மஹா பெரியவாவின் முத்தான பொன்மொழிகள்



"ஸ்ரீ மஹா பெரியவாவின் சரித்ரம்" - Part 354 HAPPY SATURDAY MORNING 15 JUN 2019.

ஒருமுறை, தம் யாத்திரையில் ஒரு கிராமத்தில் பெரியவா தங்க நேர்ந்தது. அங்கே மடத்துக்கு சொந்தமான நிலத்தில் அந்த வருடம் அமோகமாக கடலை விளைந்திருந்தது. குத்தகைதாரர் அவ்வளவையும் அறுவடை செய்து விற்றும் விட்டார். பெரியவரின் தரிசனத்தின்போது, மகிழ்வோடு அதை குறிப்பிட்டார். அப்போது அவருக்கு படைப்பதற்காக எல்லாவிதமான பழங்களுடனும், முந்திரி, கற்கண்டு போன்ற பதார்த்தங்களுடனும் பலர் காத்துக் கொண்டிருக்க, அவைகளை ஏறெடுத்தும் பாராமல், அந்த நிலத்தில் நன்கு விளைந்ததாக சொன்ன கடலையில் ஒரு கைப்பிடியை ஆசையாகக் கேட்டார் பெரியவா.

குத்தகை விவசாயி ஆடிப்போய்விட்டார்.

இப்படிக் கேட்பார் என்று அவர் எதிர்பார்க்கவேயில்லை.

அதேசமயம், அவ்வளவையும் விற்று விட்டதால் கைவசமும் கடலையில்லை. இது என்ன சோதனை என்று அவர் தவித்தாலும், அவருக்குள் ஒரு உபாயம் தோன்றியது. ‘இதோ போய் கொண்டு வருகிறேன்’ என்று ஓடினார். திரும்பி வரும்போது, ஒரு கைப்பிடி என்ன பல கைப்பிடி கடலை அவரிடம்! அதில் ஒன்றை எடுத்து பெரியவர் பார்த்தார். அந்த ஒன்றில் ஒரு ஓரமாய் எலி கொரித்தது போன்ற அறிகுறி. உடனேயே கேட்டார் பெரியவர்: இது பறிச்சதா? கொரிச்சதா?” என்று…!

பறித்ததா, கொறித்ததா?’ என்று பெரியவர் கேட்ட கேள்வியில் இலக்கிய நயம் மட்டுமில்லை. இதயத்தின் நயமும் இருந்தது என்பது போகப்போக விளங்கத் தொடங்கியது. கடலையை முறத்தில் வைத்து எடுத்து வந்த அந்த நபர், பெரியவர் முன் திணறியபடி நின்றார். பின் அந்த கடலையை வயலில் உள்ள எலி வளைகளில் இருந்து எடுத்து வந்ததை மிகுந்த பயத்துடன் கூறினார்.

பெரியவர் முகத்தில் மெல்லிய சலனம்.

ஒரு துறவிக்கு ஆசையே கூடாது. அது அற்ப கடலைப்பயிர் மீதுதான் என்றாலும், அதிலும் சில சமயங்களில் இது போல சோதனைகள் ஏற்பட்டு விடுகின்றன. எலி ஒரு பிராணி! வளைகளில் கடலைகளை சேமித்து வைத்துக் கொண்டு, அறுவடைக்குப் பிறகான நாட்களில், அது அதைச் சாப்பிட்டே உயிர் வாழ்ந்தாக வேண்டும். வயலுக்கு சொந்தக்காரனுக்கு வேண்டுமானால், அது எலியுடைய கள்ளத்தனமாக இருக்கலாம். அதற்காக எலிகளுக்கு பாஷாணம் வைத்து கொல்லவும் முற்படலாம். ஆனால், அன்பே வடிவான துறவி, எலியை ஒரு கள்ளப் பிராணியாகவா கருதுவார்? அதிலும், எலி எனப்படுவது கணபதியாகிய பிள்ளையாரின் வாகனம். அவரை வணங்கும்போது, நம் வணக்கம் எலிக்கும் சேர்த்துத்தான் செல்கிறது. இப்படி, வணங்கவேண்டிய ஒரு ஜீவனின் சேமிப்பில் இருந்து எடுத்து வந்திருந்த கடலையை பெரியவரால் சாப்பிட முடியவில்லை.

மாறாக அந்த மனிதரிடம்,இதை எந்த வளையில் இருந்து எடுத்துண்டு வந்தீங்க? அந்த இடம் ஞாபகம் இருக்கா?” என்றுதான் கேட்டார். அவரும் ஆமோதித்தார்.

அடுத்த சில நிமிடங்களில், ஒரு முறத்தில் அந்த கடலையோடும் இன்னொரு முறத்தில் வெல்லப் பொரியோடும் அந்த இடத்துக்கு பெரியவரே போய் நின்றதுதான் ஆச்சரியம்.

வளை துவாரத்துக்கு முன்னாலே, அங்கிருந்து எடுத்ததோடு கொண்டு வந்திருந்த வெல்லப்பொரியையும் வைத்து விட்டு, மன உருக்கமுடன் அவர் பிரார்த்தனை செய்யவும், உள்ளிருக்கும் எலிகள் வெளியே தைரியமாய் வந்து, பெரியவர் படைத்த விருந்தை அனுபவிக்கத் தொடங்கின! சூழ்ந்து நின்ற நிலையில் பார்த்த வர்களுக்கெல்லாம் ஒரே பரவசம். மெய்சிலிர்ப்பு!

Source: Sage of Kanchi
 
"கஜேந்திர மோட்ச ஸ்தலம்'-தெரியுமா"

(காஞ்சி மகா பெரியவர் தனது மடத்து பட்டத்து யானைக்கு இங்கே . சிராத்தம் செய்தார்

மஹாளயத்தின் சிறப்பு- தினமணி கட்டுரையில் ஒரு பகுதி என். பாலசுப்ரமணியன்

மஹாளயத்தின் சிறப்பு.

மஹாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள்: பிரதமை - பணம் சேரும்.
துவிதியை - நல்ல குழந்தைகள்.
திரிதியை - நினைத்தது நிறைவேறும். சதுர்த்தி } பகை அழியும்.
பஞ்சமி - செல்வம் சேரும், நியாயமான சொத்துகள் கிடைக்கும்.
சஷ்டி - புகழ் கிடைக்கும்.
சப்தமி - சிறந்த பதவிகள் கிடைக்கும்.
அஷ்டமி } கஷ்டங்கள் நீங்கும். அறிவாற்றல் கிடைக்கும்.
நவமி - திருமண தடை நீங்கும். சிறந்த வாழ்க்கைத்துணை கிடைக்கும். குடும்ப ஒற்றுமை பெருகும்.
தசமி - நீண்டநாள் ஆசை நிறைவேறும். எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.
ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி.
துவாதசி - ஆடை ஆபரண சேர்க்கை.
திரயோதசி - சுதந்திரமான வேலை அல்லது தொழில்.
சதுர்த்தசி - ஆயுள் ஆரோக்யம் விருத்தியாகும், பாவம் நீங்குதல், மஹாளய அமாவாசை - மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிட்டும்.

இந்த மஹாளய அமாவாசை தினத்தில் புண்ணிய நதிகள், சேது, ராமேஸ்வரம், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திலதர்பணபுரி போன்ற புண்ணிய திருத்தலங்களில் சமுத்திர ஸ்நானம் செய்வது, கும்பகோணத்திற்கருகில் கோவிந்தபுரத்தில் உள்ள ராம தீர்த்தம், உத்திரவாகினியாக நதி ஓடும் இடங்கள், மேற்கே துவங்கி கிழக்கு முகமாக வந்து கடலில் சங்கமமாகும் நதிகள், இடையில் சில இடங்களில் வடக்கு முகமாகத் திரும்பி ஓடுவதுவே உத்திரவாகினியாகும். கும்பகோணத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மணஞ்சேரி என்கிற கிராமத்தையொட்டி, காவிரி உத்திரவாகினியாக ஓடுகிறது. காஞ்சி மகா பெரிசிராத்தம் செய்தார்யவர் தனது மடத்து பட்டத்து யானைக்கு இங்கே . ஆதலால் இந்த ஸ்தலம் "கஜேந்திர மோட்ச ஸ்தலம்' எனப்படுகிறது. காசி, கயை, குருúக்ஷத்திரம், சூர்ய குண்டம், பிரம்மசரஸ் ஆகிய தீர்த்தங்கள், கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி, நர்மதை, துங்கபத்ரா போன்ற மகா புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்து, பித்ருக்களுக்காக அவரவரது சக்திக்கேற்ப தானம் கொடுப்பது அளவற்ற புண்ணிய பலனைத் தரும்.

மஹாளய அமாவாசை அன்றுதான் பித்ருக்கள் அவர்களது உலகங்களுக்குத் திரும்பிச் செல்கின்றனர். ஆதலால், அன்று அவர்களை விசேஷமாக பூஜித்து, நமஸ்கரித்து, அவர்களை வழி அனுப்ப வேண்டும். கிடைத்தற்கரியது பித்ருக்களின் ஆசி. அதிலும் மஹாளய பட்சம் 15 நாள்களும் அவர்கள் நம்முடன் பரம கருணையுடன் தங்கியிருப்பதால், அதற்கேற்ப நாம் பக்தியுடன் நடந்து கொள்ள வேண்டும். மஹாளய பட்சத்தில் செய்யும் சிராத்தம், மற்றும் பித்ரு பூஜைகள் ஆகியவற்றின் புண்ணிய பலன் நமக்குப் பல பிறவிகளுக்குத் தொடர்ந்து கிடைக்கும்.
சிரார்த்தம் செய்ய விருப்பமுடையவன் நோயின்றி, நல்ல சுபாவத்துடன் தீர்க்காயுள் உள்ளவனாகவும், பிள்ளை, பேரன்களுடன் கூடி வாழ்வான் என்றும் கூறுகிறது அக்னிபுராணம்.

நன்றி - என். பாலசுப்ரமணியன்
 
OM SRI GURUBHYO NAMAH


"நீ நம்பற தெய்வம் உன்னை ஒருபோதும் கைவிடாது!"

(மௌனவிரதம் இருந்தபோதிலும் ஒரு மட்டைத்தேங்காயை உருட்டிவிட்டு பக்தனின் சங்கடத்தைப் போக்கிய பெரியவா)

(கடம் வித்வான் விநாயக ராம் சங்கடம் தீர்ந்த நிகழ்ச்சி)

கடம் வித்வான் விநாயக ராம்,தன்னோட குலதெய்வத்துக்கு சமமா காஞ்சி பரமாசார்யா மேல பக்தி உள்ளவர்.

ஒரு சம்யம்,ஏதென்ஸ் நாட்டுல கடம் வாசிக்கறதுக்கு வாய்ப்பு வந்தது அவருக்கு. அவரோட வயலின் வித்வான் எல். சுப்ரமண்யமும்,தபேலா வித்வான் ஜாஹீர் உசேனும் பங்கெடுத்துக்க இருந்த பிரமாண்டமான இசை நிகழ்ச்சி அது.

நிகழ்ச்சிக்கு ரெண்டு நாள் முன்னாலயே ஏதென்ஸுக்கு விநாயகராம் வந்துடறதுன்னும், மத்தவா ரெண்டு பேரும் லண்டன்ல ஒரு கச்சேரியை முடிச்சுட்டு அங்கேர்ந்து ஏதென்ஸுக்கு வர்றதாகவும் ஏற்பாடு செஞ்சிருந்தா.

குறிப்பிட்ட நாள்ல ஏதென்ஸுக்குப் போய் சேர்ந்தார், கடம் வித்வான். விமானத்துல போய் இறங்கினவரைசகல மரியாதையோட அழைச்சுண்டு போய் பெரிய ஓட்டல்ல தங்கவச்சா,நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ணியிருந்தவா. நாளை மறுநாள்தான் கச்சேரி.இங்கே சகல வசதியும் இருக்கு. அதனால நீங்க நன்னா ஓய்வெடுத்துக்குங்கோ!" அப்படின்னுட்டு வந்தவா புறப்பட்டுட்டா.

கொஞ்சநாழி ஆச்சு. தெரியாத நாடு.புரியாத இடம். சும்மா உட்கார்ந்து இருக்கிறதைவிட கொஞ்சநாழி கடம் வாசிச்சுண்டு இருந்தா, சொந்த ஊர்ல இருக்கறாப்புல மனசுக்கு இதமா இருக்கும்னு நினைச்சுண்டு, கடம் இருந்த பெட்டியைத் திறந்தார்,வித்வான்.

அடுத்த கணம், அவருக்குக் கண் இருட்டித்து,ஏ.சி.க் குளிரையும் தாண்டிண்டு உடம்பு குப்புன்னு வியர்த்தது. கத்தறதா,அழறதா? ஒண்ணும் புரியாம விக்கிச்சுப்போய் நின்றார். விக்கு விநாயகராம் ஏன்னா,பெட்டிக்குள்ள அவரோட வாத்யம் சுக்கு நூறா உடைஞ்சு கிடந்தது.

நொறுங்கிப் போய் கிடந்த கடத்தைப் பார்த்த நொடியே அவரோட மனசும் முழுசா நொறுங்கிடுத்து. இந்தியாவிலேயே இருந்தாலும் கூட நல்லதா ஒரு கடம் வேணும்னா சட்டுனு கிடைச்சுடாது. அப்படி இருக்கறச்சே, கடல்கடந்து எங்கேயோ இருக்கிற நாட்டுல கடம் எப்படிக் கிடைக்கும்? அவ்வளவுதான் வாத்யமும் போச்சு வாய்ப்பும் போச்சு! கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்துண்டு இருந்தவர், மனசைத் தேத்திண்டு, தன்னோட ஆத்துக்காரிக்குப் போன் செஞ்சார்.நிலைமையைச் சொல்லி, ஒப்பந்தத்தை ரத்து பண்ணி வந்துடறேன்னார்.

"அவசரப்படாதீங்கோ, நான் உடனே மடத்துக்குப்போய் மகாபெரியவாளைப் பார்த்து வேண்டிக்கறேன்! நாம தெய்வமாக கும்பிடற அவர் நம்மைக் கைவிட மாட்டார்! -இது மனைவி

அங்கே வித்வானுக்கு ஒண்ணும் புரியலை.சட்டைப்பையில் வைச்சுண்ட இருந்த பெரியவாளோட படத்தை எடுத்து கையில் வைச்சுண்டு பிரமை பிடிச்சமாதிரி உட்கார்ந்திருந்தார்.மற்ற வாத்தியக்காரர்களுக்கு ஃபோன் பண்ணிச் சொன்னார். அவாளுக்கு அதிர்ச்சி இருந்தாலும், ' நாங்க வர்ற வரைக்கும் அங்கேயே இருங்கோ, வந்தபிறகு பேசிக்கலாம்' என்று சொன்னார்கள்.இவர் பெரியவா நாமத்தையே மந்திரமா ஜபிச்சுண்டு இருந்தார்.

வித்வானோட மனைவி மடத்துக்குப் போன சமயத்துல மகாபெரியவர் மௌனவிரதத்துல இருந்தார். ஆசார்யாளுக்கு நமஸ்காரம் பண்ணிட்டு, தன்னோட ஆத்துக்காரர் அயல் தேசத்துல கடம் உடைஞ்சு சங்கடப்படறதை ஆசார்யாகிட்டே அழுதுண்டே சொன்னார். வித்வானோட மனைவி.

எல்லாத்தையும் கேட்டுண்ட மகாபெரியவா,மட்டைத் தேங்காய் ஒண்ணை எடுத்து உருட்டிவிட்டார் .அவ்வளவுதான். வேற ஒண்ணும் சைகை கூட காட்டலை.ஒண்ணும் புரியாம கண் கலங்கிண்டே வித்வானோட மனைவி நகர ,அதே நேரம் அங்கே ஏதன்ஸ்ல ஒரு அதிசயம் நடந்தது.

ஏதென்ஸ் வந்த வயலின் வித்வானும், தபேலா வித்வானும் ஒரு கடத்தை எடுத்துண்டு வந்து,வித்வான் விநாயகராம் முன்னால வைச்சா. அதைப் பார்த்ததுமே சந்தோஷத்துல கண்ணுலேர்ந்து அருவி மாதிரி ஜலம் கொட்ட, "இது எப்படிக் கிடைச்சுது?"ன்னு தழுதழுப்பா கேட்டார் வித்வான்.

"லண்டன்ல எங்கேயாவது கடம் கிடைக்குமான்னு விசாரிச்சோம் ஒரே ஒருத்தர்கிட்டே இருக்கிறதா தகவல் கிடைச்சுது. அவரைத் தேடிப்போய் கேட்டோம்.தன்கிட்டே கடம் இருக்கிறதாகச் சொன்னவர், தான் இந்தியா வந்த சமயத்துல பெரிய வித்வான் ஒருத்தர்,தனக்கு அதை பரிசாகக் குடுத்ததாகவும் அதைத் தரமுடியாதுன்னும் சொல்லிட்டார்.

வேறவழி எதுவும் தெரியாம என்ன பண்றதுன்னு தவிச்சோம். அந்த சமயத்துல யாரோ உந்தினாப்புல அவருக்கு கடத்தை பரிசா குடுத்தவர் யார்னு கேட்கணும்னு தோணித்து .கேட்டோம். " த க்ரேட் கடம் ப்ளேயர் விக்கு விநாயகராம்!" அப்படின்னார். எங்களுக்கு ஆச்சரியம் தாங்கலை. நீங்கதான் கடம் உடைஞ்சுபோய் சங்கடத்துல இருக்கேன்னு அவர்கிட்டே சொன்னோம். கடத்தை சந்தோஷமா குடுத்துட்டார்."

கடத்தை வாங்கிக் கண்ணுல ஒத்திண்டார், வித்வான். அதுக்குள்ளே ஏதோ காகிதம் மடிச்சு வைச்சிருக்க, அதை எடுத்துப் பிரிச்சுப் படிச்சார். அதுக்குள்ளே,

"நீ நம்பற தெய்வம் உன்னை ஒருபோதும் கைவிடாது!" அப்படின்னு இங்கிலீஷ்ல எழுதி இருந்தது.

