"குருவே சரணம்”
Om Sri Gurubyo Namah
Sada Shiva Samarambham
Sankaracharya Madhyamam
Asmat aacharya Paryantham
Vande Guru Paramparaa
பெரியவாளின் ஹ்ருதயத்தில் நீங்காத இடத்தைப் பிடித்த மஹா மஹா பெரியவர்...
தேப்பெருமாநல்லூர் ஶிவன் என்ற அன்னதானஶிவன்.
[ஶ்ரீ அன்னதான ஶிவனின் அன்னதான மஹத்வம்]
இவருடைய அன்னதான மஹா கைங்கர்யத்தைப் பற்றிப் பார்ப்போம்.
தேப்பெருமாநல்லூர் ராமஸ்வாமி என்ற நாமத்துடன் பிறந்து, வாஸ்தவத்துலேயே அவர் பண்ணிய அன்னதானத்தால் மட்டுமே 'அன்னதான ஶிவன்' என்று உலகமே போற்றி வணங்கிய உத்தம ஜீவனைப் பற்றி பெரியவாளுடைய திவ்யமங்கள சரித்ரத்தில் சொல்வதுதான் உத்தமம். அப்பேர்ப்பட்ட யுகமஹா புருஷருக்கு நாம் செய்யும் நமஸ்காரம்.
18th century-ன் மத்தியிலிருந்து, போன century மத்தி வரை, கும்பகோணம்தான் காஞ்சி காமகோடி ஸ்ரீமடத்தின் தலைநகராக இருந்திருக்கிறது.
கும்பகோணம் என்றால், இப்போதுள்ளவர்களுக்கு மஹாமகம் நினைவுக்கு வரும். ஆனால், அப்போது இருந்தவர்களுக்கு, அப்போது அன்னதான ஶிவன் நடத்திய அதிஸயமான அன்னதான கைங்கர்யமும் நிச்சயமாக நினைவுக்கு வரும்.
நம்முடைய பெரியவா, மூன்று வயஸுக் குழந்தையாக, குட்டிக் கிணியாக இருந்த போதே [1897], ஸ்ரீ ஶிவனின் மாமாங்க அன்னதானம், ஸ்ரீமடத்தில் பூர்வ ஆசார்யாளின் அனுக்ரஹத்துடன் துவங்கிவிட்டது!
1909-ல் பெரியவா.... 15 வயஸு பால ஸன்யாஸியாக இருந்தபோது வந்த மாமாங்கத்திலும்,
ஸ்ரீமடத்தின் ஸார்பாக அன்னதானத்தை தொடர்ந்தார் ஶிவன்.
1916-லிருந்து தொடங்கி, அவர் முக்தியடைந்த 1939 வரை, ஸ்ரீமடமே ஶிவனுடைய வாஸ ஸ்தானமானது.
அந்தப் பெரியவரின் அன்புப்பணி பெரியவாளின் கருணையோடு ஸங்கமமாகி, லக்ஷோபலக்ஷம் ஜனங்களின் குக்ஷிகளை [வயிறு] முட்ட முட்ட நிறைவித்தது. இத்தனை லக்ஷம் ஜனங்களுக்கும் ஶ்ரீமடத்தில் அன்னதானமும் நடைபெற்றது.
அன்னதானம் பற்றி பெரியவா சொன்ன கதை..........
"தானங்கள் நெறைய பண்ணினவன் கர்ணன். யார் வந்து, எதக் கேட்டாலும் குடுத்துடுவான்!
மஹாபாரத சண்டைல, யுத்தகளத்ல, உஸுர் போனதும், அவன் வீரஸ்வர்க்கத்துக்கு போனான். அங்க, அவனுக்கு எல்லாம் இருந்தும், ஒண்ணே ஒண்ணு மட்டும் இல்ல!
அவனுக்கு பசி எடுத்தா..... வைர வைடூர்யமா கொட்டி கெடந்தாலும், ஒரு பிடி சோறும், ஒரு
கொவளை ஜலமும் இல்ல!.....
