P.J.
0
கொதிக்கும் நெய்யில் கைவிட்டு பாட்டி அப்&
விடிய விடிய அப்பம் சுட்ட பாட்டி
திருவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் கொதிக்கும் நெய்யில் கைவிட்டு பாட்டி அப்பம் சுட்டார். இதில் பக்தி பரவசத்துடன் பக்தர்கள் கலந்து கொண்டனர்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊரணிப்பட்டியை சேர்ந்தவர் முத்தம்மாள் (80). இப்பகுதியில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலில் சிவராத்திரி நாளில், முத்தம்மாள் கொதிக்கும் நெய்யில் கைவிட்டு அப்பம் சுடும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அம்மன் அருளால் முத்தம்மாள் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுட்டு படைப்பதாக மக்கள் நம்புகின்றனர்.
இந்நிலையில், நேற்று சிவராத்திரியை முன்னிட்டு முத்தம்மாள் பாட்டி, அதிகாலையிலேயே எழுந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலுக்கு நடந்தே சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் பத்திரகாளியம்மன் கோயிலுக்கு வந்து அப்பம் சுட தயாரானார். நள்ளிரவு 11.30 மணிக்கு அப்பம் சுடும் நிகழ்ச்சி தொடங்கியது. பெண்கள் குலவையிட பக்திப் பாடல்கள் பாடிய படியே கொதிக்கும் நெய்யில் கைவிட்டு அப்பங்களைச் சுட்டு எடுத்தார் முத்தம்மாள் பாட்டி. தகதகவென கொதிக்கும் நெய்யில் கையை விட்டு அப்பத்தை அள்ளி புரட்டிப் போட்டதை கூடியிருந்த அனைவரும் பக்தி பரவசத்துடன் பார்த்தனர். அவ்வப்போது கொதிக்கும் நெய்யை
தனது நெற்றியிலும், கைகளிலும் விபூதியைப் போல் பூசிக்கொண்டார். அதிகாலை 3 மணி வரை பாட்டி சுட்ட அப்பம் ஒரு பெட்டியில் வைத்து பத்திரகாளியம்மனுக்கு பூஜை நடத்தப்பட்டது. பின்னர் கோயிலுக்கு வந்த அனைவருக்கும் அப்பம் பிரசாதமாக வழங்கப்பட்டன. பாட்டி முத்தம்மாள் 48வதுஆண்டாக கொதிக்கும் நெய்யில் கையை விட்டு அப்பம் சுட்டு வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
- See more at: ???????????????????? ????? ?????? ?????????? ???????? ?? ?????? ????? ????? ?????? ????? ??????|Srivilliputthur erotic devotion to dawn to dawn left hand in boiling oil for bread, baked Granny|Tamilmurasu Evening News paper