தன்னோட ஆத்துக்காரிக்கு போன் பண்ணினப்போ, அவ சொன்ன அதே வார்த்தைகள்.

நான் எப்பவோ யாருக்கோ குடுத்த கடம், இப்போ தன்னோட சங்கடத்தைப் போக்க தனக்கே திரும்பக் கிடைச்சிருக்கு. எல்லாம் மகாபெரியவா அனுகிரகம்! புரிஞ்சுண்ட கடம் வித்வான், இருந்த இடத்துலயே பரமாசார்யாளை நினைச்சுண்டு சாஷ்டாங்கமா நமஸ்காரம் செஞ்சார்

நன்றி: Maha Periyava Facebook Group

HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
 
Last edited:
OM SRI GURUBHYO NAMAH

நீ எனக்கு புதுசா ஒரு மரச்சொம்பு வாங்கித்தரியா?" -பெரியவா

(உங்களுக்கு ஏதாவது கைங்கர்யம் செய்ய முடியாம்ன்னு ஏங்கித் தவிச்சுண்டு இருக்கற என்கிட்டே... . வாங்கித்தரியான்னு இப்படிக் கேட்டு சங்கடத்துல ஆழ்த்திட்டேளே..!"-பக்தர்)( தொண்டு செய்யணும்னு ஏக்கத்தோட காத்துண்டு இருக்கிற பக்தர் வேண்டுதலுக்கு செவிசாய்த்த பெரியவா)

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒரு சமயத்துல ஆந்திராவுல இருக்கிற சித்தூருக்கு ஒரு தரம் விஜயம் பண்ணியிருந்தார் பரமாசார்யா. அங்கே ஏராளமான பக்தர்கள் வந்து பெரியவாளை தரிசனம் பண்ணினா.

அந்த சமயத்துல ஒரு பக்தர் மகாபெரியவாகிட்டே ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

"பெரியவா நமஸ்காரம். இந்த தேசத்துல பலப்பல க்ஷேத்ரங்கள், உங்களோட திருப்பாதம் பட்டுப் புனிதம் அடைஞ்சிருக்கு. அந்த பாக்யம் எங்க ஊருக்கும் கிடைக்கணும்னு ப்ரியப்படறோம். தயவு செஞ்சு எங்க ஊருக்கு ஒருதரம் நீங்க எழுந்தருளணும்!"

பக்தர் கேட்டதும் மென்மையா புன்னகைச்ச ஆசார்யா, "ஒங்க ஊர் எது? அது எங்கே இருக்கு?" அப்படின்னு கேட்டார்.

பக்தர் சொன்ன ஊர், அந்த சமயத்துல ஆசார்யா தங்கியிருந்த இடத்துலேர்ந்து மூணுமைல் தொலைவுல இருந்தது. அதை மகாபெரியவாகிட்டே சொன்னார்,அவர்.

"நீயே என்னை அழைச்சுண்டுபோறியா?"மகாபெரியவா இப்படிக் கேட்பார்னு எதிர்பார்க்காத பக்தர், சந்தோஷத்துல திணறிப்போனார். அன்னிக்கு ராத்திரி அவரை அங்கேயே தங்கச் சொன்ன மகாபெரியவா, நாளைக்குக் கார்த்தால நித்யானுஷ்டானம் முடிஞ்சதும் புறப்படலாம்னுட்டார்.

சொன்னமாதிரியே மறுநாள் கார்த்தால பக்தர்கூட அவரோட ஊருக்குக் கிளம்பிவிட்டார், மகாபெரியவா. வழியில வெயில் அனலா கொளுத்தித்து.கொஞ்சம் கூட சலிச்சுக்காமலும் ஒடம்பு வருத்தத்தை வெளியில காட்டிக்காமலும் நடந்தார் மகாபெரியவா.அந்த பக்தருக்கு தான்,தப்புப் பண்ணிட்டோமோ.. பெரியவாளை கஷ்டப்படுத்தறோமோ! என்றல்லாம் தோணித்து.

ஒரு வழியா ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும்,ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து பூர்ணகும்பம் தந்து பரமாசார்யாளுக்கு வரவேற்பு குடுத்தா."இங்கே நான் தங்கறதுக்கு எங்கே ஜாகை ஏற்பாடு செஞ்சிருக்கே?" என்று கேட்டார், மகாபெரியவா.

பக்தர் ஒரு இடத்தைச் சொன்னார். அதைக் கேட்ட பரமாசார்யா, "அங்கே வேண்டாம்.இங்கே பாதி கட்டிண்டு இருக்கற கட்டடம் ஒண்ணு இருக்கும் பார். அங்கே நான் தங்கிக்கறேன்" அப்படின்னார்.

பக்தருக்கும் அங்கே இருந்தவாளுக்கும் ஆச்சரியம்! ஊர்ல அந்த சமயத்துல ஒரே ஒருத்தர்தான் வீடு கட்டிண்டு இருந்தார். அது பரமாசார்யா வந்த வழியில் எங்கேயும் இல்லை.ஊர்ல இன்னொரு கோடியில இருந்தது.அதை எப்படி மகாபெரியவா தெரிஞ்சுண்டார்ங்கறது அவாளுக்கு வியப்பா இருந்தது. ஆனா, அதைவிடப் பெரிய ஆச்சரியம் ஒண்ணு மறுநாள் நடக்கப் போறதுங்கறது அவாளுக்குத் தெரியாது.

புதுசா கட்டிக் குடித்தனம் வராத அந்த அகத்துல மகாபெரியவர் தங்கறதுக்கு ஏற்பாடு செஞ்சா.அந்த வீட்டுக்கு சொந்தக்காரர், பரமாசார்யாமேல பரமபக்தி உள்ளவர். வயசு ரொம்ப ஆயிட்டதால தரிசனத்துக்குப் போகமுடியலையே, ஆசார்யாளுக்கு எதுவும் கைங்கர்யம் பண்ண முடியலையேன்னு ஏங்கிண்டு இருந்தார் அவர். இப்போ ஆசார்யாளே தன்னோட அகத்தைத் தேடிவந்து தங்கிக்கறதா சொன்னதும் அவருக்கு சந்தோஷம் பிடிபடலை. ஒரு நாள் முழுக்க ஆசார்யா அங்கேயேதான் இருக்கப்போறார். பக்கத்துலயே இருந்து பார்த்துண்டே இருக்கலாம் . மனசெல்லாம் சந்தோஷத்துல நிறைஞ்சு இருந்தது அவருக்கு.

அன்னிக்கு அங்கேயே தங்கி இருந்து எல்லாருக்கும் தரிசனம் குடுத்தார், மகாபெரியவா. ஊர்க்காராள்லாம் மறுநாளும் அங்கே இருந்து அருளம்ணு ரொம்பவே வேண்டிண்டதால அங்கேயே தங்கினார்.

அடுத்த நாள் பொழுது விடியறதுக்கு முன்னாலயே யாரோ கிணத்துலேர்ந்து தண்ணீர் இறைச்சுண்டு இருக்கற சத்தம் கேட்டுது. அந்த இடத்தோட சொந்தக்காரருக்கு. இந்த நேரத்துல யாரா இருக்கும்னு வந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்.மகாபெரியவாதான் எழுந்திருந்து தன்னோட மரச் செம்பால ஜலம் இறைச்சு ஸ்நானம் பண்ணிண்டு இருந்தார்.

அடடா...ஆசார்யா ப்ரம்ம முகூர்த்தத்துலயே எழுந்துட்டார்ங்கறதை புரிஞ்சுண்டு அவசர அவசரமா அவருக்கு ஏதாவது ஒத்தாசை பண்ணலாம்னு நினைச்சுண்டு கிட்டே ஓடினார் அந்த பக்தர்.

அவரைப் பார்த்ததும்,"என்ன,நீயும் எழுந்துண்டுட்டியா? எனக்கு ஒத்தாசை பண்ணலாம்னு வந்தியாக்கும்.இந்த ஜலம் இறைக்கறதெல்லாம் நான் பார்த்துக்கறேன். இதோ இந்த மரச்சொம்பைப் பார்த்தியா. ஒடைஞ்சு போய் கையெல்லாம் கிழிக்கறாப்புல இருக்கு. நீ எனக்கு புதுசா ஒரு மரச்சொம்பு வாங்கித்தரியா?" ஆணை இடவேண்டிய ஆசார்யா, செய்யறியான்னு கோரிக்கை மாதிரி கேட்டதும் அப்படியே குழைஞ்சுபோனார் அந்த பக்தர். அவரோட கண்ணுலேர்ந்து ஜலம் அருவிமாதிரி கொட்டித்து.

"பகவானே உங்களுக்கு ஏதாவது கைங்கர்யம் செய்ய முடியாம்ன்னு ஏங்கித் தவிச்சுண்டு இருக்கற என்கிட்டே.... வாங்கித்தரியான்னு இப்படிக் கேட்டு சங்கடத்துல ஆழ்த்திட்டேளே..!" தழுதழுத்தார் பக்தர்.

கொஞ்ச நேரத்துல பொழுது நன்னா விடிஞ்சதும் திருப்பதிக்குஆள் அனுப்பி கொஞ்சமும் ஆசாரம் குறையாதபடிக்கு மரச்சொம்பு, கமண்டலு, தண்டம் எல்லாம் வாங்கிண்டு வரச் சொன்னார், அந்த பக்தர்.மகாபெரியவாளோட அன்னிக்கு சாயங்கால அனுஷ்டானத்துக்கு அதையெல்லாம் அவர் முன்னால வைச்சு சமர்ப்பிச்சார்
.
"நன்னா வழவழப்பா இருக்கு. கையைக் கிழிக்காதபடிக்கு பார்த்து வாங்கிண்டு வந்து குடுத்திருக்கே. எல்லாரும் பரம சௌக்யமா இருக்கணும்!" ஆசிர்வதிச்ச ஆசார்யா, அன்னிக்கு ராத்திரியே அங்கேர்ந்து புறப்பட்டு மடத்தோட ஜாகை இருந்த சித்தூருக்குப் போய்ட்டார்.

பக்தர் கூப்பிட்டதுமே அவரோட ஊருக்கு வரேன்னு பெரியவா ஒப்புத்துண்டதுக்குக் காரணம் அந்த பக்தர்மேல இருந்த அன்பு மட்டும் இல்லை .அங்கே தனக்குத் தொண்டு செய்யணும்னு ஏக்கத்தோட காத்துண்டு இருக்கிற இன்னொரு பக்தர் வேண்டுதலுக்கு செவிசாய்க்கணும்கற கருணையும்தான் அப்படிங்கறது அதன்பிறகுதான் புரிஞ்சுது எல்லாருக்கும்

நன்றி: Maha Periyava Facebook Group

HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
 
OM SRI GURUBHYO NAMAH

யானையை “காமாட்சி உள்ளே வந்து வாங்கிக்கோ” என்று அழைத்த பெரியவா.

மாலை நேரம் மேற்கு மாம்பலம் சங்கர மடத்தின் பின்புறம். மஹா பெரியவாளுக்கு தாங்க முடியாத வயிற்றுவலி. சுருண்டு சுருண்டு படுத்து கைகளால் அடி வயிற்றைப் பிசைந்து பிசைந்து மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார். சுற்றி நின்றிருந்த அத்தனை பேரும் துடிதுடித்துப் போயினர். சிலர் கண்ணீர் விட்டு அழுதனர். ஒருவர் மஹா பெரியவாளுக்குக் கூடவா இப்படி எல்லாம் வரும்! எங்களாலே தாங்க முடியலையே என்று ‘ஓ’ வென்று கதறி விட்டார். மஹா பெரியவாளும் மனுஷா தானே. கர்மாவாலே தான் இந்த உடம்பு வந்திருக்கு. அதக்குண்டானதை இந்தச் சரீரம் அனுபவிச்சுத் தானே ஆகணும் என்று கூறினார். சற்றைக்கெல்லாம் வலி நீங்கப் பெற்று சாதாரணமாகி விட்டார். அப்போது மடத்து யானை காமாட்சி தீப நமஸ்காரம் முடிந்து மஹா பெரியவாளிடம் வாழைப்பழம் வாங்கிச் சாப்பிட வந்தது. மஹா பெரியவா ஒரு குடிலில் அமர்ந்திருந்தார். பழத்தை கையில் வைத்துக் கொண்டு யானையை உள்ளே அழைத்தார். ஆனால் சிறுவாசலில் அத்தனை பெரிய சரீரம் எப்படி நுழைய முடியும். யானைப் பாகனும் யோசித்த படி நின்றிருந்தார். மஹா பெரியவா விடாமல் காமாட்சி உள்ளே வந்து வாங்கிக்கோ என்று மீண்டும் அழைத்தார். அடுத்த கணம் நம்ப முடியாத அதிசயம் நிகழ்ந்தது. அந்தப் பெரிய யானை தன் உடலை மிகவும் அழகாகச் சுருக்கிக் கொண்டு அந்தக் குறுகிய வாசற்படியில் நுழைந்து மஹா பெரியவாளிடம் பழத்தைப் பெற்றுக் கொண்டு பின்னால் நகர்ந்த படியே வெளியே வந்தது. மஹா பெரியவாளும் மனுஷா தானே என்று மஹா பெரியவாளை கூறின அடுத்த கணம் இந்த அதிசயம்! இது அவர் திருவிளையாடல் என்று தான் நம்மால் கூற முடியும்.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP

HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
 
OM SRI GURUBHYO NAMAH

"அந்த நாலு விளாம்பழ ஓட்டையும் (தோல் மேல்உள்ள ஓடுகள்) ரசத்திலே போடு, கொஞ்ச நேரம் ஊறட்டும்."-பெரியவா.

(பழங்கள் காணாமல் போய்விட்டன. நல்ல காலமாக, நாலு ஓடுகளாவது இருந்தனவே!)

(பக்தரின் வேண்டுகோளை நிறைவேற்றிய பெரியவா)

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன்

மெலட்டூர் ராமசாமி அய்யர் என்பவர் ஸ்ரீமடத்தின் பக்தர்.

ஒரு தடவை தரிசனத்துக்கு வந்தபோது நன்றாகப் பழுத்த உயர்ந்த ரக விளாம்பழங்கள் வாங்கி வந்து பெரியவா முன் வைத்து, "பெரியவா குக்ஷியில் (வயிற்றில்) இவை சேரணும்" என்று பிரார்த்தித்தார். பெரியவா மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

விளாம்பழக் கூடை உட்புறம் அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அரை மணி கழித்துப் பார்த்தால், கூடை காலி! ஒரே ஒரு பழம் கூட இல்லை.

பூஜைக் கட்டில் பணி செய்யும் இருவர், சுவையான உட்பகுதியைத் தின்றுவிட்டு, விளாம்பழ ஓடுகள் நான்கை ஜன்னலில் வைத்திருந்தார்கள் .

பெரியவா பிக்ஷைக்கு வந்தார்கள்.

"விளாம்பழத்தை என்ன செய்தே?"

எல்லோருக்கும் தேள் கொட்டின மாதிரி சுரீரென்றது. பெரியவா இப்படியெல்லாம் குறிப்பாகக் கேட்டு வாங்கிச் சாப்பிடுகிற வழக்கமில்லையே?.....

.இறுக்கமான மௌனம்.பெரியவாளுக்குப் புரிந்து விட்டது. கண்களை அங்குமிங்கும் சுழல விட்டார்கள்-பெரியவா.

"அந்த நாலு ஓட்டையும் (விளாம்பழ) ரசத்திலே போடு, கொஞ்ச நேரம் ஊறட்டும்."

அந்த ரசத்தை உணவில் சேர்த்துக்கொண்டு சுவைத்தார்கள்.

பெரியவாளுக்கு விளாம்பழத்தின் மீது தனி ஆசை ஏதும் இல்லை. சுமார் நூறு விளாம்பழங்களைக் கொண்டு வந்து சமர்ப்பித்த பக்தரின் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டுமே? என்ற கரிசனம்.

பழங்கள் காணாமல் போய்விட்டன. நல்ல காலமாக, நாலு ஓடுகளாவது இருந்தனவே! விளாம்பழ ஓட்டுச் சுவை சேர்ந்த ரசத்தைச் சாப்பிட்டதால் பக்தரின் பிரார்த்தனைப்படி, 'குக்ஷியில் கொஞ்சம்' சேர்ந்துவிட்டது

.பக்தர்களிடம் அத்தனை பரிவு.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP

HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
 
OM SRI GURUBHYO NAMAH

"அமாவா"

(“நான்தான், நான்தான் அமாவா!” என்றாள் ஒரு பெண்மணி.அவளுக்கு சுமார் ஐம்பது வயது இருக்கும்.)

(பெரியவாளின் 50 வருட ஞாபக சக்தி-பாலபெரியவா உட்பட அனைவருக்கும் ஆச்சர்யம் தந்த சம்பவம்)..

.சொன்னவர்;தில்லைநாதன்.சென்னை
தொகுப்பாசிரியர்;கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

கர்நூல் வியாஸ பூஜை முடிந்து காஞ்சிபுரம் வந்து சேர்ந்த சமயம்,புதுப்பெரியவர்கள் வடக்கே யாத்திரை சென்று விட்டார்கள். மகாபெரியவர்களும் பால பெரியவர்களும் காஞ்சியில் தங்கியிருந்து தரிசனம் தந்து கொண்டு இருந்தார்கள்.

அப்போது ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்த வடதேசத்துக்காரர்கள் தரிசனத்துக்கு வந்தார்கள். நானும் பெரியவாளுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தேன். என்னை அருகில் அழைத்த மகாபெரியவர்கள் பாலபெரியவர்களுக்கும் தமக்கும் நடுவிலிருந்த சிறிய இடைவெளியில் வந்து உட்காரச் சொன்னார்கள். நானும் ஒடுங்கியபடி அந்த குறுகலான இடத்தில் அமர்ந்தேன்.

