சினிமா நடிகர்களுக்கு பாரத ரத்னா விருது : &
விளையாட்டு வீரர்கள், சினிமாக் கலைஞர்களுக்கு பாரத ரத்னா விருதை அளிக்கக் கோருவது கேலிக்கூத்தானது என, பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கும், துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவுக்கும், பாரத ரத்னா விருது வழங்கக் கோரி, பல்வேறு தரப்பில் வற்புறுத்தப்படுகின்றன.
இது குறித்து சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியும், பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டேய கட்ஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:சினிமாக் காரர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் பாரத ரத்னா விருதை வழங்கக் கோருவது, நமது கலாசாரம் தரம் தாழ்ந்துள்ளதை தான் காட்டுகிறது. தற்போது நம்நாட்டை முன்னேற்ற பாதையில், கொண்டு செல்லும் நபர்களுக்கு தான் பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும். நாட்டு முன்னேற்றத்துக்கு உழைத்தவர்களுக்கு இறந்த பின்பும் கூட இந்த விருதை வழங்கலாம். உதாரணத்துக்கு சர்தார் படேல், சட்டமேதை அம்பேத்கார், புரட்சி கவிஞர் பாரதி போன்றவர்கள் இந்த விருதுக்கு தகுதியானவர்கள். உருது கவிஞர் மிர்சா காலிப், பெங்காலி நாவலாசிரியர் சரத் சந்திரா போன்றவர்களுக்கு இந்த விருதை கோருவது கண்டிக்கத்தக்கது.
பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்ட சினிமாக் கலைஞர்கள், விளையாட்டுத் துறை சார்ந்தவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்க கோருவது உணர்ச்சி வயப்பட்ட நிலையிலானது. இது கேலிக்கூத்தானது. இந்தியக் கலாசாரம் இந்த அளவுக்கு சீரழிந்து வருவது வருத்தமளிக்கிறது.இவ்வாறு மார்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.
Today's news in Dinamlar about giving bharat ratna to sports persons and cinema actors. Whether Sachin Tendulkar deserves for Bharat Ratna?

Last edited: