• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சுந்தரகாண்டம்

பகுதி-26(கடைசி )


ஆஞ்சநேயர் மிக மிக வருத்தப்பட்டார். ஐயோ! கோபத்தின் காரணமாக தகாத காரியம் செய்துவிட்டேனே! இலங்கைக்கு தீ வைக்க வேண்டும் என்றுஎண்ணிய என் வானர புத்திக்கு, சீதாதேவியும் இங்கே தான் இருக்கிறாள் என்று தெரியாமல் போய்விட்டதே! பல இடங்களில் பற்றிய தீ அசோகவனத்திலும் பற்றி, சீதாதேவியை அழித்திருந்தால் நிலைமை என்னாகும்? ஸ்ரீராமபிரானிடம் என்ன பதில் சொல்வேன்? அது மட்டுமல்ல! ஒரு உத்தம பத்தினியைக் கொன்ற தீராத பாவத்துக்கு ஆளாவேனே! ஒருவனுடைய உள்ளத்தில் கோபத்திற்கு மட்டும் இடம் கொடுத்து விட்டால், அவன் எத்தகைய பாவம் செய்யவும் அஞ்சமாட்டான், ஏன்...அவன் கற்றுத் தந்த ஆசிரியரையே கூடகொன்று விடுவான். கோபம் ஒருவனுடைய மனதில் எழுந்தால், நெருப்பை தண்ணீரால் அணைப்பது போல அப்படியே விட்டு விட வேண்டும். கோபக்காரன் துறவிகளையும், முனிவர்களையும், பெரியோர்களையும் உபத்திரவம் செய்ய தயங்கமாட்டான்.பாம்பு சட்டையைஉரிப்பது போல, கோபக்காரன் கோபத்தை புத்தியால் அடக்க வேண்டும். நான் கொடிய பாவி, என்புத்தியை தீயால் சுட வேண்டும், ஒருவேளை சீதாதேவிக்கு ஏதேனும் ஆபத்துஏற்பட்டிருக்குமானால், நானும் இந்த அக்னியில் விழுந்து இறப்பேன். கோபக்காரனான என்னை அது குரங்கு தானே! அதற்கென்ன புத்தியிருக்கும் என்று பலரும் என்னைப்பழிப்பதற்கு முன் மரணத்தை ஏற்பேன், என புலம்பினார். பார்த்தீர்களா!ஒரு நிமிட கோபம் பிறரை மட்டுமின்றி, தன்னையே அழித்து விடும்தன்மையுடையது. கோபம் காரணமாக பெற்றவர்களை பிரிந்திருக்கும் பிள்ளைகள், பிள்ளைகளைப் பிரிந்திருக்கும் பெற்றோர், வாழ்க்கைத் துணையைப் பிரிந்திருப்பவர்கள் எல்லாம்இதைப் படித்த பிறகாவது, அந்தக் கோபத்தால் இதுவரை தங்களுக்கு என்ன பலன் கிடைத்துள்ளது என்பதைச் சிந்தித்துப் பார்த்து சேர்ந்து கொள்ளவேண்டும். இதனால் தான் சுந்தரகாண்டம் ஆயுள் முழுவதும் படிக்க வேண்டியஅருமருந்தாக திகழ்கிறது. ஆனால், மாருதி நினைத்தது போல்ஏதும் நடக்கவில்லை.இலங்கையில் நெருப்பில் அகப்பட்டு இறக்கும் நிலையில் முனகிய ராட்சஷர்களில் சிலர், நாம் அழிகிறோம், ஆனால், ராமனின் துணைவியான அந்த சீதாவை மட்டும் இந்த நெருப்பு ஏதும் செய்யவில்லையே, என்று சொல்லி உயிர்விட்டார்கள். இதைக் கேட்ட ஆஞ்சநேயருக்கு போன உயிர் திரும்பியது போல் இருந்தது. சீதாதேவி தன் மகிமையால் பிழைத்தாள் என்று எண்ணியவராய், பாக்கியிருந்த அசுரர் வீடுகளையும் அழித்தார். பின்னர்சீதாதேவியை சந்தித்தார்.மாருதி!நீயே இங்கிருக்கும் மிச்சம் மீதி ராட்சஷர்களையும்...ஏன், ராவணனையே அழித்து என்னை மீட்டுச் சென்று விடுவாய் என்பதை பரிபூரணமாக நம்புகிறேன்.நீ மகாதீரன். ஆனால், என் பர்த்தாவே என்னை மீட்டுச் செல்லவேண்டும். அதுவே அவரது புகழுக்கும், ராவணன் செய்த தீங்கிற்கு பதிலடி கொடுப்பதாகவும் அமையும், என்றாள். அவளைப் பணிந்து வணங்கிய மாருதி, அரிஷ்டம் என்று பெயர் கொண்ட மலையில் ஏறி கிஷ்கிந்தை கிளம்பினார். அந்த மலையை அவர் அழுத்திய வேகத்தில் பூமிக்குள் புதைந்து போனது. பின்னர் மின்னல் வேகத்தில் பறந்து கடலின் அடுத்த கரையை அடைந்தார். அவர் வரும் வேகத்தைப் பார்த்தவுடனேயே, ஜெயத்துடன் திரும்பி வருகிறார் என்பதை வானர வீரர்கள் புரிந்து கொண்டனர். அவர்
#வந்து-இறங்கியதும், அவருக்கு #கிழங்கு, #பழங்களை