மகாபெரியவர்கள் என்னை, “திதிகளில் கடைசித் திதி’என்ன?” என்று கேட்டார்கள்.

“அமாவாசை, பௌர்ணமாவாசை” என்றேன்.

“முதலில் சொன்னதை மட்டும் சொல்” என்றார்கள்.

“அமாவாசை” என்றேன்.

“அதில் கடைசி எழுத்தை எடுத்துவிட்டுச் சொல்”

“அமாவா”

வடநாட்டுக்காரர்களைக் காட்டி,”அதை அவர்களிடம் சொல்!” என்றார்கள்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை.

“அவர்களிடம் கேள்” என்று மறுபடியும் சொன்னார்கள்.

நான் அவர்களைப் பார்த்து “அமாவா!” என்றேன்.

“நான்தான், நான்தான் அமாவா!” என்றாள் ஒரு பெண்மணி.அவளுக்கு சுமார் ஐம்பது வயது இருக்கும்.

“அவள் என்னை இதற்கு முன் பார்த்திருக்கிறாளா? என்று ஹிந்தியில் கேள்!” என்றார்கள்.
கேட்டேன்.

“நான் பார்த்ததில்லை!” என்று சொன்னாள்.

“நான் அவளைப் பார்த்திருக்கிறேன் என்று சொல்!”
சொன்னேன்.

“ஆமாம்,ஆமாம்!” என்றாள் அந்தப் பெண்மணி.

“ஆமாம் என்கிறாளே? எப்படி என்று கேள்!” என்றார்கள் பெரியவர்கள்
கேட்டேன்.

“நான் சின்னக் குழந்தை, இரண்டு வயது இருக்கும். அப்போது எங்கள் தாத்தா பெரியவர்களை எங்கள் அரண்மனைக்கு வரவழைத்துப் பாதபூஜை செய்திருக்கிறார்கள்.அப்போது பார்த்திருக்கிறார்கள். இதெல்லாம் எங்கள் தாத்தா சொல்லி எனக்குத் தெரியும். நான் சின்னக் குழந்தையானதால் எனக்குப் பெரியவர்களைப் பார்த்த நினைவு இல்லை” என்று சொன்னாள், அந்தப் பெண்மணி.

பின்னர் விசாரித்தபோது காசி யாத்திரை சென்றிருந்த சமயம் பெரியவர்கள் அந்த ஜமீன்தாருடைய ஸமஸ்தானத்தின் அழைப்பின் பேரில் சென்றிருக்கிறார்கள் என்று தெரியவந்தது. இதைக் கேட்கும்போது பாலபெரியவர்கள் உட்பட அனைவருக்கும் ‘பெரியவாளுக்கு இத்தனை ஞாபகசக்தியா?’ என்று ஆச்சர்யமாக இருந்தது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சுமார் இருபத்தைந்து பேர்கள் தரிசனத்துக்காக மிகவும் பக்தி சிரத்தையுடன் வந்திருந்தார்கள்.அந்த சமஸ்தானத்தின் பெயரைக் கூடச் சொன்னார்கள். அது எனக்கு நினைவு இல்லை.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP

HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
 
OM SRI GURUBHYO NAMAH

"குங்குமமும் குங்குமப்பூவும்"

(ஒரு ஏழை குழந்தைக்காக பெரியவா நடத்திய நாடகம்)

(தன்னுடைய காய்ச்சல்,கபத்திற்காக ஒரு பக்தை கொடுத்த குங்குமப்பூவை ஏழை குடியானவப் பெண்ணின் குழந்தைக்குக் கொடுத்து தான் குங்குமத்தை மருந்தாக போட்டுக் கொண்ட சம்பவம்)

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

பெரியவாளுக்குக் கடுமையான காய்ச்சல்,கபம், வெங்குடி டாக்டர் என்பவர்தான் பெரியவாளைப் பரிசோதித்து மருந்து கொடுப்பார்.

இந்தத் தடவை அவர் கொடுத்த மருந்துகளையும் சாப்பிடவில்லை. காய்ச்சல் - கபம் இறங்குவுமில்லை.

ஒரு பக்தை, தினமும் தரிசனத்துக்கு வருபவர். பெரியவாள் நிலையைப் பார்த்து, குங்குமப்பூவை சந்தனக் கல்லில் இழைத்து கொஞ்சம் சூடு பண்ணி பெரியவா நெற்றியில் பற்றுப் போட்டுக் கொள்ளும் பக்குவத்தில் கொண்டு வந்து கொடுத்தாள்.அந்த அம்மாள் வெகு பக்தியுடன் கொடுத்த, விலையுயர்ந்த அந்தப் பொருளை ஏதோ ஒரு சாமானியப் பொருளை ஏற்பது போல குங்குமப்பூ இருந்த வாழைத் தொன்னையை பெற்றுக் கொண்டு மேனாவில் ஓர் ஓரத்தில் வைத்து விட்டார்கள்.

அந்தச் சமயம் ஸ்ரீ காமாட்சியம்மன் வீதிவலமாக மடத்தின் அருகே வந்து கொண்டிருந்தது.

"வாசல்லே, காமாக்ஷி வந்திருக்கா, தரிசனம் பண்ணிட்டு வாயேன்..."

அம்மையார் வெளியே போனார்.

அவர் நகர்ந்ததும் ஒரு குடியானப் பெண்மணி தரிசனத்துக்கு வந்தார். 'ஏழை' என்று முகத்தில் ஒட்டியிருந்தது.இடுப்பில் ஒரு குழந்தை. ஆறு மாதம் இருக்கும். முட்ட முட்ட ஜலதோஷத்துடன் திணறிக் கொண்டிருந்தது.

"கொழந்தைக்கு ஜலிப்பு....மருந்து வாங்கக் கூட முடியல்லே. சாமி துண்ணூறு கொடுக்கணும்" என்று அழாக்குறையாகப் பிரார்த்தித்துக் கொண்டாள் அந்தப் பெண்மணி.

அவசரம்அவசரமாக குங்குமப்பூ தொன்னையை எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்து, உடனே வீட்டுக்குப் போய் குழந்தையின் நெற்றியில் இரண்டு,மூன்று முறை தடவச் சொன்னார்கள் பெரியவா. அந்தப் பெண்ணும் உடனே போய்விட்டாள்.

"ரோட்டிலே தூசி விழுந்துடும். மறைச்சு ஜாக்கிறதையா எடுத்திண்டு போ" என்று எச்சரிக்கை வேறு!

(கவனிக்கவும்-போகும் வழியில் குங்குமப்பூ அம்மையார் பார்க்காமல் இருக்க -மறைச்சு எடுத்துண்டு போ)

அடுத்த நிமிஷம் மேனாவில் இருந்த குங்குமத்தில் கொஞ்சம் எடுத்து சிறிது தண்ணீர் விட்டுப் பசை மாதிரி ஆக்கி, நெற்றியில் பற்றுப் போட்டுக் கொண்டாற்போல் இட்டுக் கொண்டார்கள் பெரியவா.

வீதிவலம் வந்த காமாட்சியைத் தரிசித்து விட்டு மேனாவின் அருகே வந்து நின்றார் குங்குமப்பூ அம்மையார்.

பெரியவா நெற்றியில் சிவப்புப் பூச்சு! "ஈசுவரா!...நான் கொண்டு வந்து கொடுத்த குங்குமப்பூவை பெரியவா பத்துப் போட்டுண்டிருக்கா!" என்று ஏராளத்துக்கு மகிழ்ச்சி.

மறுநாள் அந்த அம்மையார் தரிசனத்துக்கு வந்தார்.

"உன் குங்குமப்பூவால் கபம் குறைந்தது..."

அந்த அம்மையாருக்கு உடலெல்லாம் புல்லரித்தது. (கவனிக்கவும்; 'உன் குங்குமப்பூவால் என் கபம் குறைந்தது' என்று பெரியவா சொல்லவில்லை. ஆனால், ஏதோ ஒரு ஜீவனுக்கு, அந்த அம்மையார் கொடுத்த குங்குமப்பூ பயன்படத்தானே செய்தது? அத்துடன் அந்த அம்மணியின் மெய்யான பக்தியை வேறு எந்தச் சந்தர்ப்பத்தில் பாராட்டுவது?

ஆனால், நடந்த நாடகத்தை நேரில் பார்த்துக் கொண்டிருந்த அணுக்கத் தொண்டர்க்களுக்கு உண்மை தெரியும். விலையுயர்ந்த குங்குமப்பூச் சாந்து, ஓர் ஏழை வீட்டுக் குழந்தையின் துன்பத்தைப் போக்கியது என்ற தேவ ரகசியம் தொண்டர்கள் அனுபவம் தானே

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP

HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
 
OM SRI GURUBHYO NAMAH

"நவராத்திரி பூஜைக்கு உன்னோட பெண் குழந்தைய கூட்டிண்டு வா"

(பெண் குழந்தை இல்லாத நாராயண சாஸ்திரிகளைப் பார்த்து)

(ஸ்ரீ பெரியவாள் சொல்வது சரிதான் உன் மனைவி இப்ப மாசமாகத்தான் இருக்கா-பாட்டி)

சொன்னவர் (மணக்கால்) பாலசுப்ரமணியம் --- மஸ்கட்

எங்கள் தகப்பனார் ஸ்ரீ மணக்கால் நாராயண சாஸ்திரிகள் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் முத்ராதிகாரி யாக ஸ்ரீ பெரியவாள் கைங்கர்யம் செய்து கொண்டு தன்னை விஜய தசமி அன்று ஸ்ரீ பெரியவா ஸ்ரீ சரணம் அடைந்து கைங்கர்யம் செய்து கொண்டு இருக்கிறார்.

ஒரு சமயம் சுமார் 48 வருஷம் முன்பு வியாச பூஜா முடிந்து ஊருக்கு கிளம்ப உத்தரவு வேண்டி இருந்த சமயம் ஸ்ரீ பெரியவா இந்த முறை நவராத்திரி பூஜைக்கு உன்னோட பெண் குழந்தைய கூட்டிண்டு வா என்றார். எங்கள் தகப்பனார் எனக்கு ரெண்டு பிள்ளைகள் தான் ஸ்திரீ பிரஜை இல்லை என்று சொன்னார். திரும்பவும் ஸ்ரீ பெரியவா நவராத்திரி பூஜைக்கு உன்னோட பெண் குழந்தைய கூட்டிண்டு வா என்று திரும்பவும் சொன்னார். இதே போல மூன்று முறை சொல்லிவிட்டு ஸ்ரீ பெரியவா உள்ளே சென்று விட்டார்.

அப்பா மணக்கால் வந்ததும் எங்கள் பாட்டி (பார்வதி) இடம் ஸ்ரீ பெரியவா முன்பு நடந்த சம்பவத்தை சொன்னார். எங்க பாட்டி சொன்னது ~ ஆமாண்டா நீ ஸ்ரீ பெரியவாள் சொல்வது சரிதான் உன் மனைவி இப்ப மாசமாகத்தான் இருக்கா என்றார்.

அப்பா ஸ்ரீ பெரியவாளிடம் ஸ்திரீ பிரஜை பிறந்த விஷயம் சொன்ன சமயம் ஒன்றும் தெரியாதது மாதிரி 'அப்படியா' என்று கேட்டாராம். ஸ்ரீ பெரியவா பரிபூர்ண ஆசிர்வாத மகிமை பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஸ்ரீ பெரியவா காமகோடி என்று பெயர் சூட்டினார்.

ரெண்டு நவராத்ரி பூஜைக்கு கலந்துகொள்ளும் பாக்கியம் ஸ்ரீ பெரியவா கொடுத்தார்.

இப்ப அந்த காமகோடி பெண்ணின் (அகிலாண்டேஸ்வரி) கல்யாணம் நடந்து தற்சமயம் கனடாவில் இருக்கா

இது போல அந்த மகான் நடத்திகொண்டிருக்கும் அற்புத லீலைகள் பல,

இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்கிறது

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP

HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
 
OM SRI GURUBHYO NAMAH

”என்ன! நவராத்திரி விழாவில் முதல் நாள் பாடியாச்சா? நல்ல மழையாச்சே! எப்படி டிக்கெட் கிடைச்சு வந்தீர்கள்?”-பெரியவா

(சங்கீத இரட்டையர்கள் பி.வி. ராமன் மற்றும் பி.வி. லட்சுமணன் -க்கு அருள் புரிந்த நிகழ்ச்சி)

(பெரியவாளின் ஞான திருஷ்டி) ( நவராத்திரி ஸ்பெஷல் பதிவு)

சங்கீத இரட்டையர்கள் பி.வி. ராமன் மற்றும் பி.வி. லட்சுமணன் இருவரும் பிரபலமானவர்கள். டைகர் வரதாச்சாரியாரிடம் பாடம் பயின்றவர்கள்.

மானாமதுரையில் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழாவை காஞ்சிப்பெரியவரின் உத்தரவின் பேரில் தொடங்கியவர்கள். இந்தச் சகோதரர்களை அடிக்கடி காஞ்சி மடத்திற்கு அழைத்து பாடச் சொல்வது வழக்கம்.

ஒருமுறை,நவராத்திரி பூஜை மூன்றாம்நாள் விழாவுக்கு காஞ்சிமடத்தில் பாடுவதாக அவர்கள் ஒப்புக்கொண்டிருந்தார்கள்.

அதே நாளில், திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசுவாமிகோயிலிலும் நவராத்திரி

நிகழ்ச்சியில் சகோதரர்களுக்கு அழைப்பு வந்திருந்தது. ஆனால், காஞ்சி மடத்தில் பாடவேண்டியிருப்பதை குறிப்பிட்டு பதில் கடிதம் அனுப்பி வைத்தனர்.

ஆனால், நவராத்திரி விழா துவங்குவதற்கு இருபது நாளைக்கு முன் திருவனந்தபுரம் அரண்மனையில் இருந்து சகோதரர்களுக்கு மீண்டும் அழைப்புக் கடிதம் வந்தது.

அதில் நவராத்திரி கலைவிழாவில் முதல்நாள் பாடவேண்டிய பாலக்காடு கே.வி. நாராயண சுவாமிக்கு வரமுடியவில்லை. அவர் மூன்றாம் நாள் பாட வருவதாக ஒத்துக்கொண்டார். அதனால் முதல்நாள் நிகழ்ச்சியில் அவசியம் பாடும்படி கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

சகோதரர்கள் இருவரும் ரயிலில் முன்பதிவு செய்ய முடியாததால், பஸ்சில் திருவனந்தபுரம் கிளம்பினர். முதல்நாள் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மூன்றாம் நாள் காஞ்சிபுரம் புறப்பட்டனர். அப்போது கனமழை பிடித்துக்கொண்டது. காஞ்சிபுரம் செல்லமுடியுமோ முடியாதோ என்ற வருத்தம் உண்டானது. பெரியவரை வேண்டிக் கொண்டு மழையோடு மழையாக பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்தனர். சென்னைக்குக் கிளம்பும் விரைவு பஸ் கிளம்பிக்கொண்டிருந்த சமயம். இவர்கள் பஸ்சில் இடம் இருக்கிறதா என பார்த்தனர்.

சொல்லி வைத்தது போல் இரண்டு இருக்கைகள் மட்டும் காலியாக இருந்தன. மூன்றாம் நாள் நிகழ்ச்சி தொடங்குவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்னதாக காஞ்சிமடத்திற்கு வந்து சேர்ந்தனர். காலை பத்து மணிக்கு பூஜை ஆரம்பம். பூஜையில் சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பாகப் பாடினார்கள்.

பிரசாதம் வழங்கும் நேரம்… சங்கீத சகோதரர்கள் பெரியவர் முன் நின்றார்கள். பெரியவர் அவர்களிடம், “”என்ன! நவராத்திரிவிழாவில் முதல் நாள் பாடியாச்சா? நல்ல மழையாச்சே! எப்படி டிக்கெட் கிடைச்சு வந்தீர்கள்?”

திருவனந்தபுரம் சென்று வந்த விஷயம் பெரியவருக்கு எப்படி தெரிந்தது என்று சகோதரர்கள் இருவருக்கும் ஒரே ஆச்சரியம். சாஷ்டாங்கமாக அவருக்கு நமஸ்காரம் செய்துவிட்டு, “”பெரியவா அனுகிரஹத்தாலே திருவனந்தபுரத்திலேயும், காஞ்சியிலேயும் பாடும் வாய்ப்பு கிடைச்சுது!” என்று பணிவுடன் சொன்னார்கள்

. “”அப்படி ஒன்றும் இல்லை! அம்பிகை தான் ஒரே கல்லடிச்சு உங்களுக்கு இரண்டு மாம்பழம் கொடுத்துட்டான்னு சொல்லு!” என்று வாழ்த்தினார். பெரியவரின் வாழ்த்தைக் கேட்டு சகோதரர்கள் இருவரும் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தனர்

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP

HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
 
OM SRI GURUBHYO NAMAH

பெரியவா சரணம்

கணவருக்குத் திடீரென மாரடைப்பு. திருமணமாகி இரண்டு வருஷங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் இவ்வளவு பெரிய சோதனை.

தவித்துப் போன இளம் மனைவி ஏழுமலையானுக்குப் பிரார்த்தனை செய்து கொண்டாள். கணவருடைய நோயின் கடுமை குறைந்தது. 'இனிமே பயமில்லை' என்ற உத்தரவாதம் அளித்தார்கள் டாக்டர்கள்.

திருப்பதிக்குப் போய் பெருமாள் தரிசனம் செய்து விட்டு, காஞ்சிபுரம் சங்கர தரிசனத்திற்கு வந்தாள் பெண்மணி.

"திருப்பதி உண்டியல்லே.... பிரார்த்தனையைச் செலுத்திட்டே? "

அந்தப் பெண்ணிற்கு மகா ஆச்சரியம். தான் இன்னும் அது பற்றி யாரிடமும் பேசக் கூட இல்லையே!