ஏன் இப்டி?....
அங்க இருந்த கார்யஸ்தாளைக் கேட்டான்.
அவாள்ளாம் சொன்னா....
"பாருங்கோ.... நீ.... தான ஸூரன்தான்! எத்தனைதான் வெல [விலை] பெத்த பொருளா, நீ வாரி
வாரி வழங்கி தானம் பண்ணிருந்தாலும், முக்யமான தானத்தை நீ பண்ணவே இல்லியே!...."ன்னதும், கர்ணனுக்கு தூக்கி வாரிப் போட்டுது!
'எந்த தானத்தை நா... பண்ணாம விட்டேன்?'ன்னு கேட்டதும், அவா சொன்னா....
"நீ, ஒரு தடவை கூட அன்ன தானமே பண்ணலியேப்பா...! அங்க [பூமி] நீ குடுத்ததுதான், இங்க
ஒனக்கு கெடைக்கும்" ன்னுட்டா!
கர்ணனுக்கு அவமானமா போச்சு...! இந்த தர்ம ஸூக்ஷ்மம் அவனுக்கு தெரியாம போய்டுத்து..!
என்ன பண்ணறது?....பசியானா... வயத்தை கிள்றது!
அப்போ நாரதர் அங்க வந்துட்டு, அவன்ட்ட சொன்னார்.......
"பஞ்ச பாண்டவாளுக்காக கண்ணன் தூது வந்தப்போ, நீ ஒன்னோட ஆள்காட்டி வெரலால, விதுரரோட வீட்டை காமிச்சு, அவனை 'அங்க போய் ஸாப்டு'ன்னு, க்ருஷ்ணன்கிட்ட கேலியா சொன்னே! அதுனால ஒன்னோட ஆள்காட்டி வெரலை வாய்ல வெச்சுக்கோ! ஒம்பசி போய்டும்"...ன்னார்.
அதுனால நாம எத்தனைதான் தானம் பண்ணினாலும், பசிச்சவாளுக்கு, அது எந்த ஜீவராஸியா இருந்தாலும் ஸெரி, அன்னம் போடணும். தெனோமும் அவாவா ஆத்துல ஸமைக்கறப்போ, ஒரு பிடி அரிசி எடுத்து ஒரு பாத்ரத்தில் தனியா போட்டு வெச்சு, மொத்தமா ஏதாவது அன்னதானமோ இல்லாட்டா, ஏழை பாழேகளுக்கு ஒதவி பண்ணினா.... அது, எனக்கே பண்ற மாதிரி!...
காமாக்ஷியோட கருவறைல அன்னபூரணிக்கு ஸன்னதி இருக்கு!
'இரு நாழி நெல் கொண்டு, அவள் இயற்றும் எண் நான்கு அறங்களில்' அன்னதானம் ரொம்ப முக்யமானது.
காஞ்சிபுரத்ல மணிமேகலை, தங்கிட்ட இருந்த அமுதஸுரபிலேர்ந்து அக்ஷயமா அன்னதானம் பண்ணியிருக்கா.
'காஞ்சி'ங்கறதும், 'மணிமேகலை'ங்கறதும் ஒண்ணுதான்! மணி கட்டினஒட்டியாணத்துக்குத்தான் அப்டிப் பேர்!...
காமாக்ஷியோட அன்ன பாலிப்பை ஒஸத்தியாவும், பரமேஶ்வரனை பரியாஸம் பண்ணியும் ஸுந்தரமூர்த்தி நாயனார் எப்டி பாடறார்-ன்னா....
ஓணன், காந்தன்-னு ரெண்டு அஸுராள் பரமேஶ்வரனை வழிபட்ட ஸ்தலந்தான் காஞ்சில இருக்கற ஓணகாந்தன்றளி.
அங்கயிருந்த பிக்ஷாடன மூர்த்தியை, ஸுந்தரமூர்த்தி நாயனார் பாத்தார். பாத்துட்டு பாடறார்....