#சாப்பிடக் கொடுத்தார்கள்.அவசர வேலையாக சென்றிருக்கும் நம் குடும்ப உறுப்பினர் ஒருவர் வீட்டுக்குள் நுழைகிறார். அவர் #மகிழ்ச்சியான சூழலில் #வந்தாலும் கூட, அவரிடம் உடனே என்ன நடந்தது என்று கேட்கக்கூடாது. வந்தவருக்கு ஒருடம்ளர் தண்ணீராவது கொடுக்க வேண்டும். அவர் #ஆசுவாசமானவுடன்
#பேசஆரம்பிக்க வேண்டும். அதே போலவீட்டுக்குள் நுழைபவரும் அவசர அவசரமாக பேச்சைத் துவங்கக்கூடாது. தன்னை #ஆசுவாசப்படுத்திக் கொண்டு #பேச ஆரம்பிக்க வேண்டும். மகிழ்ச்சியான சந்தர்ப்பத்திலும் கூட #நிதானம் இழக்காமல் இருப்பது நமது #உடல்நிலைக்கு-நல்லது என்பதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. பின்னர் மாருதி, தான் சென்று வந்த விபரத்தை வானர வீரர்களிடம் சொன்னார். அவர்கள் மகிழ்ச்சியுடன், அங்கதனின் அனுமதியுடன் சுக்ரீவனுக்குச் சொந்தமான மதுவனத்தில் தேன் குடித்து மகிழ்ந்தனர். இருப்பினும், சுக்ரீவனின் அனுமதியின்றி யாரும் அங்கு செல்லக்கூடாது என்பதால், வனத்தின் பாதுகாவலனான ததிமுகன் சுக்ரீவனிடம் சென்று முறையிட்டான். அவனது சொல்லில் இருந்தே, #மாருதி சென்ற காரியம் #ஜெயமாயிற்று என்பதை சுக்ரீவன் புரிந்து கொண்டான்.பின்னர், வானரர்களும் வந்து சேர்ந்தனர். மாருதி அடைந்த வெற்றியின் காரணமாக, அனுமதியின்றி மதுவனத்தை அழித்து தேன்குடித்த வானரர்களை சுக்ரீவன் மன்னித்து விட்டான். அவர்கள் செய்த வேலைக்கு என்ன கூலி கொடுத்தாலும் தகும் என்பதேஅவனது இந்த பெருந்தன்மைக்கு காரணம். பின்னர் மாருதி, சீதையைக் கண்டு வந்த வரலாற்றை #ராமனைநமஸ்கரித்து சொல்ல ஆரம்பித்தார்.#கண்டனென் #கற்பினுக்கு #அணியை #என் #கண்களால-்என்றார். சொல்லின் செல்வர் அல்லவா? சீதையைப் பார்த்தேன் என்று சொல்ல ஆரம்பித்தால், சீதையை என்றவுடனேயே பார்க்கவில்லை என்று அடுத்த வார்த்தை வந்துவிடுமோ என்ற பயத்தில், ராமனுக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது? அதனால் பார்த்தேன் சீதையை என பவ்யமாக உரைத்தார். அங்கு நடந்த எல்லா விபரங்களையும், சீதாபிராட்டி அசுரர்களிடம் படும் வேதனையையும் விவரித்து, அவள் தந்த #சூடாமணியை வணக்கத்துடன் #சமர்ப்பித்தார். அதைப் பார்த்து ராமன் அடைந்த துக்கத்திற்கு அளவேயில்லை.லட்சுமணா! இந்த ஆபரணத்தை என் சீதையின் சிரசில் பார்த்துள்ளேன். ஆனால், இப்போது தனியாகப் பார்க்கிறேன், என்று சொல்லி வருந்தினார். ஏன் லட்சுமணன் இதைப் பார்த்திருக்க மாட்டானா என்றால், #பார்த்ததே-இல்லை. அவனுக்கு அண்ணியின் முகம் இப்போது வரை தெரியாது. அவளது #திருவடி மட்டுமே அவனுக்குத் #தெரியும். தமையன் மனைவியை ஏறெடுத்தும் பார்க்காத #உத்தமசீலனாக அவன் விளங்கினான்.பின்னர், ஸ்ரீராமா! நான் ஜனகபுத்திரியிடம் நீங்கள் உடனடியாக வந்து மீட்டுச் செல்வீர்கள் என தைரியமூட்டி, ஜீவனை விட இருந்த அவர்களுக்கு நம்பிக்கையூட்டினேன். தாங்கள் இட்ட கட்டளையை என்னால் முடிந்தளவுக்கு சிறப்பாகச் செய்தேன், என #அடக்கத்துடன் சொன்னார். நிஜ வீரன் ஆர்ப்பரிப்பதில்லை அல்லவா? ஆஞ்சநேயரின் இந்த இலங்கைப் பயணம் பல பாடங்களை நமக்கு தந்திருக்கிறது. யார் ஒருவருக்கு உயிர்க்கண்டம் இருக்கிறதோ, அவர்களுக்கு #நம்பிக்கையூட்டும் #வார்த்தைகளைச் சொல்ல வேண்டும் என்பதை உணர்த்தியிருக்கிறது. நாமும், பிறர் நலம் கருதி வாழ்ந்து ஆஞ்சநேயரின் #திருவருள் பெறுவோம்.
 

Latest ads

Back
Top