" ஆமாம் பெரியவா.... அகத்துக்காரரைக் காப்பாற்றிக் கொடு : திருமாங்கல்யம், சங்கிலிக் கொடி எல்லாவற்றையும் சமர்ப்பிக்கிறேன்னு ஸ்ரீநிவாஸனுக்குப் பிரார்த்தித்துக் கொண்டேன். அவர் கடமையைச் செய்துட்டார். நான் என் பிரார்த்தனையை நிறைவேற்றி விட்டேன். "

பெண்மணியின் கழுத்தில் மஞ்சள் கிழங்கு கட்டிய மஞ்சள் கயிறு பளீரென்று தெரிந்தது.
பெரியவா ஸ்ரீ மடத்திலிருந்து ஒரு திருமாங்கல்யம், இரண்டு குண்டு ஆகியவற்றைக் கொண்டு வரச் சொல்லி, அந்தப் பெண்ணிடம் கொடுக்கச் சொன்னார்கள்.

அந்தப் பெண் தனியிடம் சென்று, மஞ்சள் கயிற்றில் அவற்றைக் கோர்த்து அணிந்து கொண்டு வந்து பக்தியும், நன்றியும் பொங்கி வழிய, நமஸ்காரம் செய்தாள்.

கூடியிருந்த பக்தர்கள், அந்தப் பெண்ணின் பாக்கியத்தை எண்ணி வியந்தார்கள். 'நூறு வயசு' என்று வாழ்த்தினார் ஒரு முதியவர்.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP

HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
 
PART I

OM SRI GURUBHYO NAMAH

நவரத்திரி நாளின் சுண்டல் விநியோகம் கூட ஒரு பரிகாரம் சார்ந்த செயல்என்பது பெரியவரால் விளங்கியது."

(குடிகாரக் கணவனை திருத்திய சம்பவம்)

நவராத்திரி ஸ்பெஷல் கட்டுரை.

நவராத்திரியும் கொலுவும் மேல்தட்டு மக்களுக்காக என்று சில காலம் இருந்தது. குச்சு வீட்டுக்கும்கொலுவுக்கும் சம்பந்தமில்லாத படி, ஒரு இடைவெளியும் இருந்தது. அதற்கு சில வலுவான காரணங்களும் இருந்தன.

கொலு வைக்க முதலில் ஒரு பெரிய ஹால் வேண்டும். அதாவது இடம். அடுத்து, தினசரி வருகிறவர்களுக்கு வெற்றிலை – பாக்கு வைத்து தருவதோடு, சுண்டல் விநியோகம் இதில் முக்கியம். இது போக, தினசரி லலிதா சஹஸ்ரநாம பாராயணம், நைவேத்யம், பாகவதம் படிப்பது என்கிற கட்டங்கள் வேறு. இதை எல்லாம் ஒருவரால் செய்ய முடியாது. ஒரு குடும்பத்தில் எல்லோரும் ஒத்துழைத்தால் மட்டுமே இது சாத்தியம்.

அன்றாடம் வேலைக்கு போனால்தான் வீட்டில் அடுப்பெரிய முடியும் என்பவர்களுக்கு துளியும் சாத்தியமில்லை என்கிற ஒரு நிலையை, இது உருவாக்கிவிட்டது. தன்னால் தான் கொலு வைக்க முடிய வில்லை – யாராவது வைத்திருக்கும் கொலுவுக்காவது போய் வணங்கி வரலாம் என்பதற்கும் சாதி, ஏழ்மை என்கிற குறுக்கீடுகள்.

மொத்தத்தில், மிகுந்த பொருட் செறிவுள்ள நவராத்திரி என்பது மேல் தட்டு மக்களுக்காக மட்டுமே என்று இருந்த ஒரு நிலையில்தான், பெரியவர் ஒரு ஏழைப்பெண் மூலம், ‘அது அனைவருக்குமானது. மனம் பக்தியோடு விரும்ப வேண்டியதே முக்கியம்’ என்பதை உலகத்துக்கு உணர்த்தினார்.

ஒரு குடிகார கணவனோடு அல்லாடிய அந்தப் பெண்ணும், வரிசையில் நின்று பெரியவரை சந்தித்தபோது அவள் கண்களில் அப்படி ஒரு சோகம். மனமும் தற்கொலை செய்து கொண்டுவிடும் எண்ணத்தில் எல்லாம் இருந்தது.

இவ்வேளையில்தான் பெரியவர் அவள் அவலத்தை, அவள் கூறாமலே புரிந்து கொண்டார்.

இந்த நாட்டில் பெண்களின் வாழ்வு என்பதே ஒரு சூதாட்டம் போலத்தான் இருக்கிறது. நல்ல கணவன் என்னும் தாயம் எல்லோருக்கும் விழுந்து விடுவதில்லை. அவளாலும் சுயமாக ஒரு மனம் நிறைந்த கணவனை தேர்வு செய்ய வாழ்வின் வழிமுறைகளில் இடமில்லை. இது என்ன கொடுமை அல்லது சோதனை என்பதுதான் அவளுக்குள் இருந்த கேள்வி.

அதற்கு பெரியவர் சொன்ன பதில், அவளுக்கு மட்டும் சொல்லப்பட்டதல்ல; அது ஒட்டுமொத்த பெண்கள் சமூகத்துக்கும் சேர்த்துதான்…

‘நம்ம சமூகத்துல வீட்டுப் பொண்ணு கண்ணுல கண்ணீர் வரக்கூடாதுன்னு சொல்வா. அதுக்கு உண்மையான அர்த்தம், அவ சந்தோஷமாய் புருஷனோட பிள்ளை குட்டிகள்னு வாழணுங்கறது மட்டுமில்லை. அப்படி அவ வாழற மாதிரி, அந்த வீட்டு ஆண்மக்கள் நடந்துக்கணும். எந்த ஒரு பெண்ணை ஒரு ஆண்மகன் அழ வெச்சாலும் சரி; அதுக்கான பதில் விளைவு, அவன் சகோதரி மூலமாவோ இல்லை; அவன் பெத்தெடுக்கப் போற பெண் மூலமாவோ வந்தே தீரும்.

அம்மா, அக்கா, தங்கைகள் மேல பாசமாய் ஒரு பவ்யத்தோட இருக்கறது பெருசேயில்லை. எல்லாப் பெண்கள் கிட்டயும் இந்தப் பாசமும் பவ்யமும் இருக்கணும். சாபங்கள்ள பெண் சாபத்துக்கு வேகம் அதிகம். ஆகையால, அந்த சாபத்துக்கு ஆளாகாம வாழறதுதான் உத்தமமான ஆண்மை’ என்று, ஆண் மைக்கு பொருள் கூறிய பெரியவர், எங்காவது ஒரு பெண் கண்ணீர் சிந்து கிறாள் என்றால், அதற்கு பின்னாலே நிச்சயம் அவளது வினைப்பாடு மட்டு மல்ல; அவளது குடும்பத்து ஆண்களின் வினைப்பாடுகளும் இருக்கும் என்று கூறியதுதான் இதில் முக்கியம்.

இதனால்தான் நம் சமூகத்தில் பல பெண்களின் திருமண வாழ்க்கை என்பது அமைந்தால்தான் உண்டு, இல்லாவிட்டால் சாகும் வரை சுருதி பேதத்தோடே வாழ வேண்டி வந்துவிடுகிறது. அதனால் பாதகமில்லை. எப்பேர்பட்ட அழுக்கையும், தோக்கிற விதமாக தோத்தால் நீக்கி விடமுடியும் என்னும்போது, இந்த வினைப்பாடுகளை எண்ணி அஞ்சத் தேவையில்லை.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP

HARA HARA SANKARA JAYA JAYA SANKARA


Contd......
 
PART - II

OM SRI GURUBHYO NAMAH

மனித வாழ்க்கை என்பதே ஒரு மாயா விளையாட்டுதானே? ஒருவருக்கு பிடித்த விஷயம் இன்னொருவருக்கு பிடிக்காமல் போகிறது; ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வித ரசனை. எல்லாமே மாயையால்தானே?

அப்படி இருக்க, இங்கே பாவமே செய்யாமல், புண்ணியம் மட்டுமே செய்தபடி வாழ்ந்துவிட எத்தனை பேரால் முடியும்? தெரிந்தும் தெரியாமலும், அறிந்தும் அறியமாலும், புரிந்தும் புரியாமலும் தவறுகள் செய்வதும், பின் வருந்தித் திருந்துவதும்தானே, மனிதர்களின் வழக்கமாக உள்ளது.

தவறுகளிலேயே மூழ்கிவிடக்கூடாது. அறச்செயல்களையும் அவர்கள் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான், திருநாள் கொண்டாட்டங்கள் வருகின்றன. மகாமகம், கும்ப மேளா என்று நடப்பதெல்லாமே பாவமூட்டையின் கனத்தை குறைப்பதற்குதானே?

அதெல்லாம் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வரும் விசேஷங்கள். வருடாவருடமே ஒரு ப்யூரிஃபயரை, ஒரு ரெக்டிஃபிகேஷனை, ஒரு ப்ரிவென்ஷனை செய்து கொள்ளத்தான் நவராத்திரமே வகுக்கப்பட்டது.

விஷ்ணுவுக்கும், ஈஸ்வரனுக்கும், மற்றுமுள்ள முருகன், கணபதி போன்றோருக்கெல்லாம் ஒன்றிரண்டு நாள்தான் இம்மட்டில் கணக்கு.

அம்பாள் தாய்மை கொண்டவளல்லவா? அதனால்தான், வஞ்சனை இல்லாமல் மனித வாழ்க்கைக்கு அடிப்படையாக விளங்கும் ஒன்பது ரசங்களுக்கும் ஆதாரமான ஒன்பது சக்தியை வாரி வழங்கி, தன் பிள்ளைகளை ரட்சிக்க ஒன்பது நாட்களுக்கு நவராத்திரியை நமக்கு கொடுத்துவிட்டாள்.

இப்படிப்பட்ட நவராத்திரியை அந்த ஏழைப்பெண்ணும் கொண்டாடச் சொல்கிறார் பெரியவர்.

‘பெருசா கொலு வைக்கணும்னு அவசியமில்லை. பக்தியோட நாலு பொம்மை போதும். ஒரு பலகை மேல கோலம் போட்டு, அந்த பொம்மைகளை வெச்சு தினசரி விளக்கேத்தி உருக்கமாய் வழிபடு. சிரமப்பட்டாவது தினசரி ஒரு தானியத்துல சுண்டல்பண்ணிடு. அதை உன் கையால எல்லோருக்கும் விநியோகம் செய்.

கொண்டக்கடலை சுண்டல் தரும் போது, குரு பகவானோட அனுக்ரஹத்தை உடம்பானது உறிஞ்சிக்கற ஆற்றல் ஏற்படறது. பாசிப்பயறுல சுண்டல் தரும் போதும் இதேமாதிரி நடக்கறது. கிரகங்களோட ஆற்றல் மத்தவாளுக்கு கிடைக்க நாம காரணமாய் இருக்கறதால, கிரகங்களோட கருணை நம் வரைல அதிகரிக்கறது.

நம்ம ஜாதகப்படி க்ஷீணமாய் ஒரு கிரகம் இருந்தா, அது மருந்து சாப்பிட்ட உடம்பாட்டம் பலமடையறது. உடம்பு ஆரோக்கியமானாலே, மனசும் ஆகித்தானே தீரணும்?

இப்படி ஒன்பது நாள், ஒன்பது சக்தியை நாம ஏற்படுத்தறோம். நமக்குள்ளேயும் ஏற்படுத்திக்கறோம்’ – என்று அவர் கூற, அந்த பெண்ணும் தன்னால் முடிந்த விதத்தில் நவராத்திரியை கொண்டாட, அனுக்ரஹம் என்னும் அருள் அவள் வரையில் துளித்துளியாக சேரத் தொடங்கியது. மூன்று மாதங்களில் அவள் வாழ்வில் பெரிய மாற்றம். அவள் கணவனுக்கு உடல் நலம் பாதித்தது. டாக்டர்கள் எப்படியோ காப்பாற்றிவிட்டனர். கூடவே, இனி ஒரு வேளை குடித்தாலும் உயிர் போய்விடும் என்று செய்த எச்சரிக்கை, அவனை குடியின் பக்கமே போகவிடாதபடி தடுத்தது. குடி நிற்கவும் புத்தியும் தெளிவாகியது. நல்ல நேரம் வந்துவிட்டால், அது எல்லா சாகசங்களையும் செய்யத் தொடங்கிவிடும்.

குடிகார கணவன் திருந்தவுமே நல்ல வேலையும் கிடைத்துவிட்டது. அந்தப் பெண்ணும் நவராத்திரியின் அற்புதத்தை புரிந்துகொண்டாள். பெரியவரையும் தன் கொலுவில் ஒரு கடவுளாக சேர்த்துக் கொண்டாள்.

கல்கத்தா சேட்ஜியின் பதினெட்டு புராண நூல் வெளியீடு மட்டுமே பரிகாரமல்ல; நவரத்திரி நாளின் சுண்டல் விநியோகம் கூட ஒரு பரிகாரம் சார்ந்த செயல் என்பது பெரியவரால் விளங்கியது.

உடனேயே அரசமரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்து பிள்ளை வந்துவிட்டதா என்று பரிசோதிப்பதுபோல, இந்த விஷயத்தில் பரிசோதனைகள் கூடாது.

ஆத்மார்த்தமாகவும் உருக்கமாகவும் செய்ய வேண்டியது, பின் ஆசையோடும் ஏமாற்றுவதற்காக செய்கின்ற ஒன்றாகவும் மாறி பரிகாரத்துக்குப் பதில் பெரும் பாவத்தை தந்துவிடும்.

‘இந்த நவராத்திரியின்போது நாம் குழந்தைகளாகிவிட வேண்டும். ஏனென்றால் குழந்தைகளுக்குத்தான் கோபமோ தாபமோ நிலையானது கிடையாது. உணர்ச்சிகள் வேரூன்றாமல் நாமும் குழந்தையாக மாறி, பக்தி புரியவேண்டும்.

உப நிஷதமும் ‘குழந்தையாய் இரு’ என்கிறது – என்னும் பெரியவர், அம்பாளின் முப்பெரும் அம்சங்கள் குறித்து சொன்னதையும் கேட்போம்.

சாஷாத் பராசக்தியை காத்யாயனியாகவும், மகாலக்ஷ்மியை பார்கவியாகவும், நாம் குழந்தைகளாக்கி, அந்த பாவத்திலேயே வழிபட்டால் நமக்கும் குழந்தைத் தன்மை சாஷாத்கரித்துவிடும். இந்த நாளில் வாட்டர் ஃப்ரூப் என்று சொல்வது போல், நாம் காம ஃப்ரூப், சோக ஃப்ரூப் என்று எல்லாமாக சாந்தமாக ஆய்வோம்.

குழந்தை ரூபத்தில் இருந்தாலும் ஞானப் பாலூட்டும் ஸ்ரீமாதாவாக இருக்கிற தேவி நமக்கு இந்த அனுகிரகத்தை செய்வாள்.

குழந்தையாக வந்த காத்யாயனியை தமிழ்நாட்டு கிராம ஜனங்கள் கூட நீண்ட காலமாக வழிபட்டு வந்திருக்கிறார்கள் என்பது என் யூகம். காத்தாயி என்கிற சொல் தான் காத்யாயனி என்று நினைக்கிறேன்.

பட்டாரிகை என்று பெரிய வித்யோபாசகர்கள் குறிப்பிடும் அம்பாளைத்தான், நம் கிராம மக்கள் பிடாரி என்று பூஜிக்கிறார்கள். பழைய செப்பேடுகளில் பட்டாரிகா மான்யம் என்பதுதான் பிடாரி மான்யம் என்று திருத்திக் குறிப்பிடப்பட்டது.

இவ்வாறே, கிராம ஜனங்களும் கூட சரஸ்வதியை நீண்ட காலமாக வழிபட்டிருக்கிறார்கள். பேச்சாயி, பேச்சாயி என்று சொல்கிற கிராம தேவதை பேச்சுக்கு ஆயியான வாய்க்தேவி சரஸ்வதியைத்தான் குறிப்பிடுகிறது.

கிராமத்து ஜனங்களை அம்பாள் புறக்கணித்துவிடவில்லை. அவர்களுக்கு ஏற்ப, போய் அவர்களிடம் அமர்ந்து அருள்பாலிக்கிறாள்.”- என்று அம்பாளுக்கும் துர்காலக்ஷ்மி சரஸ்வதிக்கும் பெரியவர் கூறிய விளக்கமாகட்டும், அவர் காட்டிய வழியாகட்டும் அவரை ஜகத்குரு என்று சொல்வது எவ்வளவு சரியான பதம் என்று எண்ணி நெகிழ வைக்கிறது.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP

HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
 
OM SRI GURUBHYO NAMAH

"தந்தி மணியார்டர் உடனே தாமதிக்காம பண்ணச் சொன்ன #மகாபெரியவா".

( 'பில்வம் வைத்தா உத்தரகிரியை சம்பவம்)

(மகாபெரியவாளோட தீர்க்க தரிசனம் எல்லாம்,சாதாரண மனுஷாளுக்குப் புரியாத ரகசியம்.இதெல்லாம் நேரடியா அனுபவிச்சவா அடைஞ்சதும், அதைப்பத்தி படிக்கவோ, கேட்கவோ நமக்கு சந்தர்ப்பங்களை அமையறதும்தான் நம்மோட மகா பாக்கியம்).

நன்றி- குமுதம் லைஃப்

மகாபெரியவா ஒரு நாள் தினசரி செய்ய வேண்டிய அனுஷ்டானங்களை உரிய நேரம் கடந்தும் செய்யாம ஏதோ யோசனையில மூழ்கி இருந்தார். அவரைப் பார்த்தா மோன நிலையில ஏதோ தியானத்துல ஆழ்ந்து இருக்கறவா மாதிரி தெரிஞ்சுது.

மடத்துல உள்ளவாளுக்கே அதுமாதிரியான சூழல் அபூர்வம்கறதால, அவாளும் மகா பெரியவாளோட அந்த மோனத் தவத்துக்கு காரணம் தெரியாம விழிச்சுண்டு இருந்தா.