"லோக ஜனங்களுக்கெல்லாம் வயிறாரப் போட்டு வளக்கற எங்கம்மா, புராதனமான இந்த காஞ்சிபுரத்ல... கச்சி மூதூர்லேயே இருக்கா..! அவ போட்டு ஸாப்ட்டா, வயறு ரொம்பறது மட்டுமில்ல.! உயிரும் ரொம்பிடும்.
'ஞான வைராக்ய ஸித்த்யர்த்தம் பிக்ஷாம் தேஹி'ன்னு ஆசார்யாள், அன்னபூர்ணேஶ்வரிகிட்ட ப்ரார்த்தனை பண்ணிண்டபடி, அவ கையால வாங்கிச் ஸாப்ட்டா, உய்நெறி-ங்கற மோக்ஷ மார்க்கமே ஸித்திச்சுடும். இப்டி ஒருத்தி இந்த காஞ்சீபுரத்லேயே காமக் கோட்டத்ல இருக்கறப்போ...... ஏ ! பிச்சாண்டி ஸ்வாமி ! நீர் ஏங்காணும் இப்டி ஊர் ஊரா, வீடு வீடா பிச்சையெடுத்துண்டு திரியரீர்?.." ன்னு ஸுந்தரர்.... ஸ்வாமியை ரொம்ப ஸ்வாதீனமா கேலி பண்றார்...
....அப்டி..... அன்னதானம் பண்ணினவர்தான் தேப்பெருமாநல்லூர் ஶிவன்!
ஸாதம்னா..... அப்டியே வெள்ள-வெளே..ர்னு ஹிமயமலை மாதிரி குவிச்சிருக்கும்! ஸாம்பார் அண்டால.... யானையே முழுகிப் போனாக்கூட தெரியாது! ஹிமாச்சல ஶிவன், மதுரை மீனாக்ஷி கல்யாணத்ல குண்டோதரனுக்காக, அன்னக்குழி ஸ்ருஷ்டிச்சார்-னு சொல்லுவாளே?.... அதையே அந்த ஏழை ப்ராஹ்மண ஶிவன் பண்ணாரோ-ன்னு ப்ரமிக்கும்படியா அவர் பண்ணிண்டிருந்தார்.
..." என்று பெரியவாளே வியந்து போன அன்னதான ஶிவனுக்கு, இப்படி அன்னதானம் செய்வதையே ஜன்மப்பணியாக செய்ய ஆதேஶம் கிடைத்தது, தேப்பெருமாநல்லூர் ஆலயத்தில் குடி கொண்டிருக்கும் ஞான மோன மூர்த்தியான ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியிடமிருந்துதான்!
பெரியவாளின் திருவாக்கால் ஶிவனின் பெருமைகளைக் கேட்போம்....
"ஒரு தடவை, த்ளாயிரத்து முப்பத்து மூணாம் [1933] வர்ஷ மாமாங்கத்துலதான், வெறகே [விறகு] நூறு வண்டி வந்துது! ஊறுகாய்க்காக நெல்லிக்கா மட்டும் பத்து வண்டி வந்துது. ஆவி வாஸனைலேர்ந்தே, இன்ன இன்ன பண்டம், இன்னும் இவ்ளோவ் சேக்கணும்-னு கரெக்டா சொல்லிடுவார்! அப்டி, கொதிச்சிண்டு இருக்கற ரஸத்தோட வாஸனைலேர்ந்தே, அதுக்கு இன்னும் எவ்ளோவ் கொத்தமல்லி அரச்சு விடணும்-னு சொல்லுவார்!
அது எவ்ளோவ் தெரியுமோ?......
ஒரு பிடி கொத்தமல்லியோ, ஒரு கத்தையோ இல்ல! 'ஒரு மொறம் அரைச்சு விடுடா"ன்னு அதட்டல் போட்டாராம்!
