P.J.
0
சிதம்பரம் திருப்பாற்கடல்
சிதம்பரம் திருப்பாற்கடல் உழவாரப்பணியில் ஈடுபட்ட இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர்
சிதம்பரத்தில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட திருப்பாற்கடல் தீர்த்தகுளத்தை இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் பொதுமக்களுடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமை உழவாரப்பணியில் ஈடுபட்டு தூர்வாரும் பணியை மேற்கொண்டனர்
சிதம்பரம் வேங்கான்தெரு பர்ணாசாலையில் உபமன்யு என்ற முனிவருக்காக ஸ்ரீநடராஜப் பெருமாள் உருவாக்கியது திருப்பாற்கடல் குளம் என வரலாறு கூறுகிறது. இந்த திருப்பாற்கடல் தீர்த்தகுளம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு தூர்ந்து போய் இருந்தது. 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினரால் இந்த ஆண்டு மீட்கப்பட்ட பகுதி மட்டும் சுத்தம் செய்யப்பட்டு நீர்விடப்பட்டு ஸ்ரீசிவகாமசுந்தரி சமே ஸ்ரீமந் நடராஜப் பெருமானின் தீர்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடத்தப்பட்டது.
வேங்கான்தெருவில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட திருப்பாற்கடல் தீர்த்த குளம் மொத்த 6647 சதுர மீட்டராகும். மேலும் குளத்தில் அருகாமையில் ஆத்மநாதர்கோயில், குருநமச்சிவாயர் கோயில் உள்ளது. தற்போது கோயில் குளம் முற்றிலுமாக ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்கப்பட்டு, இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினரால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தலைவர் மு.செங்குட்டுவன் தலைமையில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் பொதுமக்களுடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமை உழவாரப்பணியில் ஈடுபட்டு தூர்வாரும் பணியை மேற்கொண்டனர். உழவாரப்பணியில் திரளான மக்கள் பங்கேற்று தூர்வாரும் பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
Dinamani News | Dinamani Tamil News | Dinamani E-Paper | Dinamani Tamil NewsPaper