கொஞ்ச நேரம் கழிச்சு கண்விழிச்ச மகான், மடத்தோட மேனேஜரைக் கூப்பிட்டார்.ரொம்ப காலத்துக்கு முன்னால மடத்தோட தொடர்புல இருந்த ஒருத்தரோட முகவரியைத் தேடி எடுத்துண்டு வரச்சொன்னார்.

பலகாலத்துக்கு முன்னால மடத்துக்கு கைங்கரியங்கள் செஞ்சவர் என்பதால், குறிப்புநோட்டுகள் பலதையும் தேடி ஒருவழியா அவரோட விலாசத்தைத் தேடி எடுத்துண்டு வந்தார், மடத்தோட காரியதரிசி.

அந்த விலாசத்தைப் படிக்கச் சொல்லிக் கேட்ட பரமாசார்யா அது சரியான முகவரிதான்கற மாதிரி தலையை அசைத்தார். அப்புறம்,"இந்த விலாசத்துக்கு உடனடியா இவ்வளவு பணத்தை (குறிப்பிட்ட தொகையைச் சொன்னார்) தந்தி மணியார்டர் பண்ணிடு,தாமதிக்காதே,ஒடனே போய் அனுப்பிட்டு வா!" என்று சொன்னார் பரமாசார்யா.

மகாபெரியவா உத்தரவுக்கு மறுப்பு ஏது? உடனே தொகையை எடுத்துண்டு வேகவேகமா போஸ்ட் ஆபீஸுக்குப்போய், குறிப்பிட்ட முகவரிக்கு தந்தி மணியார்டர்ல பணத்தை அனுப்பிட்டு வந்தார்.

நித்ய அனுஷ்டானத்தைக் கூட தள்ளிவைச்சுட்டு பரமாசார்யா அப்படி ஒரு சிந்தனையில ஆழ்ந்து இருந்தது ஏன்? பலகாலம் முன்னால கைங்கரியம் பண்ணின ஒருத்தரோட முகவரியைத் தேடி எடுக்கச் சொல்லி அந்த விலாசத்துக்கு பணம் அனுப்பச் சொன்னது ஏன்? இதெல்லாம் யாருக்கும் புரியலை!.

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்துக்கு அப்புறம் ஸ்ரீமடத்துக்கு ஒரு கடுதாசி வந்தது.

"ஸ்ரீ ஸ்ரீ மகாபெரியவா ஸ்வாமிகளுக்கு நமஸ்காரம். போனவாரம் என்னோட தகப்பனார் சிவபதம் அடைஞ்சுட்டார். அவரோட தேகத்துக்கு உரிய உத்தரகிரியைகளைப் பண்ணறதுக்கான செலவுக்கு பணம் இல்லாம ரொம்பவே அல்லாடிண்டு இருந்தேன்.

கடைசி நிமிஷம் வரைக்கும், 'எனக்கு எது நடந்தாலும் பயப்படாதே.எப்பவும் மகாபெரியவாளையே நினைச்சுண்டு இரு. எல்லாத்துக்கும் வழிகாட்ட அந்த மகான் இருக்கார்!' அப்படின்னுதான் சொல்லிண்டு இருந்தார்-என் தந்தை.

தந்தையார் தவறிப்போன துக்கத்தைவிட அவருக்கான உத்தரகிரியையைச் செய்யறதுக்கு உரிய பணம் இல்லையேங்கற துக்கம் எனக்கு அதிகரிச்சுண்டே இருந்த சமயத்துல, ஸ்ரீமடத்துலேர்ந்து பெரியவா உத்தரவுப்படி அனுப்பப்பட்டதா ஒரு தொகை தந்தி மணியார்டர்ல வந்தது.

அந்தப் பணம் இங்கே இருக்கற சாஸ்திரிகள் உத்தரகிரியைப் பண்ணறதுக்குக் கேட்ட தொகை எவ்வளவோ அதுக்கு ரொம்ப சரியா இருந்தது. மகா பெரியவாளுக்கு என்னோட சாஷ்டாங்க நமஸ்காரம்!"

அப்படின்னு எழுதி இருந்தது அந்தக் கடிதத்துல. அதைப் படிச்சதும்தான் எல்லாருக்கும் விஷயம் புரிஞ்சுது.

ஆனா, யாருக்குமே புரியாதது என்ன தெரியுமா?

மகாபெரியவா தினமும் செய்யற சந்த்ரமௌளீஸ்வர பூஜைக்கு பல வருஷங்களுக்கு முன்னால தினமும் வில்வம் பறிச்சுண்டு வந்து தர்ற கைங்கரியத்தைப்
பண்ணிண்டு இருந்தவர் அந்தத் தொண்டர் 'பில்வம் வைத்தா'ன்னே பெரியவா அவரைக் கூப்பிடுவார்.

அதுக்கப்புறம் அவர் குடும்பத்தோட கொல்கத்தாவுக்குப் போய் அங்கேயே தங்கிட்டார்.அவர் இங்கேர்ந்து போறச்சே சொல்லிவிட்டுப் போன முகவரியைத்தான் மடத்துல குறிச்சு வைச்சிருந்தா.

1) பலகாலத்துக்கு முன்னால தொண்டு செஞ்ச அந்த பக்தர் இறுதிக்காலத்தை அடைஞ்சுட்டார்னு கிட்டத்தட்ட ஆயிரம் மைலுக்கு அப்பால் இருக்கிற இடத்துலேர்ந்து இங்கே இருக்கிற மகானுக்குத் தெரிஞ்சது எப்படி?

2) அந்தத் தொண்டரோட உத்திரகிரியைக்குத் தேவையான பணம் இல்லாம அவரோட வாரிசு கஷ்டப்படறதை மகாபெரியவா எப்படித் தெரிஞ்சுண்டார்.?

3)இதையெல்லாம் விடப் பேரதிசயம், அங்கே சாஸ்திரிகள் கேட்ட தொகைக்கு கொஞ்சமும் கூடவோ, குறைச்சோ இல்லாம சரியான தொகையை அனுப்பச் சொன்னது எப்படி?

மகாபெரியவாளோட தீர்க்க தரிசனம் எல்லாம்,சாதாரண மனுஷாளுக்குப் புரியாத ரகசியம்.இதெல்லாம் நேரடியா அனுபவிச்சவா அடைஞ்சதும்,அதைப்பத்தி படிக்கவோ, கேட்கவோ நமக்கு சந்தர்ப்பங்களை அமையறதும்தான் நம்மோட மகா பாக்கியம்!

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP

HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
 
OM SRI GURUBHYO NAMAH

சாப்பாடு நேரம் வந்துவிட்டதை காந்திக்கு நினைவூட்டின ராஜாஜியும்,

‘`இதுதான் எனக்குச் சாப்பாடு. இப்படியொரு சந்தர்ப்பம் இனி கிடைக்காது’’ என்று கூறிவிட்டு, சுவாமிகளுடன் உரையாடலைத் தொடர்ந்த மகாத்மா காந்தியும்

மகா பெரியவரும் மகாத்மாவும்!-நன்றி சக்தி விகடன்.

பாலக்காட்டில் நெல்லிச்சேரி என்ற இடம். இங்கேதான் ஒரு வீட்டில் காஞ்சி முனிவரை தரிசனம் செய்தார் மகாத்மா காந்தி. இருவரும் பல விஷயங்கள் குறித்து விவாதம் செய்திருக்கிறார்கள். உடன் யாருமில்லை. ராஜாஜிகூட வீட்டுக்கு வெளியேதான் காத்திருந்தார்.

நேரம் கடந்துகொண்டிருக்க, உள்ளே வந்த ராஜாஜி சாப்பாடு நேரம் வந்துவிட்டதை காந்திக்கு நினைவூட்டினார். ஆனால் காந்திஜியோ, ‘`இதுதான் எனக்குச் சாப்பாடு. இப்படியொரு சந்தர்ப்பம் இனி கிடைக்காது’’ என்று கூறிவிட்டு, சுவாமிகளுடன் உரையாடலைத் தொடர்ந்தார்.

‘`சுவாமி! ஸ்ரத்தானந்தா என்ற சாதுவை இஸ்லாமியர் ஒருவர் சுட்டுக் கொலை செய்து விட்டார். ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்பதே தெரியவில்லை. என் கண் முன்னாலேயே இப்படியான கொடூரங்கள் நடக்கின்றன. பிற்காலத்தில் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ” என்று பெரியவாளிடம் முறையிட்ட காந்தியின் முகத்தில் கவலை ரேகைகள்.

சற்று நேரம் அமைதி காத்தார் பெரியவா. பிறகு சொன்னார்:

“யாரோ ஒருவன் துஷ்டனாக இருந்தால், எல்லோரும் அப்படித்தான் இருப்பா என்று ஏன் நினைக்கணும்? நல்லவாளும் அல்லாதவாளும் எல்லா இடங்களிலும் உண்டு”

பெரியவா சொன்னதை மெளனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் காந்தி. மகா பெரியவா தொடர்ந்தார்.

“ஒரு பேச்சுக்கு சொல்றேன்... என்னையோ, உங்களையோ ஓர் இந்துவே சுட்டு விட்டானென்றால், எல்லா இந்துக்களும் கொடியவர்கள் என்று முடிவு செய்துவிட முடியாதே...”

இந்தச் சம்பவத்தை நினைத்துப்பார்த்தால் பகீரென்கிறது. எப்போதோ இருபது வருடங் களுக்குப் பின் நடக்கப்போவதை ஞான திருஷ்டி யின் மூலம் கணித்து, சம்பந்தப்பட்டவரிடமே அதை மகா பெரியவா சூசகமாகத் தெரிவித்திருக்கிறாரே!

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP

HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
 
1570101818889.png
 
OM SRI GURUBHYO NAMAH

"அப்பாவைப் பார்க்கணும்!"

-ஹாஸ்பெட் டாக்டர் ஆனந்தவல்லி அம்மாள். (பக்தியின் அதீத நிலை)

(தன்னைப் பெற்ற தந்தையாகவே நினைத்து நள்ளிரவில் கதவைத் தட்டிய டாக்டர் ஆனந்தவல்லி)

மெய்சிலிர்க்கும் கட்டுரை-20-03-2014 பதிவு)

சொன்னவர்;சத்தியகாமன்,சென்னை-45

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

ஈசுவரனைப் பலவாறாக உறவு கொண்டாடி, பக்திசெய்து மேன்மை அடைவது அடியார்கள் கைக்கொள்ளும் நெறி. இறைவனை, நண்பனாக ,அன்னையாக, யஜமானனாக, தந்தையாகப் பாவித்துப் போற்றுவார்கள்.

ஹாஸ்பெட் டாக்டர் ஆனந்தவல்லி அம்மாள், மகாப்பெரியவாளைத் தன்னைப் பெற்ற தந்தையாகவே- இல்லை; அதற்கும் மேலே, மேலே ஓர் உயர்நிலையில் 'அப்பா'வாகவே அடையாளம் கண்டு கொண்டுப் பழகினார்.

பெரியவாள் ஹம்பியில் தங்கியிருந்த காலம், நாள் தோறும் டாக்டர் அம்மாள் வந்துவிடுவார்-தரிசனத்துக்கு ஐந்து நிமிஷமாவது பெரியவாளுடன் பேசாமல் போக மாட்டார். நம்மைப் போல், பெரியவா எதிரில், கூனிக் குறுகிக்கொண்டு, வாயைப் பொத்திக்கொண்டு பேசுகிற பக்திப் பாசாங்கு இல்லாமல் பேசுவாள்.பேச்சு மெய்ப்பாடுகள், குரல், எல்லாம் இயல்பாக இருக்கும். பெரியவாளுடன் பல ஆண்டுகள் பழகி, 'அவரை விட்டால் வேறு கதி இல்லை' என்ற முடிவுக்கு வந்துவிட்டதைப் போலிருக்கும்.

ஐந்து நிமிஷத்துக்குள், ஐம்பது 'அப்பா' வந்துவிடும். அப்பா என்ற சொல்லே டாக்டர் ஆனந்தவல்லிக்காகவே படைக்கப்பட்டதாகத் தோன்றும்

.நொடிக்கு நொடி, 'அப்பா' என்பாரே தவிர, ஒவ்வொரு சொல்லிலும் ஒரு தாயாரின் கரிசனம் தெரியும். "நீங்க தினமும் ஃப்ரூட் ஜூஸ், ரெண்டு தடவையாவது சாப்பிடணும்,அப்பா..' ஏகாதச அன்னிக்கு நாலு தடவையாவது பால் சாப்பிடணும் அப்பா, அது ஒண்ணும் தப்பில்லே, உபவாசம் கெட்டுப் போயிடாது அப்பா." இப்படி எத்தனையோ உபதேசங்கள், பெரியவாளுக்கு

ஆனால், இப்படிய்யெல்லாம் சொல்லும்போது, ஒரு தினையளவு கர்வம் தலைகாட்ட வேண்டுமே? இந்தச் சலுகை எனக்கு மட்டும் தான் என்ற தன்முனைப்பு? ஊஹூம்.

டாக்டரின்'அப்பா'வில் தனியானதொரு மணம் வீசும். பின்னணியில் கந்தர்வக் குழுவினர் ஆனந்த பைரவி பாடுவதைப் போலிருக்கும். கின்னரப் பெண்டிரின் கால் சதங்கையின் லயம் தவறாத ஒலி நெஞ்சை நிறைக்கும்.

பெரியவாளுக்குக் கைங்கரியம் செய்யும் தொண்டர்களுக்கு,அந்த அம்மையாரிடம் ஓர் இளக்காரம். டாக்டர் வந்து, ஆயிரம் அப்பாக்களால் பெரியவாளுக்கு சஹஸ்ர நாமம் செய்து விட்டுப் போனபின்னர், தொண்டர்கள் தங்கள் ஏளனங்களை வாய்விட்டுப் பேசி, திருப்தி அடைவார்கள்.

'என்னப்பா,சந்த்ரமௌளி,குளிச்சுட்டயாப்பா? கண்ணா, துணி துவச்சுட்டயாப்பா..' ]]குமரேசன் அப்பா, இன்னும் சாப்பிடலயாப்பா.." (தொண்டர்களின் ஏளனப்பேச்சு)

ஆனால் டாக்டரின் 'அப்பா' வைரக்கல்; பட்டை தீட்டப்பட்ட கோஹினூர்.

ஒருநாள் இரவு நள்ளிரவு தாண்டிவிட்ட நேரம். கட்டிடத்தின் வெளிப்புறக் கதவு தட்டப்படும் ஓசை. தொண்டர்களுக்கு அலுப்பு, ஆயாசம், களைப்பு, அடியார்கள் சிலரும் அங்கே தங்கியிருந்தார்கள்.

வேறு வழியில்லாமல் ஒரு தொண்டர் தட்டுத் தடுமாறி நடந்து வாசற் கதவைத் திறந்தார்.

திகைத்தார், வேரோடிப் போனார், யா...யார்? டாக்டர் ஆனந்தவல்லி அம்மையார்...!

"அப்பாவைப் பார்க்கணும்..."

கெஞ்சல் இல்லை; அதட்டல் இல்லை; ஆவேசம் இல்லை. இயல்பான குரல்.

தொண்டருக்கு வந்ததே, கோபம்.

"உங்களுக்கு என்ன பைத்தியமா,டாக்டர்?.. இந்த ரத்திரி வேளையிலே பெரியவாளை எப்படிப் பார்க்கிறது?.."

"அப்பாவைப் பார்க்கணும்"

"என்னடா அங்கே தகராறு?" என்று உட்புறத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.

"அப்பாவைப் பார்க்கணுமாம்.."

"யாரு? டாக்டரா?"

இந்தத் தொண்டர் எழுந்து சென்று வழி மறிப்பதற்குள் அம்மையார்,இருவரையும் மீறிக்கொண்டு உள்ளே வந்து விட்டார்.

"அப்பாவைப் பார்க்கணும்" என்றார்,சாந்தமாக.

"நீங்க..மண்ணாங்கட்டி மரியாதை என்ன? நீ நிஜமான டாக்டரா? போலி டாக்டரா?.. ராத்திரியில் பெண்கள் மடத்துக்கு வரக்கூடாது

."அப்பாவைப் பார்க்கணும்" என்றார்,உறுதியாக.

"இவ சொன்னா போகமாட்டா...அடிச்சுத்தான் அனுப்பணும்.

ஐந்தாறு ஆவேசக்குரல்களை மீறி, உள்ளே ஒரு கதவு திறக்கப்படும் மெல்லிய ஒலி.

திரும்பிப் பார்த்தார்கள், பெரியவாள்! தான் படுத்திருந்த அறைக்கு வெளியே வந்து நின்று கொண்டிருந்தார்கள்.

தடாலென்று விழுந்து வந்தனம் செய்தார், அம்மையார். "அப்பா..அப்பா...அப்பா."

அமுதத்தில் தோய்ந்தெடுத்த அப்பாக்கள்!

தரிசனம் ஆகிவிட்டது போகவேண்டியது தானே? போகவேண்டியது தான். ஆனால் சைகைகாட்டிப் பெரியவாள் அழைக்கிறார்களே?

அடடா... அரைமணி நேரம் வெகுசங்கடமான நேரம். முன்னரோ,பின்னரோ நிகழ்ந்ததேயில்லை.

"பக்கத்து கிராமத்திலே ஒரு கேஸ், அப்பா, ரொம்ப க்ரிடிகல். தேவையான மெடிஸின்ஸ் கைவசம் இல்லே..சின்ன வயசுப் பொண்ணு.. ரொம்பப் போராடினேன். என்னாலே முடியல்ல.. அப்பா,அப்பான்னு நூற்றெட்டு தடவை சொன்னேன்... உயிர் வந்துடுத்து..! பகல்லே அப்பாவைப் பார்க்கமுடியல்லே. கிராமத்திலேர்ந்து வந்தவுடனே இங்கே வந்துட்டேன்.."

ஐந்து நிமிஷம் ஓர் அரவம் இல்லை.