ஏற்கனவே அரைச்சு விட்டதுக்கு, கூடுதலா, மொறம் கொத்தமல்லி சேக்கணும்னா... எவ்ளோவ் ரஸம் வெச்சிருப்பா! எவ்ளோவ் பேர் ஸாப்டிருப்பா-ன்னு நீங்களே கணக்குப் போட்டு பாத்துக்கோங்கோ!
ஸாப்படற எடத்தை, ஶுத்தி பண்றதுக்காக, தொடப்பக்கட்டையே, ரெண்டு வண்டி வந்துதுன்னா... பாத்துக்கோங்கோ!
...எத்தனை அண்டா வெச்சாலும், எத்தனை நீளம் கோட்டையடுப்பு வெட்டினாலும், ஸாதம் வடிச்சு மாளாது-னு... அவர் என்ன பண்ணுவாராம்...... பத்து மூட்டை, இருவது மூட்டை ஸாதம் வடிச்சு, அதை அப்டியே..... நீள நீளப் பாய்-ல பரத்திக் கொட்டி, கொதிக்கக் கொதிக்க இருக்கற அந்த அன்னப் பாவாடை மேலேயே, மெலீ...ஸா ஒரு துணியைப் போட்டு மூடி, கிடுகிடுன்னு அது மேலேயும் ஒரு பத்து, இருவது மூட்டை ஈரப் பச்சரிசியை.... ஆமா! பச்சையா இருக்கற அரிசியாவேதான்...! பரத்திக் கொட்டிட்டு, அதுக்கு மேல கெட்டிக் கோணியா [சாக்கு] போட்டு, நானா அடிப் பாய்க்கு, அடிவரைக்கும் அதை ஓரளவு இறுக்கமா சொருகி மூடிப்பிடுவாராம்!...
கா[ல்]மணியோ, அரைமணியோ கழிச்சு கோணியை எடுத்தா.... அத்தனை அரிசியும் புஷ்பமா..... ஸாதமாயிருக்குமாம்! அதாவுது, ஸாதம் வடிக்கற கார்யத்ல..... பாதி மிஞ்சும்படியா இப்டி யுக்தி பண்ணிண்டு இருந்திருக்கார்...!
இத்தனை ஆயிரம், பதினாயிரம் பேருக்கு நன்னா, கெட்டியா நெறைய்ய மோர் விடணும்னா அத்தனை பாலுக்கு எங்க போறது?
இந்த மாதிரி பெரிய உத்ஸவ ஸமாராதனைகள்ள, ஶிவன்..... அதுக்கும் ஒரு யுக்தி வெச்சிருந்தார்.
Refridgerator, அது-இதுல்லாம் இல்லாத நாள்ள.... அவர் ஒரு புது மாதிரி refridgerator கண்டுபிடிச்சிருந்தார்!
ஸமாராதனைக்கு பல வாரம், பல மாஸம் முந்தியே, தயிர் ஸேகரம் பண்ண ஆரம்பிச்சுடுவார். தயிர் சேரச் சேர, பெரிய பெரிய மரப் பீப்பாய்கள்ள.... அந்தத் தயிரை விட்டு, ஒவ்வொண்ணும் ரொம்பினதும், அதோட வாயை மெழுகால அடச்சு, அப்டியே ஆழமான கொளங்களுக்கு [குளம்] அடில தள்ளிப்பிடுவார்!
அப்றம் எப்பத் தேவைப்படறதோ, அப்பத் தெறந்தா..... மொத நா[ள்] ராத்ரிதான் தோச்ச மாதிரி, தயிர் ஶுத்தமா இருக்கும்!
கொளத்தொட குளிர்ச்சி மாத்ரந்தான் காரணம்-னு சொல்றதுக்கில்ல..! அவரோட மனஸு விஸேஷமும் சேந்துதான் அப்டி இருந்திருக்கணும்...."
மனஸெல்லாம் குழைந்து போய், தன் பக்தனின் பெருமைகளை கூறி மாளவில்லை, பகவானுக
Source: MAHA PERIYAVA Public Group/Face Book
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!