பெரியவா மெல்லிய குரலில் கேட்டார்கள்.

"ராத்திரி வேளையிலே ஸ்திரிகள் மடத்துக்கு வரக்கூடாது..நான் தற்செயலா முழிச்சிண்டு வெளியே வந்தேன். இப்போ என்னைப் பார்க்க முடியல்லேன்னா என்ன பண்ணியிருப்பே?"

அம்மையார் விக்கித்துப் போய்விட்ட மாதிரி தெரிந்தது.

"என்னப்பா, இது? இவர்கள் மாதிரி, நீங்களும் கேட்கிறேள்? அப்பாவைப் பார்க்கணும் என்கிற எண்ணம் இருந்ததே தவிர அது முடியாமற் போகலாம் என்று எனக்குத் தோன்றவே யில்லையப்பா !அது எப்படி முடியாமற்போகும்? என் அப்பாவைப் பார்க்கணும்..அவ்வளவு தான். ராத்திரியோ,பகலோ எனக்கு என்ன அப்பா?"

பெரியவாளின் சிரம், நாற்புறமும் சுற்றிவிட்டு, ஓர் இடத்தில் நிலைகொண்டது. அங்கேயிருந்த ஒரு முழம் மல்லிகைச் சரத்தையும் ,மாம்பழத்தையும் தட்டில் வைத்து, பெரியவாள் ஆசியுடன் அம்மையாரிடம் கொடுத்தார்,தொண்டர்.

வந்தனம் செய்துவிட்டு,"அஞ்சு மணிக்கு விசுவரூப தரிசனத்துக்கு வந்துடறேன்"ப்பா என்று சொல்லிவிட்டு ஓர் அரசகுமாரியின் வீறாப்புடன் வாசல் நோக்கி நடந்து சென்றார்,டாக்டர்.

நடந்ததெல்லாம் கனவா,நனவா என்றே புரியவில்லை. தொண்டர்களுக்கு.

விடியற்காலம், விசுவரூப தரிசனத்துக்கு ஆஜரானார் டாக்டர்.

ஆனால், தொண்டர்கள் கண்களுக்கு ஒரு தேவதையாகக் காட்சி தந்தார்

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP

HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
 
OM SRI GURUBHYO NAMAH

ஸந்த்யா வந்தனத்தின் மஹிமை

ஜகத்குரு மகா பெரியவாள் உபதேசித்தது:

ஒருகதை இருக்கிறது. இக்கதை சுமார் 500, 600 வருஷங்களுக்கு முன் நடந்ததாக ஊகிக்க முடிகிறது. சென்னையை சேர்ந்த ஆர்க்கியலாஜிகல் துறை பிரசுரித்திருக்கும் பதிவுகள்..

இந்தக்கதைக்கு ஆதாரங்கள் இருக்கின்றன.

திருவனந்தபுரத்தை ஆண்ட ராஜாக்களில் ஒருவர், எள்ளினால் ஒரு காலபுருஷன் உருவத்தைச் செய்து, அதனுள் ஏராளமான ஐசுவர்யத்தை வைத்து, தானம்செய்யப் போவதாக விளம்பரம் செய்தார்.

அந்த உருவத்திற்குள் இருக்கும் பொருளைக் கருதி, அனேகம் பேர் தானம் வாங்குவதற்காக வந்தார்கள். அந்தக் காலபுருஷன் உருவம் கேட்ட கேள்விகளுக்குத் தக்க பதில் சொல்ல முடியாமல், தானம் வாங்க வந்தவர்களெல்லாம் மரணமுற்றார்கள்.

கன்னடியர் என்ற ஒரு பிராம்மணர் இருந்தார். ஸந்த்யாவந்தன கர்மாவில் வெகு ச்ரத்தை உள்ளவர். சாஸ்திரங்கள் முதலானவற்றில் அவருக்கு அப்யாஸம் கிடையாது. அந்தத் தானத்தை வாங்க அவர் வந்தார்.

அப்போது அந்த காலபுருஷனின் உருவம் மூன்று விரல்களைக் காட்டியது. முடியாது என்றார். பிறகு இரண்டு விரல்களைக் காட்டியது. அதற்கும் முடியாது என்றார். கடைசியாக ஒரு விரலைக் காட்டியது, சரி என்றார்.

தான் ஒன்றும் செய்ய முடியாததைக் கண்டு, கால புருஷன் அந்த உருவத்தினின்றும் மறைந்தான். அந்தத் தானத்தில் அடங்கிய சகல ஐசுவர்யங்களையும் அந்தப் பிராமணர் வாங்கிக்கொண்டார்.

மூன்றுவிரல்கள், மூன்று வேளைகளில் செய்யப்படும் ஸந்த்யா வந்தனத்தின் பலன். இரண்டு விரல்கள், காலை மாலை இரு வேளைகளின் ஸந்த்யாவந்தன பலன். ஒருவிரல், ஒருவேளை, அதாவது மாத்யாந்நிகத்தின் பலன் என்பது காலபுருஷன் உருவம் கேட்ட கேள்விகளின் அர்த்தம்.

ஸந்த்யா வந்தனத்தின் ஒருவேளையின் பலனைக் கொடுத்ததன் மூலமும், ஐசுவர்யத்தைத் தானம் வாங்கியதன் மூலமும் பிராம்மணருக்குப் பாபம் சம்பவித்துவிட்டது.

அந்தப் பாபத்தைப் போக்கிக் கொள்ள வேண்டிய வழியைத் தெரிந்துகொள்ள அகத்திய முனிவர் தவம் செய்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படும் மலைச்சாரலுக்குச் சென்றார். போகும் முன், தம்மிடமிருந்த தனத்தைப் பாதுகாக்கும்படி, கோவில் பூஜை செய்து வந்த ஒரு குருக்களிடம் ஒப்படைத்தார். எங்கே சென்றாலும் அகத்திய முனிவர் காணப்படவில்லை.

முனிவரைக் காணாமையால், அவர் ஏக்கமுற்றிருக்கும் சமயத்தில், அகத்திய முனிவர் ஓர் கிழ வடிவத்துடன் பிராம்மணர் முன் தோன்றினார். அவரிடத்தில், பிராமணர் இக்கதையைச் சொன்னார். அந்தக் கிழவர், நீ போகின்ற வழியில் ஒரு பசுமாடு உமக்குத் தென்படும்.

அந்த இடத்திலிருந்து நீ ஒரு கால்வாய் வெட்ட ஆரம்பிக்க வேண்டும். பசுமாடு எவ்வளவு தூரம் சென்று நிற்கின்றதோ அவ்வளவு தூரத்திற்குக் கால்வாய் வெட்ட வேண்டும்.

நடுவில் பசுமாடு எந்த இடங்களில் சாணி போட்டுமூத்திரம் பெய்கிறதோ அந்த அந்த இடங்களில், சாணிபோட்ட இடத்தில் மடை அமைக்கவும், மூத்திரம் பெய்யும் இடத்தில் வாய்க்கால் வெட்ட வேண்டும் .இவ்விதம் செய்தால் உமக்கு ஏற்பட்டிருக்கும் பாபம் போய்விடும் என்று கிழவர் சொன்னார்.

கன்னடியர் அவ்விதமே செய்யத் தீர்மானித்துக் கொண்டு, திரவியத்தைத் திரும்ப வாங்குவதற்காக குருக்களிடம் சென்றார்.

குருக்களுக்குப் பிராமணர் கொடுத்த தனத்தின் மீது மோகம் ஏற்பட்டுவிட்டது. அந்தக் காலத்து பவுன் இளம் துவரம் பருப்பை ஒத்திருக்குமாதலால், குருக்கள் பிராமணரிடம் துவரம் பருப்புகளைக் கொடுத்து, “நீர் கொடுத்த திரவியம் இதுதான், எடுத்துக் கொள்ளும்” என்றார்.

குருக்களின் வஞ்சகச் செயலை அறிந்துகொண்ட பிராமணர், “நான் கொடுத்தது இதுவல்ல, நான் கொடுத்ததைக் கொடுங்கள்” என்றுமிகவும் பிரார்த்தித்துக் கேட்டுக்கொண்டார்.

எந்தப்பயனும் ஏற்படவில்லை. ஆகவே, ராஜாவிடம் சென்று முறையிட்டுக் கொண்டார். குருக்களும் தருவிக்கப்பட்டார்.

ஆனால் குருக்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. ஆகவே குருக்கள் பூஜைசெய்யும் லிங்கத்தைக் கட்டிக்கொண்டு பிரமாணம் செய்தால் நான் ஒப்புக் கொள்கிறேன் என்று பிராமணர் கூறினார்.

அவ்விதம் செய்வதாகக் குருக்களும் சம்மதித்துவிட்டார். குருக்கள் ஆபிசாரப் பிரயோகத்தில் தேர்ந்தவரானதால், லிங்கத்திலுள்ள ஸ்வாமியைப் பக்கத்திலுள்ள ஒருமரத்தில் ஆகர்ஷனம் செய்துவிட்டார்.

இதை ஸ்வாமி, பிராமணரின் சொப்பனத்தில் தோன்றி, நடந்ததைச் சொல்லிவிட்டார். பிராமணர் மறுபடியும் ராஜாவிடம் சென்று “குருக்கள் மரத்தைக் கட்டிக்கொண்டு பிராமணர் செய்யும்படிச் செய்ய வேணுமாகக் கேட்டுக்கொண்டார்”. குருக்கள் மறுப்பளித்தார்.

ராஜா விடவில்லை. மரத்தைக் கட்டிக்கொண்டு பிரமாணம் செய்யுமாறு ஆணையிட்டார் ராஜா. குருக்கள் மரத்தைக் கட்டிக்கொண்டு பிரமாணம் செய்தார். உடல் எரிந்து போய்விட்டது.

எரிச்சுக்கட்டி ஸ்வாமி என்பது அந்த ஆலயமூர்த்தியின் பெயர். திருநெல்வேலி ஜில்லாவில் அந்த ஆலயம் இருக்கிறது. பிறகு, பிராமணர் தம் தனத்தை எடுத்துக்கொண்டு கிழவர் சொல்லியபடி பசுமாட்டைக் கண்டு கால்வாய் வெட்டினார்.

"கன்னடியன் கால்வாய்" என்பது அதன் பெயர். திருநெல்வேலி ஜில்லாவில் இருக்கின்றது. அந்தக் கால்வாயின் பிரதேசங்கள் இன்றைக்கும் செழித்திருக்கின்றன. இந்தக் கதையினால் ஸந்த்யாவந்தனத்தின் பெருமை நன்கு விளங்குகிறது.
எனவே ஸந்த்யா வந்தனம் ஒரு கடமை. அதுசெய்வதால் உலக க்ஷேமம் ஏற்படுகின்றது. ச்ரத்தையுடன் செய்தால் மோக்ஷம் லபிக்கின்றது என்பதைத் தெரிந்துகொண்டு, நமது கடமைகளில் ஒன்றாகச் செய்து வரவேண்டும் என்று உங்கள் எல்லோரிடமும் தெரிவிக்கின்றோம்.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP

HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
 
OM SRI GURUBHYO NAMAH

வெற்றிலை வைத்யமா? அனுகிரஹ வைத்யமா?"

(வெற்றிலைக்கு தலைசுத்தலை நிறுத்தக்கூடிய சக்தி உண்டான்னு யாருக்கும் தெரியலே. ஆனா,வெறும் வெற்றிலையால மட்டும் இந்த அதிசயம் நடக்கலை.அதுக்கு மகாபெரியவாளோட அனுகிரஹமும் சேர்ந்திருக்கறதுதான் காரணம்னு எல்லாருக்குமே தெரிஞ்சுது)..

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-குமுதம் பக்தி(ஓரு பகுதி)

மதுரையில் மகாபெரியவா முகாமிட்டிருந்த காலகட்டம் அது. பள்ளிக்கூடம் ஒண்ணுலதான் பெரியவா தங்க ஏற்பாடாகியிருந்தது. அப்போ இளைய பெரியவாளான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் கூட இருந்ததாக ஞாபகம்.அந்த சமயத்துல வழக்கம்போல ஏராளமான பக்தர்கள் கனிவர்க்கம், புஷ்பம்,கல்கண்டு இப்படி விதவிதமான காணிக்கைகளை எடுத்துண்டு வந்து பெரியவாகிட்டே சமர்ப்பிச்சு ஆசிர்வாதம் வாங்கிண்டிருந்தா.

அந்த சமயத்துல யாரோ ஒரு பக்தர் எடுத்துண்டு வந்த காணிக்கையில இருந்த வெத்தலைகள் எப்படியோ பறந்து கீழே விழுந்து கிடந்தது. அதுக்கப்புறம் சில பக்தர்கள் ஆசி வாங்கிக்க வந்தாலும் யாரும் அந்த வெத்தலைகளை எடுக்கலை.அதே சமயம் அது மங்களகரமான பொருள் என்பதால் அதை மிதிக்காம கொஞ்சம் நகர்ந்து வந்துண்டு இருந்தா.

இதையெல்லாம் கொஞ்ச நேரம் பார்த்துண்டு இருந்த மகாபெரியவா, தன் பக்கத்துல இருந்த அணுக்கத் தொண்டர் ஒருத்தரைக் கூப்பிட்டார்

."அதோ அங்கே கொஞ்சம் வெத்தலை கிடக்கு பார். அதை எடுத்துண்டுபோய் அலம்பிக் கொண்டு வந்து பத்தரமா வை!" அப்படின்னு உத்தரவிட்டார்.

சன்யாச தர்மப்படி தாம்பூலம் தரிக்கறது கூடாது. அப்படி இருக்கறச்சே, மகாபெரியவா எதுக்காக வெத்தலையை எடுத்துவைக்கச் சொல்றார்னு பலருக்கும் குழப்பம்.

கொஞ்ச நேரம் ஆச்சு. ஆசார்யாளை தரிசிக்க வந்த கூட்டத்துல கர்ப்பிணி ஒருத்தியும் இருந்தா. வரிசையா வந்த கூட்டம் நகர்ந்து, நகர்ந்து அந்த கர்ப்பிணி மகாபெரியவாளை தரிசனம் பண்ணறதுக்கான முறை வந்த சமயத்துல திடீர்னு அவளுக்கு தலைசுத்தல் வந்துடுத்து.

நிற்கவே தடுமாற ஆரம்பிச்ச அவளை, கூடவந்தவா மெதுவா தாங்கிப் பிடிச்சுண்டா. அந்த நிலையில மகாபெரியவாளையும் முழுமையா தரிசனம் செய்ய முடியாத நிலை அவாளுக்கு ஏற்பட்டுது.

என்ன செய்யறதுன்னு புரியாம அவா எல்லாரும் திகைச்சு நின்ன சமயத்துல மகாபெரியவா, தன்னோட அணுக்க் தொண்டரை மறுபடியும் கூப்பிட்டார்.

"அந்த அலம்பி வைச்ச வெத்தலைகளை எடுத்து அவாகிட்டே குடு. அதை அந்த கர்ப்பஸ்த்ரீக்கு தரச்சொல்லு!" உத்தரவிட்டார் மகாபெரியவா.

வெற்றிலைகளை வாங்கி மெதுவா மென்னு தின்ன ஆரம்பிச்ச அந்தக் கர்ப்பிணி பெண்ணுக்கு தலைசுத்தல் சட்டுன்னு நின்னுது. எப்படி இந்த அதிசயம் நடந்தது!. வெற்றிலைக்கு தலைசுத்தலை நிறுத்தக்கூடிய சக்தி உண்டான்னு யாருக்கும் தெரியலே. ஆனா,வெறும் வெற்றிலையால மட்டும் இந்த அதிசயம் நடக்கலை.அதுக்கு மகாபெரியவாளோட அனுகிரஹமும் சேர்ந்திருக்கறதுதான் காரணம்னு எல்லாருக்குமே தெரிஞ்சுது.

அதுக்கப்புறம் சந்தோஷமா மனம் நிறைஞ்ச பக்தியோட, மகாபெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணினா அந்த கர்ப்பிணி ஆசிர்வாதமா ஒரு மாதுளம்பழமும்,குங்குமப் பிரசாதமும் குடுத்தார் மகாபெரியவா

.சாதரண வெற்றிலையா இருந்தாலும்கூட அது சமயத்துல சஞ்சீவியா உபயோகப்படும் கறதையும் , எந்தப் பொருளையும் வீணாக்கக் கூடாதுங்கற உணர்த்தற மாதிரி மகாபெரியவா நடத்தின இந்த அனுபவப் பாடத்தை புரிஞ்சுண்டதுக்கு அடையாளமா ஜெயஜெய சங்கர ஹர ஹர சங்கர'ன்னு கோஷமெழுப்பினா அங்கே இருந்த எல்லாரும்.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP

HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
 
OM SRI GURUBHYO NAMAH

"பேத்திக்கு வேணுமாம் தாழம்பூ "-தேடிய மூதாட்டி.

( ‘நீ அழவேண்டாம்மா. காஞ்சிபுரத்துல இருக்கிற பெருந்தேவித் தாயாரே உனக்காக என் கிட்ட தாழம்பூவை அனுப்பி இருக்கா. அதைத் தர்றேன். கொண்டு போய் உன் பேத்தி கிட்டே கொடு. சந்தோஷப்படுவா’-பெரியவா)

(ஒரு நவராத்திரி வெள்ளிக்கிழமை அன்று நடந்த சம்பவம்)

கட்டுரை ஆசிரியர் – திரு. பிச்சை ஐயர் சுவாமிநாதன் அவர்கள் தட்டச்சு: ஹாலாஸ்ய சுந்தரம் ஐயர்

அது ஒரு நவராத்திரி வெள்ளிக்கிழமை காஞ்சி சங்கரமடமே கோலாகலமாக இருந்தது. வாழைமரங்களும் தோரணங்களும் வந்தோரை வரவேற்றன. சின்ன காஞ்சிபுரத்தில் பெருந்தேவித் தாயாரிடம் இருந்தும், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் இருந்தும் பலவிதமான புஷ்ப மாலைகள் அருட்பிரசாதமாக மடத்தை வந்து அடைந்தன. இதைத் தவிர மடத்தில் நடக்க இருக்கும் சந்திரமௌலீஸ்வரர் பூஜைக்கும் பல கூடைகளில் புஷ்பங்கள் வந்து சேர்ந்தன.

புனிதமான நவராத்திரி காலத்தில் மகா ஸ்வாமிகளைத் தரிசித்து அவரது ஆசி பெற வேண்டும் என்பதற்காக சென்னையில் இருந்தும், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் குடும்பம் குடும்பமாகப் பெண்கள் வந்தார்க்ள். எல்லோரும் ஒரு வரிசையில் நின்று, மெள்ள முன்னேறி பெரியவாளின் தரிசனம் பெற்று நகர்ந்து கொண்டிருந்தனர்.

அன்றைய தினம் மடத்துக்கு வரும் சுமங்கலிகள் அனைவருக்கும் குங்குமத்தோடு புஷ்பமும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இதற்காக பெரியவாளுக்குப் பக்கத்தில் ஏராளமான மூங்கில் தட்டுகளில் தொடுத்த புஷ்பங்கள் சின்னச் சின்ன கிள்ளலாக வைக்கப்பட்டிருந்தன. இவை எல்லாம் காஞ்சியில் உள்ள ஆலயங்களில் இறைத் திருவுருவங்களுக்கு சார்த்தியவை.

அப்போது பெரியவாளின் ஆசியைப் பெறுவதற்காக ஒரு குடும்பம் அவருக்கு முன்னால் நின்று கொண்டிருந்தது. ஆண், பெண் குழந்தைகள் என்று பெரிய குடும்பம் அது. இவர்களைப் பார்த்ததும் பெரியவா மூங்கில் தட்டுக்குள் கைவிட்டு ஒரு பூவைக் கையில் எடுத்தார். என்ன ஆச்சரியம். அவர் கையில் வந்தது ஒரு தாழம்பூ. பெரியவா அதைக் கையில் எடுத்த அடுத்த கணமே அங்கு அந்தப் பூவின் மணம் பலமாக வீச ஆரம்பித்து விட்டது.

பெரியவா தாழம்பூவைக் கையில் எடுத்ததைப் பார்த்த அந்தக் குடும்பத்தினர் சற்றே கலவரப்பட்டு மெள்ளப் பின்னோக்கி நகர்ந்தனர். அந்தக் குடும்பத்தினருக்கு ஏதோ ஒரு தோஷம் காரணமாகத் தாழம்பூ என்றாலே ஆகாது. ஒருவேளை தன் கையில் எடுத்த தாழம்பூ பிரசாதத்தைத் தங்கள் கையில் கொடுத்துவிட்டால் என்ன செய்வது என்கிற தயக்கத்தின் காரணமாகக் கண் கலங்கி பின்னுக்கு வந்தனர். பெரியவா கொடுத்து அதை வாங்க மறுத்தால் அது பெரிய அபசாரம் ஆகிவிடும் என்று குடும்பத்தினர் கலங்கினர்.

அப்போது ‘நாகசாமீ..’ என்று பெரியவா குரல் கொடுக்க அந்தக் குடும்பத்தில் இருந்து ஒரு ஆண்மகன் முன்னுக்கு வந்தார்.

‘பெரியவாளுக்கு என் பெயர் எப்படித்தெரியும்? என்று குழம்பிய அவர், ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு முன்னுக்கு வந்து, ‘சாமீ..நான் தான் நாகசாமீ’ என்றான் மரியாதையுடன்.

பெரியவா இடி இடியெனச் சிரித்து விட்டு ‘நாகசாமி.. உங்கள் குடும்பத்தினரிடம் கொடுப்பதற்காக என் கையில் நான் தாழம்பூவை எடுக்கவில்லை. இன்னும் அரை மணி நேரத்தில் இங்கு பதற்றத்துடன் ஓடிவரப்போகும் ஒரு மூதாட்டிக்காக இதை எடுத்து வைத்திருக்கிறேன். உங்கள் குடும்பத்தினர் யாரும் பயப்படவேண்டாம் என்று சொல்லிவிடு நாகசாமீ’ என்றார்.

அப்போது தான் அந்த நாகசாமியின் குடும்பத்தினருக்கு மூச்சே வந்தது என்று சொல்லலாம். தாழம்பூ அவர்களிடம் இருந்து தப்பிவிட்டது.

இன்னும் அரை மணி நேரத்தில் தாழம்பூ கேட்டு மூதாட்டி ஏன் இங்கு ஓடி வர வேண்டும்? காஞ்சிபுரம் கடைத்தெருக்களிலும் பூக்கடைகளிலும் கிடைக்காத தாழம்பூவா? பலரும் குழம்பினர். நிமிடங்கள் ஓட ஓட வெளியேயும் தங்கள் பார்வையை ஓட்டிக் கொண்டிருந்தனர்.

தாழம்பூவைத் தேடி எந்த மூதாட்டி சங்கர மடத்துக்கு இந்த வேளையில் ஓடி வரப் போகிறார் என்று மகா பெரியவாளின் முன்னால் அமர்ந்திருந்த பக்தர்கள் அனைவரும் ஆர்வமாக இருந்தனர். அவ்வப்போது வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டும் இருந்தனர். ஆனால் எவரும் வருவதாகக் காணோம்.

இதனிடையே நாகசாமியின் குடும்பத்தினரைத் தன் அருகே வருமாறு அழைத்த பெரியவா, அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ரோஜாப்பூ மற்றும் மல்லிகைப்பூ, குங்குமம் என்று மடத்துப் பிரசாதங்களைக் கொடுத்தார். அனைவரும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பலாம் என்று பெரியவாளிடம் உத்தரவு கேட்கும் போது கூடி இருந்த பக்தர்கள் இடையே ஒரு திடீர் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

அனைவரும் என்ன என்பது போல வாசல் பக்கம் பார்வையை நகர்த்தினர். அப்போது ஒரு மூதாட்டி வியர்க்க விறுவிறுக்க மடத்தினுள் நுழைந்து கொண்டிருந்தார். மூதாட்டியின் முகத்திலும் உடலிலும் ஒரு பரபரப்பு. ‘வழிய விடுங்க. வழிய விடுங்க. நான் பெரியவரைத் தரிசனம் பண்ணிவிட்டு உடனே ஊருக்குத் திரும்பியாகணும். கடைசி பஸ்ஸு புறப்படற நேரம் நெருங்கிடுச்சு’ என்று வாய் விட்டுத் தனக்குள் சொல்லிய வண்ணம், சில பக்தர்களை வலுக்கட்டாயமாகத் தள்ளிக் கொண்டு மகா பெரியவாளை நோக்கி முன்னேறினார். மூதாட்டியின் வயதுக்கு ஒரு மதிப்பு கொடுத்து கிட்டத்தட்ட அனைவருமே அவருக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தனர்.

இதோ பெரியவாளின் அருகே நெருங்கியும் விட்டார். இந்த மூதாட்டியைப் பார்த்ததும் பெரியவாளின் முகத்தில் ஒரு புன்னகை. தன் அருகே இருந்த தாழம்பூவை ஒரு முறை பார்த்துக் கொண்டார். யாருக்கு எந்த நேரத்தில் எது தேவை என்பது மகான்களுக்கு மட்டும் தானே தெரியும். அன்றைய தினம் மூதாட்டிக்குத் தாழம்பூ தேவை என்பது அந்தப் பரப்பிரம்மத்துக்குத்தானே தெரியும்.

‘தூசி மாமண்டூரில் இருந்து தானே வர்றே? பதட்டப்படாத. ஊருக்குப் போற கடைசி பஸ் பொறப்படறதுக்கு இன்னும் டைம் இருக்கு. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கோ’ என்று அந்த மூதாட்டியைப் பார்த்து பெரியவா சொன்னபோது அங்கே வேறு எந்த சத்தமும் எழவில்லை. பெரியவாளையும் மூதாட்டியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள் பக்தர்கள். “தாழம்பூ கேட்டு ஒரு மூதாட்டி வருவார் என்று சொன்னாரே, அது இந்த மூதாட்டி தானா? மூதாட்டியின் பரபரப்பையும், பெரியவாளின் முகத்தில் தெரியும் புன்னகையையும் வைத்துப் பார்த்தால், இவராகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறதே’ என்று ஆளாளுக்கு மிகச் சன்னமாகத் தங்களுக்குள் குசுகுசுத்துக் கொண்டிருந்தார்கள்.

பெரியவாளுக்கு முன்னால் நின்றிருந்த மூதாட்டி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். அவரது முகத்தில் இருந்த வியர்வைத்துளிகள் இப்போது ஓரளவுக்கு மறைந்திருந்தது. மூதாட்டியைப் பார்த்துப் பெரியவா கேட்டார்: ‘என்னது உம் பேத்திக்காக நீ தேடின தாழம்பூ காஞ்சிபுரத்துல கிடைக்கலையா?

‘ஆமா சாமீ.. எம் பேத்திக்குத் தலைல தாழம்பூ வெச்சு பின்னிக்கணும்னு திடீர்னு ஆசை வந்திடுச்சு. மழலைச் சொல் மாறாம அதை என்கிட்டே கேட்டுச்சு. ‘காஞ்சிபுரம் போறேன். வர்றப்ப வாங்கியாறேன்’னு சொல்லிட்டு வந்தேன். அங்கே இங்கேன்னு பல இடங்கள்ல அலைஞ்சேன். இன்னிக்குப் பார்த்து எந்த கடையிலும் தாழம்பூ இல்லை. ரொம்ப ஏமாத்தமா இருந்தது. சரி, இவ்ளோ தூரம் வந்தாச்சு. உங்களைப் பார்த்து விழுந்து கும்பிட்டுப் போகலாம்னு மடத்துக்கு வந்தேன் சாமீ’ என்று ஒரே மூச்சில் சொன்னவர், கடைசியில் குரலில் சுரத்து இறங்கிப் போய், ‘எம் பேத்தி கிட்டே வர்றப்ப தாழம்பூவோட வர்றேன்னு சொல்லிட்டுக் கிளம்பினேன். இன்னிக்குன்னு பார்த்து அவ தூங்காம தாழம்பூக்காக வீட்டு வாசல்ல கடைசி பஸ்ஸு வருகிற வரைக்கும் எனக்காகக் காத்திட்டிருப்பா. நான் வீட்டுகுள்ளே நுழைஞ்சவுடனே ‘எங்கே பாட்டி தாழம்பூ?னு அவ கேட்டா அவளுக்கு என்ன பதில் சொல்லப் போறேனோ? என்று குரல் இளகி மருகினார். அழவும் செய்தார்.

மடத்தில் கூடி இருந்த மொத்த பக்தர்கள் அனைவரும் நடந்த சம்பாஷணைகளைக் கவனித்து ஆடித்தான் போயிருந்தார்கள். எங்கோ ஒரு கிராமத்தில் இருக்கும் பெண்மணிக்கு இன்றைக்குத் தாழம்பூ தேவை என்பதை பெரியவா எப்படிக் கணித்தார்? அதுவும் இல்லாமல் தாழம்பூவைத் தேடி அந்த மூதாட்டி இங்கே வருவார் என்று எப்படி ஆரூடம் சொன்னார் என்று பிரமித்து பரப்பிரம்மம் இருக்கும் திசை நோக்கி விழிகள் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பரிதாபத்துடன் அந்த மூதாட்டியைப் பார்த்து கருணை தெய்வம் ‘நீ அழவேண்டாம்மா. காஞ்சிபுரத்துல இருக்கிற பெருந்தேவித் தாயாரே உனக்காக என் கிட்ட தாழம்பூவை அனுப்பி இருக்கா. அதைத் தர்றேன். கொண்டு போய் உன் பேத்தி கிட்டே கொடு. சந்தோஷப்படுவா’ என்று சொல்லி, தன் அருகே இருந்த காஞ்சிபுரம் தாயாரின் பிரசாதமான மணக்கும் தாழம்பூவை எடுத்து மூதாட்டியிடம் கொடுத்தார் பெரியவா. கூடவே ஒரு ஆப்பிளையும் எடுத்து அவள் கையில் கொடுத்து ‘பேத்தி கிட்ட கொடு’ என்றார்.

மூதாட்டியின் கண்களில் இருந்து பொலபொலவென்று நீர் கொட்டியது. உடல் பதறியது. ‘சாமீ…இந்தத் தாழம்பூவை என் கிட்டே கொடுக்கிறதுக்குத்தானே என்னை இன்னிக்கு மடத்துக்கு வரவழைச்சே.. தாயாரோட பிரசாதமான இந்தத் தாழம்பூவை என் கிட்ட தர்றதுக்காகத்தானா ஊர்லயே தாழம்பூகிடைக்காம பண்ணிட்டே..’ என்றெல்லாம் அரற்றி, பரப்பிரம்மத்தின் கீழே விழுந்து நமஸ்கரித்தார்.

கைவசம் வைத்திருந்த ஒரு பைக்குள் அந்தத் தாழம்பூவை பத்திரப்படுத்திக் கொண்டு மூதாட்டி புறப்பட இருந்த போது ‘மெள்ளப் போ. கடேசி பஸ் பொறப்படறதுக்கு இன்னும் நாழி இருக்கு’ என்று பக்குவமாகச் சொல்லி அனுப்பினார் மகா பெரியவா. வாசல் வரை அந்த மூதாட்டியை வழியனுப்ப சில ஊழியர்களையும் பணித்தார்.

அதன் பின், அந்த மூதாட்டி தன் ஊரான தூசி மாமண்டூருக்குச் சென்றார். அன்று இரவே பேத்தியின் கையில் தாழம்பூவைக் கொடுத்து பெரியவா கொடுத்த பிரசாதமான ஆப்பிளையும் தந்த போது, பேத்தியின் முகத்தில் தெரிந்த பரவசத்தைக் கண்டு பூரித்து தான் போனாள் மூதாட்டி

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP

HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
 
OM SRI GURUBHYO NAMAH

"டாக்டர் வாக்கிங் என்றார். பெரியவா பிரதட்சிணம் என்று சொன்னார்...!"

(பெரியவாளின் வேடிக்கை வைத்தியம்)

"நாங்க இரண்டு பேரும் சொன்ன மருந்து அத்வைதம்; பேரு மட்டும் த்வைதம்-என்கிறே?"-பெரியவா தொண்டரிடம்.(இப்படி 'இலேசாக'ப் பேசுவது பெரியவாளுக்கு ரொம்ப பிடிக்கும்.)

சொன்னவர்; ஓர் அணுக்கத் தொண்டர்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

எடை அதிகமாகக் கூடிவிட்ட ஒரு பெண்மணி பெரியவாள் தரிசனத்துக்கு வந்தாள்.

குனிந்து வந்தனம் செய்ய முடியவில்லை. வெட்கமும் பக்தியும் போட்டியிட கைகளைக் கூப்பிக்கொண்டு நின்றாள்.

"எனக்கு சர்க்கரை வியாதி. வெயிட் குறைக்கணும் என்கிறார் டாக்டர். தினமும் ஒரு மணி நேரம் வாக்கிங் போகச் சொல்கிறார் .என்னால் பத்துநிமிடம் கூட நடக்க முடியல்லே..." என்று முறையிட்டாள்.

கஷ்டமில்லாத ஒரு பரிகாரத்தை சொல்லி, பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்-என்ற ஆதங்கம் தொனித்தது.

"டாக்டர்கள் என்றாலே இப்படித்தான்! மெடிகல் புஸ்தகத்தில் என்ன எழுதியிருக்கோ ,அதை ஒப்பிப்பார்களே தவிர, நடைமுறை சாத்தியமா என்று பார்க்கமாட்டார்கள்....."-பெரியவா

பெண்மணிக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது.

"ஆகா! என்ன அதிருஷ்டம்! பெரியவா இப்போ ரொம்ப சுலபமான வழியைச் சொல்லப் போகிறார்கள்.

கண்களில் ஆவல் பொங்கிற்று.

"உடம்பு நோய் இல்லாமல் இருக்கணும்- தெய்வக்ருபை வேணும்...."

பெண்மணியின் நெஞ்சு படபடத்தது.

"உன் வீட்டிக்குப் பக்கத்தில் ஏதாவது கோயில் இருக்கோ...?"

"இருக்கு..பெரிய சிவன் கோயில்..."

"நல்லதாப் போச்சு....தினம் காலையும் மாலையும் ஆறு பிரதட்சிணம் பண்ணு..தினம் நூறு அடி தூரம் துடைப்பத்தால் பெருக்கிக் கூட்டி சுத்தம் செய்.."

பெண்மணி,சரி என்று சந்தோஷத்துடன் கூறி பிரசாதம் பெற்றுச் சென்றாள்.

பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த சிஷ்யர், சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தார்.

".....தப்பா சொல்லிட்டேனோ....!"

"இல்லே,டாக்டர் வாக்கிங் என்றார். பெரியவா பிரதட்சிணம் என்று சொன்னார்...!"

"நாங்க இரண்டு பேரும் சொன்ன மருந்து அத்வைதம்; பேரு மட்டும் த்வைதம்-என்கிறே?"
இப்படி 'இலேசாக'ப் பேசுவது பெரியவாளுக்கு ரொம்ப பிடிக்கும்.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP

HARA HARA SANKARA JAYA JAYA SANKAR
 
OM SRI GURUBHYO NAMAH

பாத சமர்ப்பணைக்கு பணம் எப்படி கிடைத்தது!

"என் பெயர் சந்திரமௌலீ!"“ நான் போயிட்டு வரேன், சாஸ்திரிகளே” என்று கிளம்பியவரைத் தடுத்து நிறுத்திய என் தகப்பனார், “ஒங்க நாமதேயம் (பெயர்) ?” என்று கேட்டார்.

அவர் சொன்ன பதில்: “சந்திரமௌலீ!” இருவரும் பிரமித்து நின்றோம் (“என்ன சந்தானம்! சந்திர மௌலீஸ்வரர் கிருபையால உன் மன விருப்பம் பூர்த்தி ஆயிடுத்தோல்லியோ? காவிரி ஸ்நான பலனும் கெடச்சுடுத்தோல்லியோ? ”-பெரியவா)

சொன்னவர்-சந்தானம்.
கட்டுரையாளர்; ரமணி அண்ணா
31-12-2012 போஸ்ட்-வரகூரான்

பல வருடங்களுக்கு முன்… காஞ்சி மஹா ஸ்வாமிகள், தன் பரிவாரங்களுடன் தஞ்சை மாவட்டப் பகுதிகளுக்கு விஜயம் செய்தார். அது ஆனி மாதம். ஆடுதுறையில், பெரிய தர்மசத்திரம் ஒன்றில் முகாமிட்டிருந்த மஹா பெரியவாளை, சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஜனங்கள், வந்து தரிசித்துச் சென்றபடி இருந்தனர். ஆடுதுறையைச் சுற்றியுள்ள நடராஜபுரம், கோவிந்தபுரம், தியாகராஜபுரம், சாத்தனூர், திருமங்கலக்குடி ஆகிய ஊர்களைச் சேர்ந்த பிரமுகர்கள், தங்கள் ஊர் சார்பாக ஆச்சார்யாளுக்கு சமஷ்டி பிக்ஷா வந்தனம் (பல பேர் சேர்ந்து பிக்ஷை அளித்து வழி படுவது) நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.ஆடுதுறையிலிருந்து தெற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில்தான் அடியேனின் சொந்த ஊரான மருத்துவக்குடி கிராமம் உள்ளது. என் தந்தையார் பிரம்ம சந்தான வாத்தியார், அப்போது அந்தப் பகுதியின் காஞ்சிமட முத்திராதிகாரியாக இருந்தார். எங்களது கிராமத்தின் சார்பாகவும் சமஷ்டி பிக்ஷா வந்தனம் நடத்த வேண்டும் என்று விரும்பினார் அவர். இதை, உள்ளூர் பிரமுகர்களும் ஏற்றுக்கொண்டனர்.மறுநாள் காலை ஸ்வாமிகள் முகாமிட்டிருந்த சத்திரத்துக்குக் கிளம்பினார் என் தகப்பனார்.என்னையும்உடன்அழைத்துச்சென்றார். அவரைக் கண்டதும் மடத்துக் காரியஸ்தர், “சாஸ்திரிகளே… நீங்க மருத்துவக்குடி பகுதி மடத்து முத்திராதிகாரிதானே? ஒரு நாளைக்கு உங்க ஊர் பிக்ஷை வெச்சுக்க வேண்டாமோ ?

வர்ற ஞாயித்துக்கிழமை உங்க ஊருல வெச்சுக்கோங்களேன்!” என்றார்.உடனே என் தந்தையார், “நானும் அதக் கேட்டுண்டு போகத்தான் வந்தேன். ஞாயித்துக்கிழமையே வைச்சுண்டுடறோம். சுமாரா எவ்ளோ ரூவா செலவாகும் ?” என்று அந்த காரியஸ்தரிடம் வினவினார்.காரியஸ்தர் சிரித்தபடியே, “சொல்றேன்… மடத்துக் காணிக்கையா இருநூத்தம்பது ரூவா கட்டிப்டணும். அப்புறம் தேங்கா, பழம், காய்கறிகள்னு நீங்க வாங்கிண்டு வர செலவு. எல்லாம் முடிஞ்சு ஆச்சார்யாள்ட்ட பிரசாதம் வாங்கிக்கறச்சே… உங்க கிராம வசதிப்படி பாத சமர்ப்பணை (காணிக்கை) அப்டி இப்டினு ஐநூறு, அறுநூறு ரூவா செலவு பிடிக்கும்! உங்கள் ஊர்ல வசூலாயிடுமோல்லியோ?” என்று கேட்டார். சற்றும் தயங்காமல், “பேஷா ஆயிடும்” என்ற என் தகப்பனார், “அது சரி…மத்த ஊர்க்காராள்லாம் பாத சமர்ப்பணையா எவ்ளவு பண்றா?” என்று ஆவலுடன் கேட்டார். “ஐநூறுலேர்ந்து ஆயிரம் வரை பண்றா” என்றார் காரியஸ்தர். தகப்பனார் யோசனையில் ஆழ்ந்தார்.சற்று நேரத்தில் ஆச்சார்யாளை தரிசித்த நாங்கள், அவரை நமஸ்கரித்து எழுந்தோம். என் தந்தையார் பிக்ஷா வந்தன விஷயத்தை ஸ்வாமிகளிடம் தெரிவித்தார்.“பேஷா நடக்கட்டுமே” என்று அனுக்ரஹித்த ஸ்வாமிகள், “ஏகதேசம் (தனியாக)பண்றாப்ல
நம்மூர்லநிறையதனிகாள்லாம்(பணக்காரர்கள்)இருக்காளோ?”என்று வினவினார்.

உடனே என் தகப்பனார் குரலைத் தாழ்த்தி, “மூணு நாலு பேர்வழிகள் இருக்கா. அவாள்ள ரெண்டு மூணு பேர், இப்போ மெட்ராஸ் போயிருக்கா. ஊர்ல எல்லாருமா சேர்ந்துதான் பெரியவாளுக்கு பிக்ஷா வந்தனம் பண்றதா உத்தேசம். ஆச்சார்யாள் அனுக்கிரக்கிக்கணும்” என வேண்டினார்.

புன்னகைத்தபடியே இரு கரங்களையும் தூக்கி ஆசீர்வதித்தார் ஸ்வாமிகள்.ஞாயிற்றுக்கிழமைக்கு இன்னும் நான்கு நாட்களே இருந்தன. வசூலை ஆரம்பித்தார் தகப்பனார். மூன்று அக்ரஹாரத்திலும் சேர்த்து சுமார் முப்பது வீடுகள் இருக்கும். வியாழக்கிழமை மாலை வசூல் முடிந்தது. நானூறு ரூபாய் சேர்ந்தது. என் தகப்பனாரும் ஊரிலுள்ள மற்ற வைதீகர்களும் சேர்ந்து நூறு ரூபாய் சமர்ப்பித்தனர். ஆக மொத்த வசூல் ஐநூறு ரூபாய்! பிக்ஷா வந்தன செலவுக்கு இது போதும்.
இனி பெரியவாளின் பாத சமர்ப்பணைக்குத் தான் பணம் வேண்டும். ‘ஐநூறு ரூபாயாவது பாத சமர்ப்பணை பண்ண வேண்டும்’ என்பது என் தந்தையின் ஆசை. ஆனால் பணமில்லை.

அன்றிரவு, அவர் சரியாகவே தூங்கவில்லை.வெள்ளிக்கிழமை! ஆச்சார்யாளைத் தரிசிக்கச் சென்றோம். சத்திரத்து வாயிலில் – கீற்றுக் கொட்டகையில் அமர்ந்து தரிசனம் அளித்துக் கொண்டிருந்தார் ஸ்வாமிகள். கூட்டம் அலை மோதியது. நாங்கள் சற்றுத் தள்ளி ஓர் ஓரமாக… ஸ்வாமிகள் இருந்த இடத்தை நோக்கி கைகூப்பி நின்றிருந்தோம். நான் தகப்பனாரை பார்த்தேன். முகத்தில் கவலை தோய்ந்திருந்தது.‘பாதசமர்ப்பணைஐநூறுக்குஎன்னபண்ணப்போகிறோம்?’என்கிற கவலை அவருக்கு.

திடீரென்று ஒரு கருணைக் குரல்: “சந்தானம்! கிட்ட வாயேன்…ஏன்அங்கேயே நின்னுண்டிருக்கே?” – சிரித்தபடி ஜாடை காண்பித்து, அருகில் அழைத்தார் ஆச்சார்யாள். இருவரும் சென்று, சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தோம்.“என்ன சந்தானம்! நேத்திக்கு நீகண்ணுலபடவே இல்லியே! ஊர்ல ஏதாவது வைதீக ஜோலியா ?” என்று வினவினார் ஸ்வாமிகள். “அதெல்லாம் ஒண்ணுமில்ல பெரியவா. ஞாயித்துக்கிழமை எங்க ஊர் சார்பா பிக்ஷாவந்தனம் பண்றமோல்லியோ…அதுவிஷயமா ஏற்பாடுகள் பண்ணிண்டிருந்தேன். அதனாலதான்…” என்று என் தகப்பனார் முடிப்பதற்குள் இடைமறித்த ஸ்வாமிகள், “அது சரி சந்தானம் … லௌகீகமெல்லாம் (வசூல்) எதிர்பார்த்தபடி பூர்த்தி ஆச்சோல்லியோ?!” என் சிரித்தபடியே வினவினார். இதற்கு பதில் சொல்லத்தயங்கினார் என்தகப்பனார்

To be continued in next post.
 
Contd.....

அவர் சொல்ல வாயெடுப்பதற்குள்… ஸ்வாமிகள் எதையோ புரிந்து கொண்டவர் போல், “ஒண்ணும் கவலைப்படாதே! சந்திரமௌலீஸ்வரர் கிருபையால எல்லாம் நீ நெனைச்சுண்டு இருக்கிற மாதிரியே நடக்கும்!” என வார்த்தைகளால் வருடிக் கொடுத்தார்.

திடீரென, “ஏன் சந்தானம்… இந்த ஊர் காவிரி நதியிலே இப்போ நிறைய ஜலம் போறதோ… தெரியுமோ ஒனக்கு?” என்று கேட்டார்.

”காவிரி ஜலத்தைப் பற்றி பெரியவா ஏன் விசாரிக்கிறார் ?” என்று அனைவரும் குழம்பினர்.

“போயிண்டிருக்கு பெரியவா” என்றார் தகப்பனார்.பெரியவா விடவில்லை. “அது சரி, நீ எப்ப காவிரி ஸ்நானத்துக்குப் போயிருந்தே?”“ஒரு வாரம் முன்னாடி, பெரியவா!” – என் தகப்பனார்பதில்சொன்னார். “அதிருக்கட்டும்…இப்போ ஜலம் போயிண்டிருக்கோ…தெரியுமோ?” – இது பெரியவா.உடனே அருகில் இருந்த உள்ளூர் அன்பர் ஒருவர் பவ்வியமாக, “இன்னிக்கிக் கார்த்தால நான் காவிரிஸ்நானத்துக்குப் போயிருந்தேன். சுமாரா ஜலம் போறதுபெரியவா”என்றார்.ஸ்வாமிகளுக்கு சமாதானம் ஏற்படவில்லை.

“சுமாரா போறதுன்னா… புரியலியே! அமிழ்ந்து ஸ்நானம் பண்றாப்ல போறதா, இல்லியா எனக்குத் தெரியணும்” என்றவர், என் தகப்பனாரைப் பார்த்து, “சந்தானம், நீ ஒரு காரியம் பண்ணு. நாளைக்கு விடியக் காலம்பற காவிரி ஸ்நானத்துக்குப் போ. நன்னா முழுகி ஸ்நானம் பண்றாப்ல தீர்த்தம் போறதான்னு பாத்துண்டு வந்து சொல்லு!” என்று கூறி விட்டு, ‘விசுக்’ கென்று எழுந்து உள்ளே சென்று விட்டார்.‘

தான் காவிரியில் ஸ்நானம் பண்ணி விட்டு வருவதற்காகத் தான், இவ்வளவு விவரங்களையும் பெரியவா கேக்கறா போலும்’ என்று எண்ணியபடியே ஊர் திரும்பினோம்.

சனிக்கிழமை. பொழுது விடிந்தது. மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. பெரியவா ஆக்ஞைப்படி காவிரி ஸ்நானத்துக்குப் புறப்பட்டோம். அப்போது காலை ஏழு மணி. கரையில் என்னையும், தகப்பனாரையும் தவிர ஒரு ஈ, காக்கா கூட இல்லை. என் தகப்பனார் ஸ்நானம் பண்ணியபடியே சொன்னார்: “நன்னா முழுகி ஸ்நானம் பண்றாப்ல தான் ஜலம் போறது! பெரியவா கிட்ட போய் சொல்லணும்.”தொடர்ந்து, உரத்தக் குரலில் காவிரி ஸ்நான சங்கல்பம் சொல்ல ஆரம்பித்தார், என் தந்தையார்.

திடீரென கரையிலிருந்து, “சாஸ்திரிகளே! கொஞ்சம் இருங்கோ. நானும் வந்துடறேன். எனக்கும் கொஞ்சம் ஸ்நான சங்கல்பம் பண்ணி வையுங்கோ…புண்ணியமுண்டு” என்றொரு கணீர்க் குரல் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தோம். சுமார் 55 வயது மதிக்கத் தக்க ஒருவர் ஜலத்தில் இறங்கிக் கொண்டிருந்தார். முன்பின் பார்த்திராத முகம்!சங்கல்ப ஸ்நானம் முடிந்து கரையேறினோம். உடை மாற்றிக் கொண்ட அந்த நபர், தகப்பனாருக்கு ஸ்நான சங்கல்ப தக்ஷணையாக ஐந்து ரூபாய் கொடுத்தார். அவரைப் பற்றி என் தகப்பனார் விசாரித்தார்.அவர் சொல்ல ஆரம்பித்தார். “எனக்கும் பூர்வீகம் மருத்துவக்குடிதான். என் அம்மா வழித் தாத்தாவும் இந்த ஊர் தான். அப்பா வழித் தாத்தா வெங்கடாசலம் ஐயருக்கு மருதுவக்குடியிலே சொந்த வீடு இருந்தது. எங்க தாத்தாவுக்கு அப்புறம் இங்க ஒருத்தரும் இல்லே. பம்பாய் போயிட்டோம். திருநீலக்குடிக்கு அருகில் இருக்கிற மேலூர் சந்திர மௌலீச்வர ஸ்வாமி தான் எங்க குலதெய்வம்.”
“நீ எப்ப நம்மூர் பக்கம் போனாலும் ஆடுதுறை காவிரியில ஸ்நானம் பண்ணிட்டு வா”ன்னு எங்க அம்மா அடிக்கடி சொல்லுவா. அந்த பாக்கியம் இன்னிக்கு கிடைச்சுது. குடும்ப கேஸ் விஷயமா தஞ்சாவூர் போயிண்டிருக்கேன். இப்போ சங்கல்பத்தோடு காவிரி ஸ்நானம் கிடைச்சுதுல ரொம்ப திருப்தி!” என்றவர்,

“ஆமா, சாஸ்த்ரிகளே! ரயிலை விட்டு எறங்கி வரச்சே பார்த்தேன். நிறைய பேர் மடிசாரும், பஞ்சகச்சமுமா போயிண்டிருக்காளே… இங்கே என்ன விசேஷம் ? ”என்று கேட்டார்.ஆச்சார்யாள் விஜயம் பற்றியும், கிராம பிக்ஷா வந்தனம் பற்றியும் தகப்பனார் அவரிடம் விவரித்தார்.அவருக்குபரமசந்தோஷம். “கேக்கவே சந்தோஷமா இருக்கு. நம்ம ஊர் சார்பா லோக குருவுக்கு நடக்கிற பிக்ஷா வந்தனத்துல என்னால கலந்துக்க முடியாத நிர்பந்தம். இருந்தாலும் எங்க குடும்ப காணிக்கையா பிக்ஷா வந்தனத்துல இதையும் சேர்த்துக்கோங்கோ” என்றபடி என் தகப்பனாரை நமஸ்கரித்து, அவரது கையில் ஒரு கவரைக் கொடுத்தார். தகப்பனாருக்கு ஒன்றும் புரியவில்லை. கவரைப் பிரித்துப் பார்த்தார். அதில் ஐநூறு ரூபாய்.

“நான் போயிட்டு வரேன், சாஸ்திரிகளே” என்று கிளம்பியவரைத் தடுத்து நிறுத்திய என் தகப்பனார், “ஒங்க நாமதேயம் (பெயர்) ?” என்று கேட்டார். அவர் சொன்ன பதில்: “சந்திரமௌலீ!” இருவரும் பிரமித்து நின்றோம்.

பின்னர் நேராகச் சத்திரத்துக்குச் சென்றோம். அங்கே பெரியவா இல்லை. கோவிந்தபுரம் போதேந்திராள் மடத்திற்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். என் தகப்பனார், மடத்து காரியஸ்தரிடம் சென்று, “பெரியவா, காவிரியில் அமிழ்ந்து ஸ்நானம் பண்றாப்ல, ஜலம் போறதான்னு பாத்துண்டு வரச் சொன்னா…” என்று முடிப்பதற்குள் அவர், “பெரியவா விடியகாலம் நாலரை மணிக்கே காவேரில ஸ்நானம் பண்ணிட்டு வந்துட்டாளே” என முத்தாய்ப்பு வைத்தார். எங்கள் பிரமிப்பு அதிகரித்தது.

ஞாயிற்றுக்கிழமை. பிக்ஷா வந்தனம் முடிந்தது. கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் பெரியவாளை நமஸ்கரித்தோம். தகப்பனார், பழத் தட்டில் பாத காணிக்கையாக, அந்த ஐநூறு ரூபாயை வைத்து சமர்ப்பித்தார். பழத்தட்டையே சற்று நேரம் உற்றுப் பார்த்த ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே, “என்ன சந்தானம்! சந்திர மௌலீஸ்வரர் கிருபையால உன் மன விருப்பம் பூர்த்தி ஆயிடுத்தோல்லியோ? காவிரி ஸ்நான பலனும் கெடச்சுடுத்தோல்லியோ? ” என்று வினவ, வியப்புடன் நின்ற அனைவரும் சாஷ்டாங்கமாக பெரியவா முன்னே விழுந்தோம்

காஞ்சிப் பெரியவர், பரமாச்சாரியாரின் தெய்வீக சக்தி வணங்குவதற்கு உரியதாகும்!!!!

படித்து நெகிழ்ந்தது!

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP

HARA HARA SANKARA JAYA JAYA SANKAR
 

Latest posts

Latest ads

Back
Top